Textile Design Engineer,Football & Cricket Analyst,From DRAVIDIAN Stock,Lifetime Fan of MAN UTD, ‘Thala’ MS Dhoni,TAMILNADU CM ‘Thalapathy’MK STALIN,Udhayanna
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுர�� மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்��ில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரி��ித்துக் கொள்கிறேன்.
அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கான பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனைக் கூட்டம், அகர்வால் திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி.
2026-ல் சரித்திர வெற்றியை தலைவர் அவர்களுக்குப் பரிசளிப்போம்!
சாதி, மத பேதமற்ற மனிதநேயத் தொண்டு நிறைந்த வாழ்வை வாழ்ந்து, தமது 84-வது வயதில் இயற்கை எய்திய வி. சேஷன் அவர்களின் தாயார் திருமதி வசந்தா வேணுகோபாலன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
கழக தேர்தல் பணிச் செயலாளரும், சென்னை மண்டல இணையதள அணி ஒருங்கிணைப்பாளருமான சகோதரர் வி. சேஷன் அவர்களின் தாயார் திருமதி வசந்தா வேணுகோபாலன் அவர்கள் கடந்த 05.06.2025 அன்று தனது 84-வது வயதில் இயற்கையை எய்தினார். இன்று (19.06.2025) அவரது இல்லம் சென்று அன்னையின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் ஆறுதல் தெரிவித்தேன்.
அப்போது உரையாடிக் கொண்டிருக்கையில், அன்னை வசந்தா வேணுகோபாலன் அவர்களின் சாதி, மத பேதமற்ற மனிதநேயத் தொண்டு பற்றி அறிந்து கொண்டேன்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளித்து வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கடைசி வரை தன் வீட்டிற்கு வரும் மக்களுக்கு “இல்லை” என்று சொல்லாமல் உதவி செய்து வந்திருக்கிறார். அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டது இதற்குச் சாட்சியாகும்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் வந்தால் அவர்களை மதித்து அவர்களுடன் உறவாடுவது, தங்கள் நிறுவன ஊழியர்கள் வந்தால் அவர்களுக்கு அளவில்லாமல் கொடுப்பது, ஒவ்வொரு ஆண்டும் கோடை நாட்களில் தன் இல்லத்தில் மோர் வழங்குவது, எல்லா நாளும் இல்ல வாசலில் தண்ணீர்ப் பந்தல் அமைத்திருப்பது போன்ற எண்ணற்ற மனிதநேயத் தொண்டுகளுக்கு உரியவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
அப்போதுதான் சேஷன் அவர்களிடம் கேட்டேன், “இப்படிப்பட்ட தொண்டுள்ளம் கொண்ட தாயாரை முன்பே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டாமா?” என்று. அத்தகைய தொண்டுள்ளம் படைத்த தாயாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், அவரின் மக்கள் தொண்டை நெஞ்சில் ஏந்தி, அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து புறப்பட்டேன்.
தென்சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் சைதை பா. சுப்பிரமணி எம்சி, ���ாஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ஜி. கருணாகரன், மாநில மகளிர் அணிச் செயலாளர் மல்லிகா தயாளன், மற்றும் மாவட்ட, பகுதி கழக நிர்வாகிகள், தோழ��்கள் உடனிருந்தனர்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
19.06.2025
இன்று பிறந்தநாள் காணும் திரு.ராகுல் காந்தி @RahulGandhi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
சனாதன ராஷ்டிராவை அமைக்கும் நோக்கில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைச் சிதைக்கும் சாதிய - மதவாத சங்பரிவார் சக்திகளை வீழ்த்தும் அறப்போரில் தாங்கள் வெற���றிவாகை பெற வாழ்த்துக���றோம். அந்தக் களத்தில் சிறுத்தைகள் என்றென்றும் துணை நிற்போம்!
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக
அதிசயமே அசந்து போகும் அதிசயம் நம் #கலைஞர் !!!
நவீனத் தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பியான #முத்தமிழறிஞர் தலைவர் #கலைஞர் அவர்களின் அசத்தலான படைப்புகளில் ஒன்று #சென்னை#கத்திப்பாரா "Clover Leaf" ம���ம்பாலம். (சில நேரங்களில் இது பட்டர்பிளை மேம்பாலம் என அழைக்கபடுகிறது)
கழகத்தின் பொருளாளர் எனது தந்தை 2004 ஆம் ஆண்டு தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற உடன் கலைஞர் இட்ட கட்டளைக்கிணங்க அன்று பார்ப்பவர்களையும் பயணிப்பவர்களையும் அதிசயிக்க வைத்து இன்றும் அதே பொலிவுடன் கம்பீரமாக நிற்கும் கத்திபாரா மேம்பாலத்தின் மேல் இன்று நவீன கரிகாலன் நமது #திராவிட_மாடல் ப���ரரசன் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆட்சியின் மெட்ரோ ரயில் பாலம் அமைக்க���்பட்டு வருகிறது♥️
கத்திப்பாரா மேம்பாலம் கட்டுமான பணிகளை தொடர்ந்து கூர்ந்து கண்காணித்து வந்தார் கலைஞர் ♥️ அவரின் மேற்பார்வையில் பிரம்மாண்டமாக அமைந்து மிகப்பெரிய போக்குவரத்து நெரிசலை சீர் செய்தது இந்த மேம்பாலம்.
கலைஞர் கட்டிக் காத்த கழகத்தை மேலும் மேம்படுத்தியது போல கலைஞர் கட்டமைத்த கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேலேயும் சென்னைக்கான போக்குவரத்து வளர்ச்சி திட்டத்தை உய���்த்தி உருவாக்கி வருகிறார் #திராவிட_நாயகன் நமது மாண்புமிகு முதலமைச்சர்.
அண்ணாந்து பார்த்தால் கார், பஸ், மெட்ரோ ரயில், விமானம் ஆகியவை ஒரே நேர்கோட்டில் தெரியும் அதிசயத்தை விரைவில் காணலாம்♥️