திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
தென் தமிழகத்தின் வளர்ச்சி, முதலீடு, சுற்றுலா, தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த இந்த திட்டம் மிகவும் அவசியமானது என்ற கோரிக்கையை மீண்டும் மாநிலங்களவையில் எழுப்பினேன். Greenfield Airports Policy-ன் கீழ், ராமநாதபுரத்தில் முன்மொழியப்பட்ட இரண்டு பசுமை விமான நிலையங்களுக்கான முன்சாத்தியக்கூறு ஆய்வை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) நிறைவு செய்து, 2026 ஜனவரியிலேயே தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்றும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாநில அரசின் பொறுப்பில் உள்ளன என்றும் மத்திய அரசின் பதிலாக தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி - கன்னியாகுமரி - தென்காசி மாவட்ட மக்களின் வசதிக்காகவும் தென் தமிழகத்திற்கு மேம்பட்ட விமான இணைப்பு கிடைப்பதற்காகவும் எனது முயற்சியை தொடர்ந்து நான் முன்னெடுத்து செல்வேன்.
@AIADMKOfficial@EPSTamilNadu@PMOIndia@CMOTamilnadu
#மாநிலங்களவை #திருநெல்வேலி #கன்னியாகுமரி #தென்தமிழகம் #விமானநிலையம் #AIADMK #நாடாளுமன்றத்தில்_அதிமுக
குறுவை சாகுபடி என்றால் என்ன?
எந்தெந்த தேதியில் நீர் கிடைத்தால் எவ்வளவு மகசூல் கிடைக்கும்?
குறித்த காலத்திற்கு காவிரி நீர் கிடைக்காவிடில் எத்தனை ஏக்கர் விளைநிலங்கள் பட்டுப் போகும் என அநாயாசமாக எந்த குறிப்பும் இல்லாமல் நிதானத்துடனும் பக்குவத்துடனும் எடுத்துரைக்கிறார் எடப்பாடியார் @EPSTamilNadu
சென்னை போன்ற நகரப் பகுதிகளில் எந்த அரசியல் புரிதலும் இல்லாமல் மக்கள் இந்த பித்தலாட்ட கும்பலை தேர்ந்தெடுத்ததைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் வேளாண் குடி மக்களுக்கு என்ன தான் ஆனது?
எடப்பாடியாரைப் போலவே அர்த்தம் பொதிந்த உரை திருமதி @Sowmiyanbumani அவர்களுடைய மேகதாது அணை குறித்த உரை!
தமிழக சட்டபேரவையில் மக்கள் நலனுக்காக பேசவும் தலைவர்கள் உள்ளார்கள் என்பதே இப்போதைக்கான ஆறுதல்!
#TNBudget
திமுகவில், ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம் - செய்தி
பெருந்துறை & பவானி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது இம்மாவட்டம்.
மீண்டும் அதிமுகவில் தோப்பு என்ற செய்தி உறுதியாகிறதான்னு தெரில. பெருந்துறைல இடைத்தேர்தல் வேற வருகிறது. என்னவோ நடக்குது அங்கிட்டு.
இதே தான் புதுக்கோட்டை மற்றும் கரூர்லயும் நடக்கிறது. கிட்டத்தட்ட ஆக்டிவ்வா இல்லாமலிருந்த, கரூர் புதுக்கோட்டை மாவட்ட பழைய அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள், சும்மா ஜம்முனு ஆக்டிவ் ஆகி, களத்தில் பம்பரமாய்ச் சுழல்கிறார்கள்.
இடைத்தேர்தலே அறிவிக்கப்பட்டு விட்டதைப் போல வேலைகள் மும்முரமாக நடைபெறுகிறது. வேட்பாளர் தேர்வு வரை பொதுச் செயலாளரும் விவாதம் நடத்தியுமுள்ளார்.
துரோகிகளான, இரண்டு வி.பா-க்களும், வீழ்த்தப்படனும்ன்னு அந்தந்த மாவட்ட பழைய அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆக்ரோஷத்தோடு களத்தில் களமாடுகிறார்கள்.
இதுவரை கிடைத்த வெற்றி, அண்ணாதிமுகவினால் தான் கிடைத்ததேயன்றி, இந்த இரண்டு வெண்ணை வி.பா-க்களால் வரவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.
ஒவ்வொரு அண்ணாதிமுக தொண்டனும், இந்த இரண்டு துரோகிகளின் தோல்வி முகத்தைக் கண்டு ரசிக்க வேண்டும்.
பந்தயம் அடிச்சிடனும் ப்ரோ. 🔥🔥🔥
காவிரி தண்ணீர் திறக்கப்பட்ட தேதி
2025 ஆம் ஆண்டு : ஜூன் 12
2024 ஆம் ஆண்டு : ஜூலை 28
2023 ஆம் ஆண்டு : ஜூன் 12
2022 ஆம் ஆண்டு : மே 24
2021 ஆம் ஆண்டு: ஜூன் 12
ஆணையத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் திறக்க வேண்டிய நாள் ஜூன் 12. அதற்கு காலதாமதம் ஏற்படுத்த கூடாது அப்படி ஏற்பட்டா ஆணையம் உத்தரவிடம்.
இந்த ஆண்டு 2026- தாமதம் என்றவுடன் காவிரி மேலாண்மை வாரியத்தை அணுகாமல் நீதிமன்றத்தையும் அனுகாமல் 2 மாதம் தாமதமாகியுள்ளது.
இப்போது தண்ணீர் திறக்கப்படுள்ளது - ஆனால் கர்நாடகா அணைகள் நிரம்பிய பின்பு தான் திறந்துள்ளனர். இந்த விவகாரத்தில் விஜய் அரசு மோசமாக கையல ஒரே காரணம் தன் திரைப்படத்தின் தயாரிப்பாளார் லாபம் தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை.
இதில் கொடுமை என்னவென்றால் : விஜய் நல்ல மனசுக்கு இறைவனே தண்ணீர் அனுப்பிட்டார்னு கிளப்பி விளம்பரம் பண்ணிட்டு இருக்கு இன்னொரு குரூப்... நாளை காவேரி மீட்ட நாயகன் என்று பாராட்டு விழா கூட நடத்துவார்கள் போலும்.
ஆனால் இந்த விசயத்தை எடுத்து டெல்டா பகுதியில் பெரும் போராட்டத்தை கட்டமைத்திருக்க வேண்டிய திமுக எப்படியோ வாய்ப்பை விட்டுவிட்டு நீட் தேர்வு மோடி எதிர்ப்பு என சுற்றி வருகிறது... எனக்கு தெரிந்து திமுக இதற்கு மேலும் மோடி எதிர்ப்பு பேசுவது வீண் வேலை...
எதிர்கட்சியாக எப்போதும் திறமையாக அரசியல் செய்யும் திமுக , விஜய் அரசுக்கு எதிராக அரசியல் செய்ய முடியாமல் தடுமாறுகிறாது என்பது புதிய விடயம்.
25 மாவட்டங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நதிநீர் விவகாரத்தில், நிர்வாகத் திறனுடன் சட்டப்பூர்வமாகப் போராடிக் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது மாண்புமிகு அஇஅதிமுக அரசு.
ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காமல் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் இன்றி விவசாயமே பொய்த்துப் போயுள்ள தற்போதைய சூழலில், நிர்வாகத் திறனற்ற தவெக அரசு இதுகுறித்து என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப் போய், ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தவெக அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, தேர்தல் வாக்குறுதியில் அளித்தவாறு கூட்டுறவு பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும் இல்லையெனில்,
@AIADMKOfficial சார்பில் தவெக கூட்டணி அரசை எதிர்த்து தமிழகமெங்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சிதமிழர்
@EPSTamilNadu அவர்கள்.
#AIADMK
எடப்பாடியார் 12110 கோடி ரூபாய் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார்.
குடிமராமத்து பணிகள் மூலம் நீர்நிலைகளை தூர்வாரி விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்தார்.
காவிரி டெல்டா மண்டலத்தை சிறப்பு வேளாண்மண்டலமாக கொண்டு வந்ததின் மூலம் விவசாய நிலங்களை காத்தார்.
இப்படிப்பட்ட அதிமுகவுக்கு, எடப்பாடியாருக்கு 2019 ல இருந்து 2026 வரை ஓட்டு போடாம விடியலுக்கும், விசிலுக்கும் ஓட்டு போட்டா காவிரில கானல் நீர் வராம காவிரி தண்ணியா வரும்....
பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை,கரூர், திருச்சி கிழக்கு, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருந்தாலும், அவர்களின் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதல்வர் எம்ஜிஆர் ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றார். அவர் அங்கு பேசியது சில வார்த்தைகள்தான்.
"மாணவர்களே,
நான் இன்று இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை பேசும் செல்வாக்கு உடையவன்.என்னை அனுதினமும் சந்திக்க காத்துக் கிடக்கும் கோடீஸ்வரர்கள் ஏராளம்; உதவி பெற வரிசையில் நிற்போர் ஏராளம்;தினமும் என் வீட்டில் பசியாருவோரும் ஏராளம்.
அப்படிப்பட்ட என்னால் வாங்க முடியாதது கல்வி.
எனக்கும் படிக்கும் ஆசை இருந்தது. ஆனால் அதைவிட பலமடங்கு வறுமை வீட்டில் இருந்தது. எனவே நடிக்க வந்துவிட்டேன்.
எனக்கு மட்டுமல்ல,உலகில்
எத்தனையோ பேருக்கு கிடைக்காத பாக்கியம் கல்வி.அது உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அரசியல் எப்பொழுதும் செய்யலாம்;உரிமைகளை எப்பொழுதும் கோரலாம்;ஆனால்
படிப்பு உரிய காலத்தில் இல்லாவிட்டால் படிக்க முடியாது.
என் செல்வங்களே,
எனக்கு கிடைக்காத கல்வி உங்களுக்கு கிடைத்திருக்கின்றது.
அதை நல்ல முறையில் படித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயனுள்ள மனிதர்களாக வாழுங்கள்.
அதனால்தான் இன்றளவும்
காமராஜரை என் வழிகாட்டியாக கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு என சோறு போட்டு படிக்க வைக்கும்
முயற்சியினை நான் எடுக்கின்றேன்.எனக்கும் இப்படி சோறு போட அன்று ஒரு அரசு இருந்திருந்தால், நான்காம் வகுப்பை தாண்டாதவன்
எனும் அவமானத்தோடு நான்
உங்கள் முன் நின்று கொண்டிருக்க மாட்டேன்!"
எம்ஜிஆர் பேச பேச அரங்கத்தில் அமைதி.மாணவர்கள் முகத்தில் சலனமின்றி உறைந்தனர்.
விழாவுக்கு வந்திருந்த பெற்றவர்கள் கண்களில் கண்ணீர் வழிய கையெடுத்து அவரை வணங்கி கொண்டிருந்தனர்.
எனவேதான் அவர் மக்கள் திலகம்!
@AIADMKOfficial@EPSTamilNadu
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
இதை வெளியில் கொண்டு வந்ததற்காக தான் 26 நாட்கள் சிறை
கடத்தப்பட்டு என்மீது தாக்குதல்
இந்த விசயத்தில் என்னோடு பயணித்த மருதுராஜ் என்ற நெடுஞ்சாலை துறை தற்காலிக பணியாளர் வாங்கிய அடி கொஞ்சநஞ்சமல்ல
இதை தான் வெளியே கொண்டு வந்ததாக சிலர் கிரிடிட் எடுப்பது தான் கொடூரத்தின் உச்சம்😢
TVK விஜய் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் கும்பகோணம் அருகே சுமார் 40,000 மேல் நெல் மூட்டைகள் திறந்தவெளி மழை நீரில் சேதம்.. இது அமைச்சர் தொகுதி..
வந்த உடன் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு ரிலீஸ் போட்டு திரிந்தால் பின்ன என்ன நடக்கும்..
வாயை திறங்க CM சார்..
@SavukkuOfficial@EPSTamilNadu அடிப்படை உறுப்பினர் ஆவதில் என்ன தவறு? மிதுன் அவர்கள் அடிப்படை உறுப்பினர் இல்லை என்று சொன்னால் தன் மகனை கூட உறுப்பினர் ஆக்க முடியவில்லை என்று அதற்கு என தனி வசனம் பேசுவீர்கள்
:அண்ணே! புதுசா போட்ட மாவட்ட செயலாளர்கள் மட்டும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பாங்கன்னு எப்படி சொல்ல முடியும் ??
:கட்சியை, கட்சி தலைவரை கண்ட பைத்தியம் எல்லாம் தவரான முறையில் பேசும்போது கடைசி 5 வருஷத்தில் எப்பவாவது முன்னாள் மாவட்ட செயலாளர் யாராவது செருப்படி குடுத்து பதிவு போட்டு பார்த்து இருக்கியா??
: இல்லைணே
:இரண்டு நாளா பல மாவட்டத்தில் இருந்து தலைவரை தவராக பேசிய நபரை கண்டித்து மாவட்ட தலைமையில் இருந்தே பல பதிவு பார்க்க முடியுது. அதான் தம்பி வித்தியாசம். 💪
கட்சி, தலைமைக்கு விசுவாசமாக இல்லாதவன் எப்படி தம்பி கட்சியை ஜெயிக்க வைப்பான்? தான் மட்டும் ஜெயிச்சா போதும் அப்படின்னு தான் இருப்பாங்க. 2026 ல அதுதான் நடந்தது..🤔
இனிமே நல்லது நடக்கும் 👍👍👍
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
“யோவ் @AIADMKITWINGOFL சுத்தி வளைச்சி பேசல, நேராவே கேக்குறேன். உனக்கெல்லாம் மனசாட்சிலாம் இருக்கா இல்லையா? இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன் யா! 😂😂😂”
“அதுவும் அந்த ‘ஜூம்கலக்கா ஜூம்கலக்கா’ன்னு வந்த இடம் அல்டிமேட் யா!
ஆரம்பத்தில் விஜய் அரசியல் ரீதியாக மிகவும் கூர்மையான முடிவுகளை எடுப்பார் என்று நினைத்தேன். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அந்த நம்பிக்கையில் சந்தேகம் எழுகிறது.
"TVK ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருக்காது" என்று தொடர்ந்து கூறிவந்த நிலையில், தற்போது கட்சியின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் ஆதவ் அர்ஜுனா குடும்பத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது போல் தெரிகிறது. இதனால், கட்சியின் திசை மற்றும் கட்டுப்பாட்டை விஜய் மெதுவாக இழந்து வருகிறாரோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில்,
TVK என்பது அவர்களால் முழுமையாக முதலீடு செய்யப்பட்டு, தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசியல் அமைப்பாக மாறிவிட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏற்கனவே மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் நிதியுதவி வழங்கியவர்கள், இப்போது நேரடியாக ஒரு அரசியல் கட்சியையே தங்களின் புதிய அரசியல் முதலீடாக மாற்றிவிட்டார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.
#KCPalanisamy #MartinFamily #TNPolitics #TVKGovt #CMVijay #AadavArujuna
அட ஆச்சரியக்குறிகளே…
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா தோற்றுவித்த திமுக-வின் போர்வாளாகத் திகழ்ந்து, அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்தவர். அண்ணா மறைவிற்கு பிறகு திரு. கருணாநிதியை திமுக தலைவர் ஆக்கிய கிங்மேக்கர்.
தான் தேர்ந்தெடுத்த தலைமை தடம் புரண்டதைக் கண்டு, அண்ணாவின் கொள்கை காக்க உண்மையான திராவிட இயக்கம் @AIADMKOfficial-ஐ தோற்றுவித்தவர்.
மாண்புமிகு அம்மா அவர்கள் கழகத்தின் கொள்கை பரப்ப தமிழகமெங்கும் பயணித்தவர். சத்துணவு திட்டத்தை செயல்படுத்த அரும்பணியாற்றியவர். புரட்சித் தலைவர் மருத்துவமனையில் இருந்தபோது கழகத்தின் முகமாய் தமிழகத் தெருவெங்கும் சென்று கழகத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் புரட்சித் தலைவி அம்மா.
வரலாற்றை “படிடா பரமா, படிடா பரமா” என்று சொன்னால் கேட்டா தானே?
தமிழக வரலாற்றின் ஒப்பில்லா தலைவர்களின் திருப்பெயரோடு உங்கள் தலைவர் பெயரை எழுதுவதே ஒரு வரலாற்று அசிங்கம்.
உங்கள் தலைவருக்கு என்ன வரலாறு இருக்கிறது?
அப்பா தயவால் சினிமாவுக்கு வந்துவிட்டு, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில் தன் ஆரம்பகாலத்தில் கூச்சமின்றி நடித்த நடிகர் தானே?
8 படங்கள் அப்பாவின் இயக்கத்தில்,
பெரிய இயக்குனர்கள் படங்கள் அப்பாவின் சிபாரிசில்,
தெலுங்கு பட ரீமேக் ரைட்ஸ் அப்பாவின் செல்வாக்கில்,
உங்கள் அப்பா இல்லையென்றால் நீங்கள் யார் @actorvijay ?
அதே அப்பா மீதும், பெற்ற அம்மா மீதும் வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கைத் தமிழருக்காக நிதி கேட்டு வந்த இன்றைய அமைச்சர் வன்னி அரசு அவர்களை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே உங்கள் அரசியல் வரலாறு?
ஈழத் தமிழர்களுக்கான நடிகர் சங்கப் போராட்டத்தின் பொது எல்லா நடிகர்களும் அள்ளிக் கொடுக்க, 500 ரூபாயை கஞ்சத் தனமாக கிள்ளிக் கொடுத்தவர் தானே நீங்கள்?
நீங்களாக ஒரு மேடை போட்டு, “நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட” என்று பாடியதால் தான் இலங்கைப் போர் நின்றது என்று உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் உருட்டலாம். தமிழக மக்கள் இதையெல்லாம் கண்டு சிரித்ததே வரலாறு.
ஒரு Twitter ID விமர்சனம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாமல், கமிஷனர் ஆபீசுக்கு சென்று கதறிய உங்கள் இயக்கத்தின் “மாபெரும் அரசியல் வரலாறு” எங்களுக்கு தெரியாதா என்ன?
“கோட் சூட் போட்டோஷூட்” நடத்தினால் அதை சொல்லத் தான் செய்வோம். உங்களைப் போல “Wow… How Cute?” என்று சிலாகிக்க நாங்கள் என்ன ஆச்சரியக்குறிகளா?
கரூரில் 41 மக்கள் பரிதாபமாக உயிரிழந்த போது கூட அதற்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஓட்டம் பிடித்த சக்தி, அன்றும் இன்றும் மக்களுடனே நிற்கும் மக்கள் சக்தியான நம்மைப் பார்த்து பேசுவதா?
கீழ்மாடியில் ராஜினாமா, மேல்மாடியில் இணைப்பு விழா என உங்கள் குதிரை பேரத்திற்காக கண்ணியமிகு தலைமைச் செயலகத்தை பனையூர் பங்களா போல மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள், உயிரை விட இயக்கம் மேலென நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள ஒரு மாபெரும் இயக்கத்தைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது?
அஇஅதிமுக தீர்ந்து போன சக்தியாம்.
விபரீத யோகத்தால் ஆட்சிக்கு வந்துவிட்டு தமிழகத்தை அலங்கோலப் படுத்தும் உங்களை தீர்த்துக் கட்டப் போகும் சக்தி இந்த அஇஅதிமுக தான் என்பதை நினைவிற்கொள்க.
@TVKHQITWingOffl