Happy to inform you all that our website, https://t.co/65NCGwkOH9, has been upgraded, with new features.
Do explore the new features, stay connected, and make the most of it.
மாறுவோம், மாற்றுவோம்!
இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுவுக்கும், போதைப்பொருள்களுக்கும் எதிராக, கடந்த மே 11 முதல் நேற்று ஆகஸ்ட் 12 வரை, 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டத்தை மேற்கொண்ட, சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதியும், கல்வியாளருமாகிய, ஐயா டாக்டர் திரு. சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கிற்காக, போராட்டம், பிரச்சாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை என பல்வேறு அகிம்சை வழிகளில் குரல் கொடுத்து வருகிறார். சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு, மக்களிடையே மதுவிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
திருக்குறளின் 1330 குறள்களைப் போலவே, 1330 நாட்கள் தினமும் 1½ மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருள்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். தமது 95 வயதிலும், மது உள்ளிட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான அவரது மன உறுதி, இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம்.
ஒரு மனிதர் தனது வாழ்நாளையே சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணித்திருப்பது மிகப்பெரிய தியாகம். ஐயா டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி அவர்களின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்கி, அவரது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த மேலான சமூகப் பணிகளுக்கு, எங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Honoured to have had the opportunity to launch the book ‘Operation Sindoor-The Untold Story’ written by Indian Army veteran and Geopolitical analyst Thiru @major_madhan avl, alongside other eminent guests today in Coimbatore.
Heartfelt appreciation to Thiru Major Madan avl for his exemplary work, both during his service as a dedicated army officer and now as a compelling author. His continuous and passionate efforts in sensitising the Indian youth about the ethos, sacrifices, and immense contributions of the Indian Army are deeply inspiring and essential for building a strong, nationalistic character in our next generation.
Hearty congratulations to Thiru Praveen Chitravel avl and Thiru Selva Prabhu Thirumaran avl on their stellar performance at the Commonwealth Games 2026, winning Silver and Bronze in the Triple Jump.
It makes every Indian, and especially all of us in Tamil Nadu, immensely proud to see two of our very own shine on the world stage. Their dedication, hard work, and relentless spirit inspire our youth. Wishing both of our champions even greater success ahead.
இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், @WTLFoundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத்தை, கடற்கரை தூய்மைப் பணி நிகழ்வுடன் தொடங்கி வைத்தோம். ஏராளமான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தங்கள் குடும்பங்களுடன் உற்சாகமாக இணைந்தது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. மாற்றத்தின் முன்னோடிகளாக இன்றைய இளைஞர்கள் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
இயற்கை நமக்குக் கிடைத்த செல்வம் அல்ல; வருங்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் பொறுப்பு. கடலைக் காப்பதும், நிலத்தைக் காப்பதும், மரங்களை வளர்ப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.
இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளில் அனைவரும் இணைவோம். சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முழுமையாக வளர்க்க உறுதியேற்போம். நம் இயற்கையைப் பாதுகாப்போம்; நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம். (1/2)