ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நிலவி வருகிறது புகார் அளிக்க +919498794987 இந்த தொடர்பு எண் அழைத்தால் இணைப்பு கிடைக்க வில்லை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் @TANGEDCO_Offcl@TANGEDCO_SE_CHW
@PttvNewsX மாணவர்கள் மீது குறை சொல்லுவதை விட்டு பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்து விட வேண்டும் அதற்க்கு நடவடிக்ககை எடுக்காத போக்குவரத்து துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எப்பொழுது தான் செய்தி போடுவீர்கள்?
ஜெய்பீம்!
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவன தலைவர் மான்யவர் கான்ஷிராம்ஜி அவர்களின் 91 வது பிறந்தநாளில் அரக்கோணம் நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் 15/03/2025 அன்று சனிக்கிழமை மாலை 6:00 மண��யளவில் Dr. BR. அம்பேத்கர் வளைவு ஒடியன்மணி திரையரங்கம் அருகில் நடைபெற உள்ளது.
ஆவடி காவல் ஆணையரகம், ஆவடி சரதத்தில் இரவு பாதுகாப்பு அதிகாரியாக உள்ள பூந்தமல்லி உதவி ஆணையரை அணுகி தகவல் கேட்டு போன் செய்தால் தொலைபேசியை துண்டித்து விடுகிறார்.
பின்னர் ஏன் X தளத்தில் அதிகாரிகள் பணியில் உள்ளார்கள் என குறிப்பிடப்படுகிறது..
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் மான்யவர் கான்ஷிராம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவுநாளில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் விழுப்புரம் நகரத்தில் புகழஞ்சலி செலுத்தியபோது விழுப்புரம் மாவட்ட காவல் அதிகாரி விழுப்புரம்ம் தாலுக்கா P4 காவல் நிலைய SI முரளி சாதிய வன்மத்தோடு கண்ணியக்குறைவாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரின் திருவுருவ படத்தை அவமதிக்கும் விதமாக பிழ்த்தெறிந்து அவமரியாதை செய்ததுடன் BSP நிர்வாகிகளை தரக்குறைவாக பேசிய SI முரளி SC ST வன்கொடுமை சட்டத்தின் வாயிலாக SI முரளி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் @DistrictColVpm Dr. R.Palaniswamy, IAS., அவர்களையும், Tr. G. Dorairaj, IPS - IGP – North Zone, அவர்களையும், மாவட்ட காவல் ஆணையர் SP - Tr. P. Pakalavan, M.A., அவர்களையும், தமிழக முதல்வர் @CMOTamilnadu@mkstalin அவர்களையும் கேட்டுக்கொள்வதோடு, இதுபோன்ற அவமரியாத்தையான நிகழ்வுகள் தமிழகத்தில் எங்கும் நடைபெறாதவாறு தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை தங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுகொள்கிறேன்.
#ManyavarKanshiram #BSPTamilnadu #BSPArmstrong #Armstrong @bsptamilnadu@bsparmstrong@AnandanTNBSP@AnandAkash_BSP@Mayawati@NCSC_GoI
கடந்த 1993 ஆம் ஆண்டு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை அசாம்,சிக்கிம் தவிர வேறு எந்த மாநில கட்சிகளும் எந்த வடிவிலும் கட்சி கொடியிலோ அல்லது சின்னமாகவோ பயன்படுத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வந்து அறிவிப்பு வெளியிட்டது.
உண்மை இப்படி இருக்க, இந்த அறிவிப்பு குறித்து தெரியாமல், சகோதரர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியில் இரண்டு யானைகள் இடம் பெற்றிருப்பது விதிகளை மீறும் செயலாகும். மேலும், தேர்தல் காலங்கள் வாக்காளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, உடனடியாக தங்கள் கட்சி கொடியில் இடம்பெற்றுள்ள யானைகளை அகற்ற வேண்டும் என அன்புடன் கேட்டு கொள்கிறேன். மீறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள பகுஜன் சமாஜ் கட்சி தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு,
பி.ஆனந்தன்
மாநில தலைவர்
பகுஜன் சமாஜ் கட்சி.