மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் இன்று (22.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வன்னி அரசு அவர்களுக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
#CMJosephVijay
A new political image is taking shape in Tamil Nadu.
Rajmohan, a leader from the Dalit community and former social-awareness creator, has been appointed Education Minister in CM Vijay’s new cabinet.
For many, this moment is about more than politics - it’s about representation inside institutions that shape the future.
Tamil Nadu’s new cabinet portfolios were announced this week as Vijay officially began his tenure as Chief Minister.
#TamilNadu #VijayTNCM #jaibim
Many videos are being shared on social media showing liquor shops being overcharged by Rs 10. Immediately issue a circular and instruct TASMAC employees. Ask them to give you a receipt for the sale of alcohol. @AadhavArjuna@CMOTamilnadu@TVKHQITWingOffl
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்.
@TVKVijayHQ@Udhaystalin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குதல், பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை
1/2
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மானாமதுரை ஆகாஷ்!
இப்ப உயிரோட இல்லை !
ஏன் ?
ரெண்டு விஷயம் சொல்லப்படுது!
1 போலீஸ் அடிச்சுட்டு கொன்னுட்டாங்க (ஆகாஷ் தரப்பு )
2. பிடிக்கும் போது தப்பிக்க பாலத்தில் இருந்து குதிச்சான் கால் முறிஞ்சுட்டு,ஆஸ்பத்திரில உயிர் போயிடுச்சி(போலீஸ் தரப்பு )
தற்பொழுது சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள் -விசாரணை போய்கிட்டு இருக்கு!
ஆகாஷ் சாதிகாரர்கள் -இது சாதிய கொலை ,பட்டியல் சாதி இளைஞர் மீது போலீஸார் நடத்திய சாதிய தாக்குதல் என்று மூணு நாளாய் போராட்டம் செய்தார்கள்!/
நீலம்-கதிர் -ஷாலினி போன்ற சுயசாதி பிரியர்கள் எல்லாம் பொங்கிகிட்டு இருக்காங்க!
மேலும் சிலர் நேர்மையாக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்!
சரி ஆகாஷ்சை எதுக்கு போலீஸ் கைது பண்ண பார்த்தார்கள்?
முதல் நாள் இரவு ரெண்டு பேரை ரோட்டில் ஓடவிட்டு நண்பனோடு சேர்ந்து வெட்டி இருக்கான் அது சம்பந்தமாக தான் போலீஸ் பிடிச்சு இருக்கு!
ஆதாரம்?
CCTV காணொளி எல்லா ஊடகத்திலும் இருக்கு!
ஆம்
அவன் ஒரு ஏரியா ரவுடி -இதில் எந்த சாதியையும் கிடையாது -என்ன ஆகாஷ் வெட்டிய ரெண்டு பேரில் ஒருவர் அழகர் -அவரும் பட்டியல் சாதி தான்!
ஒரு வேலை ஆகாஷ் வெட்டிய ரெண்டு பெரும் செத்து இருந்தா -சட்டம் ஒழுங்கு என்று பேசு இருப்பார்கள்!
வெட்டியவனை விரட்டி பிடித்ததற்கு பிறகு - என்கவுண்டர் செய்திருந்தால் அதும் சர்ச்சை!
இப்ப கஸ்டடி ல செத்துட்டான் அதான் பிரச்னை!
சரி , ஆகாஷால் வெட்டப்பட்ட அழகரை பார்க்க கூட எவனும் எந்த பட்டியல் இன போராளியும் போகவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை!
சாதி கொடூரமானது!
விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி ஒருத்தி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சை உலுக்கச் செய்கிறது.
ஒரு மனிதன் இவ்வளவு கொடூரமான நிலைக்குச் செல்லத் துணிந்திருக்கிறான் என்றால், அவனுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ எள்ளளவும் பயம் இல்லை என்பதே நிதர்சனம்.
தமிழகத்தின் அமைதிப் பூங்கா இன்று ரத்தக் காடாக மாறிக் கொண்டிருப்பதை இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதேபோல், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப்பகுதியில் தவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார்.
ஒரு சிறுமி பாதுகாப்பு கோரி இவ்வளவு தூரம் நடந்து வர வேண்டிய நிலையில் தான் தமிழகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு இருக்கிறதா? ரோந்துப் பணிகளும், காவல்துறை கண்காணிப்பும் காகித அளவில் மட்டுமே இருப்பது இந்த அவல நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
தமிழகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் பெருகிக் கிடக்கும் போதைப் பொருட்களின் புழக்கமே இத்தகைய பாலியல் வெறிக்கும், கொலைக் குற்றங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது.
"திராவிட மாடல்" என்று வெற்று முழக்கமிடும் இந்த அரசு, போதைப் பொருள் மாஃபியாக்களை ஒடுக்கத் தவறிவிட்டது. போதை ஆசாமிகளின் வேட்டைக்காடாகத் தமிழகம் மாறி வருவதால், இன்று பிஞ்சுயிர்கள் காவு கொடுக்கப்படுகின்றன.
குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக இந்த அரசு செயல்படுகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய திமுக அரசு முழு தோல்வி அடைந்துவிட்டது.