பிற்போக்கையும் பழமையையும் வேரறுத்து, பன்மைத்துவத்தையும் ஒற்றுமையையும் உயர்த்திப் பிடிப்பதே நமது இந்தியா!
கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு எதிர்காலத்தை நோக்கிய நம் நாட்டின் பயணம் வெல்ல வேண்டும்!
நாளை என்பதை அறிவாலும் ஆற்றலாலும் வடிவமைத்து, சமத்துவம் – சகோதரத்துவம் – முற்போக்கு – மனிதநேயம் உள்ளிட்ட விழுமியங்களோடு ஒன்றுபட்டு முன்னேறுவோம்!
அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்! 🇮🇳
#IndependenceDay
அவசர அவசரமாக கூட்டப்படும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தென் மாநிலங்களின் வலிமையைக் குறைத்து, வட மாநிலங்களுக்கு இன்னும் அதிக தொகுதிகளை வாரிவழங்கும் சதித்திட்டத்தை மேற்கொள்ள ஒன்றிய பாஜக அரசு தயாராகி வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இந்த திட்டத்தை நிச்சயம் முறியடிக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்!
அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
வெல்லும் தமிழ்ப் பெண்களே...
நீங்கள் வெல்வதற்கு உலகும் - உங்களுக்குத் துணை நிற்க #DravidianModel-உம் இருக்கிறது!
தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது #DravidianModel அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!
#IWD #IWD2026 #InternationalWomensDay #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #வெல்வோம்_ஒன்றாக!
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஏன் ஊழல்வாதி என்று முத்திரை குத்தப்பட்டார்?
அந்த ஒடுக்கப்பட்ட மக்களையே "கலைஞர்" என்று சொல்லாமல் கருணாநிதி என்று சொல்ல வைத்தது யார்? இதற்கு பின்னாடி உள்ள அரசியலை படித்தால் புரியும் என் தலைவன் யார் என்று.
@thisisRaj_@rocket_isro@Karthick_789