டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய கல்விச் சூழலில், காகிதமும் பேனாவுமின்றி வெறும் மணலையும் குச்சியையும் மட்டுமே கொண்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வரும் கேரளாவைச் சேர்ந்த 85 வயது பாட்டி இணையவாசிகளின் இதயங்களை வென்று வருகிறார்.
#AshaattiAmmumma#IndiraAmma#ViralWatch#OneindiaTamil
எனக்கு தெரிந்து ரஜினியின் ஹீரோ பிம்பத்தை, ரஜினியின் நகைச்சுவை நடிப்பை மிக சரியாக பயன்படுத்திய ஒரே இயக்குனர் நெல்சன் தான். தியேட்டரில் மக்கள் குடும்பமாக இப்படி ஒரு படத்தை சிரித்து ரசித்து நான் பார்த்ததில்லை. நேற்று எனக்கு பக்கத்தில் கணவன் மனைவி காலேஜ் படிக்கும் ஒரு இளைஞர் மற்றும் ஸ்கூல் படிக்கும் பையன் என்று குடும்பமாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ரஜினியின் ஒவ்வொரு மாஸ் சீன் வரும் போதும் அப்பாக்காரர் உச்ச தொனியில் கத்துகிறார். அருகில் இருக்கும் மனைவிக்கு சிரிப்பு தாங்கவில்லை. சும்மா இருங்க சும்மா இருங்க என்று அவரை பிடித்து அமுக்கிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அந்தப்பக்கம் ரெண்டு பசங்களும் சீட்டுக்கும் சீலிங்கிற்கும் குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப்பக்கம் என்னுடைய பையன் சீட்டில் குதித்து குதித்து சிரிக்கிறான். வீட்டம்மா மெய் மறந்து சத்தம் போட்டு சிரித்து ரசித்துக் கொண்டு இருக்கிறார். இண்டர்வெல்லுக்கு வெளியே போனால் அங்கே 3 வயதான தாத்தாக்கள் ஏதோ ஒரு சீனை பற்றி பேசி சிலிர்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்போ தான் அந்த பாட்டு மண்டைக்குள்ள ஓடுச்சு..
ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார்.
இளையராஜா என்கின்ற இமயத்திற்கு முன்னால் தேவா வந்ததும் வாழ்ந்ததும் நின்றதும் நிமிர்ந்ததும் உண்மையிலேயே சாதனைதான்.
மகாபிரபு என்ற திரைப்படத்தில் "சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை.." என்ற ஒரு பாடல் உண்டு. நீண்ட காலம் அந்தப் பாடலை நான் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அது தேவா என்று கேள்விப்பட்டபோது ஆச்சரியப்பட்டேன். இதுபோன்று பல பாடல்களுக்கு நிகழ்ந்திருக்கின்றன. அதை தேவாவே சொல்லி ஒரு முறை வருத்தப்பட்ட பேட்டியையும் நான் பார்த்திருக்கிறேன்.
தஞ்சை மாவட்ட நாட்டுப்புற செவ்வியல் இசைக்கும் மதுரை மாவட்ட நாட்டுப்புற செவ்வியல் இசைக்கும் நிறைய பொருத்தப் பாடுகள் உண்டு. ஆனால் சென்னையின் நாட்டுப்புற செவ்வியல் இசையான கானா பாடல்கள் இதற்கு அப்படியே நேர் எதிரானவை. எங்களுடைய நாட்டுப்புறப் பாடல்கள் அனைத்தும் வயல் சார்ந்ததும் மண் சார்ந்ததுமாக இருந்தன. ஆனால் 'கானா' பாடல்கள் மக்களின் துயரையும் மகிழ்ச்சியையும் பேசின. அந்த இடத்தில் தான் நாங்கள் எல்லாம் இசைஞானியோடு நெருங்கியதும் தேவாவோடு விலகியதுமாக இருந்தோம். ஆனால் ஏ ஆர் ரகுமான், தேவா போன்றவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய மேதைகள் என்பதை இக்காலத்தில் இசையமைக்கின்ற இசையமைப்பாளர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
உச்சகட்டத்தில் இளையராஜா இருந்தபோது துளிர்த்தவர் தேவா. அவரது "வைகாசி பொறந்தாச்சு" பட்டி தொட்டி எல்லாம் பாடல்களாக ஒலித்த போது கூட அவரை நாங்கள் இளையராஜாவிற்கு போட்டியாக நினைத்ததில்லை. அவரும் அவ்வாறு அறிவித்துக் கொண்டதுமில்லை. இளையராஜா இசையமைக்காத திரைப்படங்களில் தேவா இசையமைப்பார் அவ்வளவுதான்.
ஆனாலும் தேவா, இசை மூச்சு இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மத்தியில் தேனிசைத் தென்றலாய் வீசிக் கொண்டுதான் இருந்தார். பிரபலமான ஆங்கில பாடல்களை தழுவி தமிழில் கொண்டு வந்த போது அவை அவ்வளவாக உறுத்தாமல் கேட்பதற்கு இனிமையாக இருந்ததற்கு காரணம் தேவாவின் மேதைமை.
ரஜினியின் முகப்பு இசையை உருவாக்க ஜேம்ஸ் பாண்ட் இசையை அவர் பயன்படுத்திக்கொண்ட விதம் அலாதியானது. அதே சமயத்தில் "மனம் விரும்புதே உன்னை.." என்றெல்லாம் மெலடி போட்டு அசத்துவார்.
90களில் பிறந்தவர்களுக்கு தேவா மிக நெருக்கமானவர். ஏனெனில் இளையராஜா இல்லாமல் அன்று கேட்க முடிகிற ஒரே ஒரு இசையமைப்பாளர் தேவா மட்டுமே. இளையராஜாவின் பாடல்களில் இருக்கின்ற Excellence க்கு மாற்றாக எளிய இசை வடிவங்களுக்கு சொந்தக்காரராக தேவா திகழ்ந்தது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
என் தம்பி வழக்கறிஞர் மோ.ஆனந்த் தேவாவின் ரசிகன். பயணங்களின் போது தேவாவை துணைக்கு அழைத்துக் கொண்டுதான் அவன் புறப்படுவான். நானும் இசைஞானியின் வெறியன். இருவருக்குமான அந்த இசை முரண்பாடே அந்தப் பயணத்தை இசைமயமாக்கிவிடும். உண்மையில் இந்த இரவில் நான் என் தம்பிக்கு தான் ஆறுதல் சொல்ல வேண்டும். அதற்கும் அவன் தேவா பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருப்பான். அவனைப் போல எண்ணற்றவர்களுக்கு தேவா தான் தேவராகம்.
'கோகுலத்தில் சீதை' திரைப்படத்தின் பிஜிஎம் தேவாவின் பின்னணி இசையில் மிக முக்கியமான ஒரு திரைப்படம். 'காதல் கோட்டை' திரைப்படத்தின் டைட்டில் பாடலான "காலமெல்லாம் காதல் வாழ்க" என்ற பாடலை திரையில் பார்க்கும்போது அவ்வளவு இனிமையாக இருக்கும்.
எளிய மக்களின் இசை உணர்வுக்கு ஒத்திசைவு பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த தேவா உண்மையில் எங்கள் காலத்தின் அற்புதங்களில் ஒன்று.
அதை இளையராஜாவின் ரசிகன் என்கிற முறையில் ஒத்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
தேனிசைத் தென்றல் தேவாவிற்கு கண்ணீர் வணக்கம்.!
🥹
மணி செந்தில்.
@ungaldevaoffl
பாட்ஷா வெற்றிக்கு 50% தான் நாங்க காரணம். மீதி 50% முழுக்க முழுக்க தேவாவின் மியூசிக் தான் காரணம்
💯உண்மையான வார்த்தைகள் . #Deva இல்லைன்னா பாட்ஷா இல்ல.
90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தேவா சார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏
ஆறு வயதிலேயே உலக சாதனை... ரூபிக்ஸ் கியூப்பில் அசத்திய சிறுமி
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி லியான் யுன்ஷி, ரூபிக்ஸ் கியூப் போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
பெண்களுக்கான ரூபிக்ஸ் கியூப் சராசரி நேரத்தை முதலில் 4.52 விநாடிகளாகப் பதிவு செய்து சாதனை படைத்தார்.
ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு தனது சாதனையை அவரே முறியடித்தார். இந்த முறை, சராசரியாக 4.27 விநாடிகளில் ரூபிக்ஸ் கியூப்பைத் தீர்த்தார்.
இதன்மூலம், சராசரி நேரம் 4.5 விநாடிகளுக்குக் குறைவாகப் பதிவுசெய்த முதல் பெண் ரூபிக்ஸ் கியூப் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
சீன ஊடகங்களின்படி, கடந்த ஓராண்டாக தினமும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் பயிற்சி செய்து வருகிறார் இந்த ஆறு வயது சிறுமி.
நைட் 2 மணிக்கு... முழிச்சு தூக்கம் வராம... 😵💫
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் YouTubeல் பகிர்ந்த ஒரு உண்மைச் சம்பவம்.
ஒரு நாட்டில் பயங்கரமான கொடுங்கோல் ஆட்சி. அந்த ஆட்சிக்கு எதிராக ஒரு குரூப் வேலை பார்த்துக் கொண்டிருந்தது. அந்தக் குரூப்பில் இருந்த சிலரை ஆட்சியாளர்கள் பிடித்து, சித்திரவதை செய்து கொன்று விட்டார்கள்.
இதைக் கேள்விப்பட்ட நம்ம கதாநாயகனுக்கு ஒரே பயம். அவரும் அந்த குரூப்பின் supporter. அதனால் “அடுத்தது நான்தான்!” என்று அவர் மனதில்.
உடனே மனைவியைக் கூப்பிட்டார். “இங்க பாரு... என்னையும் பிடிச்சுட்டுப் போய் கொல்ல வாய்ப்பு இருக்கு. அதனால நான் தலைமறைவாகப் போறேன்!”
மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. “உங்களை யாராவது தேடுறாங்களா?” “அதெல்லாம் தேட ஆரம்பிச்ச பிறகு யோசிக்கக் கூடாது. வருமுன் காப்பதே புத்திசாலித்தனம்!” என்று சொல்லிவிட்டு, வீட்டின் ஹாலில் இருந்த டைனிங் டேபிளுக்குக் கீழே ரகசிய மாடிப்படி அமைத்து, கீழே ஒரு பாதாள அறையையும் தயார் செய்தார்.
10 × 15 அறை. ஒரே ஒரு கழிப்பறை. காற்று? அது எப்போதாவது மனசு வைத்தால் வரும். சூரிய வெளிச்சம்? சான்ஸே இல்லை.
மனைவியிடம் கடைசி Instruction: “யாராவது என்னைக் கேட்டா, ‘ஆட்சியாளர்களுக்குப் பயந்து எங்கேயோ ஓடிட்டாரு’ன்னு சொல்லு!” என்று சொல்லிவிட்டு... பாதாள அறைக்குள் இறங்கிவிட்டார்.
ஒரு நாள்... ஒரு வாரம்... ஒரு மாதம்... ஆறு மாதம்... ஒரு வருடம்... இரண்டு வருடம்!
மனைவி யாருக்கும் தெரியாமல் சாப்பாடு கொடுக்கிறார். நம்ம ஆள் கீழே உட்கார்ந்து... “இன்னைக்கு யாராவது என்னைக் கேட்டாங்களா?” “இல்லை.” “போலீஸ் வந்தாங்களா?” “இல்லை.” “என் போட்டோ ஏதாவது ஒட்டியிருக்காங்களா?” “இல்லை.”
“ஹ்ம்ம்... ரொம்ப அமைதியா இருக்காங்களே... ஏதோ பெருசா Plan பண்றாங்க போல!”
இப்படியே இரண்டு வருடங்கள் போய்விட்டன. கடைசியில் ஆட்சி மாறியது. கொடுங்கோலன் போனான். வேறு ஆட்சி வந்தது. மனைவி சந்தோஷமாக கீழே வந்து, “என்னங்க... எல்லாம் முடிஞ்சிடுச்சு. ஆட்சியே மாறிடுச்சு. இனிமே வெளியே வாங்க!” என்றார்.
இரண்டு வருடம் கழித்து பாதாள அறையிலிருந்து நம்ம ஆள் மேலே வருகிறார். 60 கிலோ இருந்த மனிதர்... 38 கிலோ!
தாடி, மீசை, தலைமுடி எல்லாம் சேர்ந்து முகத்தில் தனி அரசாங்கமே நடத்திக் கொண்டிருந்தது. கண்ணாடியில் தன்னையே பார்த்து, “யார்ரா இவன்?” என்று அவரே ஒரு நிமிடம் பயந்திருக்க வாய்ப்பு உண்டு.
நேராக சலூனுக்குப் போனார். முடி வெட்டி, தாடி எடுத்து, முகத்தை ஒரு வழியாக மனித இனத்திற்குள் மீண்டும் கொண்டு வந்துவிட்டு வெளியே வருகிறார்.
அப்போது பழைய நண்பர்கள் சிலர் பார்க்கிறார்கள். “டேய்! நீயா இது?”
“ஆமாண்டா...”
“எங்கடா இரண்டு வருஷமா போன?”
நம்ம ஆள் கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறார்: “அந்த ஆட்சியாளர்கள் எதிர்ப்பாளர்களைப் பிடிச்சுக் கொன்னுட்டு இருந்தாங்களே... என்னையும் பிடிச்சுடுவாங்கன்னு பயந்து தலைமறைவா இருந்தேன்.”
நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “டேய்...”
“என்னடா?”
“நீ அந்த லிஸ்ட்லயே இல்லையே!”
“என்னது?”
“ஆமாண்டா... உன்னை யாருமே தேடலையே!”
“என் வீட்டைக் கண்காணிக்கலையா?”
“இல்ல!”
“என் பேராவது லிஸ்ட்ல இருந்துச்சா?”
“உன் பேரு மட்டுமில்லடா... உன்னைப் பற்றி அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமான்னே சந்தேகம்!”
அவ்வளவுதான். நம்ம ஆளுக்கு இரண்டு வருட பாதாள வாழ்க்கையும் ஒரே Second-ல் Flashback-ஆ ஓடியது. 60 கிலோ → 38 கிலோ.
சூரியனைப் பார்க்கவில்லை. நண்பர்களைப் பார்க்கவில்லை. வெளியே போகவில்லை. நிம்மதியாகத் தூங்கவில்லை. வாழ்க்கையின் இரண்டு வருடங்களை இழந்தார்.
எதற்காக? நடக்காத ஒரு விஷயத்தை, நடக்கலாமோ என்று மனதுக்குள் முடிவு செய்ததற்காக!
நம்மில் பலரும் இதே கதாநாயகன்தான். ஒரே ஒரு வித்தியாசம். அவருக்கு 10 × 15 பாதாள அறை. நமக்கு... 1 × 1 Overthinking Room — மூளைக்குள்ளேயே!
காலையில் ஒரு சின்ன பிரச்சனை வரும். அப்போ சாதாரணமாகத்தான் இருப்போம். “சரி... பார்த்துக்கலாம்.” மதியம்: “ஒருவேளை இப்படியாகுமோ?” மாலை: “அப்படி ஆனா என்ன பண்ணுறது?” ராத்திரி 10 மணி: “சரி விடு... நாளைக்கு பார்த்துக்கலாம்.”
மூளை: “சரி Boss!”
நாமும் தூங்கிவிடுவோம்.
அப்புறம்... நைட் 2:07 AM மூளை திடீரென்று Alarm இல்லாமலேயே எழுப்பும். “Boss...”
“என்னடா?” “ஒரு சின்ன Doubt...”
“காலையில பேசிக்கலாமேடா?”
“இல்ல Boss... இப்பவே முக்கியம்.”
“என்ன?”
“ஒருவேளை அது நடந்துட்டா?”
அவ்வளவுதான்! தூக்கம் காலி.
தலையணையைத் திருப்பிப் போடுவோம். இடது பக்கம் படுப்போம். வலது பக்கம் படுப்போம். போர்வையை இழுப்போம். போர்வையைத் தூக்கிப் போடுவோம்.
கடைசியில் Ceiling Fan-ஐப் பார்த்துக் கொண்டே... “அது மட்டும் நடந்துட்டா நம்ம வாழ்க்கை என்ன ஆகும்?” என்று ஆரம்பிப்போம்.
அடுத்த பத்து நிமிடத்தில் நம்ம மூளை ஒரு முழு திரைப்படமே எடுத்துவிடும். பிரச்சனை இன்னும் வரவே இல்லை. ஆனால் நாமோ... அது வந்து, பெரிதாகி, கைமீறிப் போய், எல்லாருக்கும் தெரிந்து, வாழ்க்கை நாசமாகி, அதற்குப் பிறகு நாம் என்ன செய்வது... என்பது வரை Climax, Part-2, OTT Rights எல்லாம் முடிவு பண்ணியிருப்போம்!
காலையில் எழுந்து பார்த்தால்...ஒன்றுமே நடந்திருக்காது. ஆனால் நம்ம முகம் மட்டும், “நேத்து ராத்திரி மூன்று உலகப் போர்களைத் தனியாகத் தடுத்து நிறுத்தினேன்” என்ற மாதிரி இருக்கும்.
பேய்க்கும் நோய்க்கும் ராத்திரிதான் கொண்டாட்டம் என்பார்கள். அந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்: OVERTHINKING!
அதற்கு மிகவும் பிடித்த நேரம்: நைட் 2 மணி.
மிகவும் பிடித்த கேள்வி: “ஒருவேளை...?”
மிகவும் பிடித்த வசனம்: “அது மட்டும் நடந்துட்டா?”
மிகவும் பிடிக்காத விஷயம்: நம்ம நிம்மதி! 😂
இன்னும் நடக்காத பிரச்சனைக்காக இன்று தூக்கத்தைத் தொலைக்கிறோம்.
வராத பிரச்சனைக்காக இன்று சந்தோஷத்தைத் தொலைக்கிறோம்.
நடக்காத ஒன்றை நினைத்துக் கவலைப்படுவதில் மனிதர்களுக்கு நிகர்...மனிதர்கள்தான்!
அதிலும் குறிப்பாக... நைட் 2 மணிக்கு முழிச்சிருக்கிற மனிதர்கள்!
பட்டிமன்றம் என்றாலே நம் நினைவில் தோன்றுவது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் முகம்தான். அவருக்கென்றே அமைந்த நகைச்சுவை கலந்த அறிவார்ந்த இயல்பான பேச்சு நடை தமிழ் மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டிமன்றங்களில் ஒலித்த அந்தக் குரல், அந்தத் தமிழ்க் கடல் ஓய்ந்துவிட்டது.
தமிழாக வாழ்ந்து மறைந்த ஐயா அவர்களின் தனித்துவமான அந்தக் குரல், அவருடைய புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஐயாவின் தமிழ் என்றும் வாழும்!
பட்டிமன்றம் என்றாலே அவர்தான். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒளிபரப்பாகும் இந்தச் சிறப்புப் பட்டிமன்றமே, அவர் பங்கேற்ற இறுதிப் பட்டிமன்றம்.
ஒரு சகாப்தத்தின் கடைசி மேடை.
#SunTV #SirappuPattimandram #SolomonPappaiah #SunDigital
என் அனுபவத்தில் சொல்கிறேன்.. உங்களுக்கு அறிவுரை சொல்லுறவன் எவனும் உதவி செய்ய முன் வரமாட்டான்..
எனக்கும் கடன் இருந்துச்சு கிட்டத்தட்ட 8 லட்சம்.. திருப்பூர் பனியன் கம்பெனில வேலை பார்த்தேன்.. அம்மாவுக்கு கேன்சர் நண்பர்கள் யாருமே உதவிக்கு வரல.. சொந்தக்காரன் சொல்லவே வேணாம்..
அந்த ஊரே வேணாமுன்னு சொந்த ஊருக்கு வந்தோம்.. சென்னைல 6 மாசம் ZOMATO டெலிவரி வேலை செஞ்சிட்டு இருந்தேன்.. ஒரு நாளைக்கு 15 மணிநேரம் ஓட்டினா 2000 கிடைக்கும்.. அத வெச்சு கொஞ்சம் கொஞ்சமா கடனை கட்டிட்டு வந்தேன்..
அப்பறம் ஒரு சீட்டு ஒண்ணு போட்டேன்.. 3 லட்சம் எடுத்து கடனை அடைச்சேன்.. சென்னைய விட்டுட்டு மதுரைக்கு வந்து அதே ZOMATO SWIGGY வேலை பார்த்தேன். தன் கையே தனக்குதவி என்பது போல எல்லா கடனையும் கட்டிட்டு கடைசி 1 லட்சம் இருக்கும் போது இந்த X பக்கத்துக்கு வந்தேன்... அப்பறமா சின்னதா தொழில் START பண்ணேன்.. மொத்த கடனையும் அடைச்சு இன்னைக்கு கடன் இல்லாம இருக்கேன்..
ஆனால் இதனால் நான் இழந்தது ஏராளம்..
முதலில் காதலி.... ஏகப்பட்ட நண்பர்கள்.. சொந்தங்கள்...
உடல் நிலை கோளாறு அதிகமா கவலைப்பட்டு கவலைப்பட்டு மன அழுத்தம் வந்து தூக்கம் வராம அவதிப்பட்டு கடைசில இப்போ ஒரு பக்கம் தலைவலி ( migrane ) பாதிக்கப்பட்டு சித்ரவதை அனுபவச்சிட்டு இருக்கேன்... இந்த படத்தில் இருப்பது என்ன தெரியுமா??
Migrane தலைவலிக்கு மாத்திரைகள்... வாழ்க்கை எல்லாத்துக்கும் எளிதா இருக்காது... உங்க பதிவை பார்த்ததும் எனக்கு என்னோட வாழ்க்கை பழைய நினைவுகள் வந்துடுச்சு... கடுமையா உழைங்க யாரையும் குறை சொல்லவும் வேண்டாம்.. கடனும் அடையும் உங்க வாழ்க்கை தரமும் உயரும்... கடவுள் உங்களுக்கு துணை நிற்பார் நன்றி 🙏🙏🙏
'மனித கணினி’ சகுந்தலா தேவி தனது திறமையால் பிபிசி செய்தியாளரை வியப்பில் ஆழ்த்திய நேர்காணல்
எண்கள் மற்றும் சிக்கலான கணக்கீடுகளைக் கையாள்வதில் சகுந்தலா தேவி வியக்கத்தக்க திறமைக் கொண்டிருந்தார். இதன் மூலம், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமாக இருந்தார். மனிதக் கணினி என்றும் அழைக்கப்பட்டார்.
பல்வேறு நேர்காணல்களில், தனது திறமைகளை 'ஒரு தெய்வீகப் பரிசு' என்றும், அவற்றை எப்போதும் 'மேம்படுத்திக்கொள்ள முயன்றதாகவும்' அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் பயணம் செய்து புகழ்பெற்ற ஒருவராக இருந்த சகுந்தலா தேவி, 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-அன்று தனது 83-வது வயதில் காலமானார்.
அவர் பிபிசி தொகுப்பாளர் டெனிஸ் டுஹியை வியப்பில் ஆழ்த்திய 1979-ஆம் ஆண்டு நேர்காணலின் ஒரு பகுதி இது.