#பட்டியல்_சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷின் மரணத்திற்கு #நீதி_வேண்டும்!
‘எறும்பு கடித்து இறந்ததாக போலீஸார் கூறுவதை ஏற்க முடியாது’ எனக்கூறி போராடும் பெற்றோருக்கும் துணை நிற்போம்.
#திருநெல்வேலிமாவட்டம்
அண்ணாநகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் மகன் விக்னேஷ் (21),#தேனிமாவட்டம் போடியில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.கடந்த பிப்ரவரி (13.02.2025)வியாழன் அன்று தேர்வு எழுதிவிட்டு வந்தவர் நீண்ட நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை.இதனால் சகமாணவர்கள் கல்லூரி முழுவதும் தேடியுள்ள நிலையில் இரவு சுமார் 10.45 மணியளவில் கல்லூரி விடுதியின் கழிவறை ஒன்று உள் பக்கம் பூட்டிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள், உடனடியாக விடுதிக் காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது விக்னேஷ் உடலில் பல்வேறு இடங்களில் இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.பின்னர் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள். அதன்பேரில் காவல்துறை உடலை மீட்டுப் பிரேதப்பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறது.
மேலும், மாணவர் விக்னேஷின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது. காரணம், காவல்துறையே முதலில் வலிப்பு வந்து இறந்துவிட்டார் என்றும் பின்னர் எறும்பு கடித்து இருந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணாகக் கூறுகிறார்கள். அதோடு விடுதிக்காப்பாளரான பாண்டியராஜனும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையை போன்றே முன்னுக்குப் பின் முரணான தகவல்களையே வழங்கி வருவதாகவும் விக்னேஷின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் @Tnicollector
அலுவலகத்துக்கு உயிரிழந்த விக்னேஷின் பெற்றோர் உள்ளிட்ட அவரது உறவினர்கள், விக்னேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் போலீஸார் விசாரிக்காமல் வழக்கை முடிக்க முயற்சி செய்கின்றனர் எனவும் குற்றம்சாட்டி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எங்களது மகன் இறப்பில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வந்து உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலை முற்றுகையிட்டும் போராடி இருக்கின்றனர். வெறும் காவல்துறையின் விசாரணைப் போக்கு ஒருதலைப் பட்சமாக இருப்பதால் இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனு அளித்திருக்கின்றனர்.
தேனி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷின் உடலைப் பார்ப்பதற்கு அவரது பெற்றோரைக்கூட காவல்துறை முதலில் அனுமதிக்கவில்லை. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு இடையே அனுமதிக்கப்பட்டனர். மகனின் உடலைப் பார்த்த விக்னேஷின் தந்தை ‘என் மகனின் உடலில் காயங்கள் இருந்தன. காதுக்குள் இருந்து ரத்தம் வடிந்திருக்கிறது. சகமாணவர்களிடம் விசாரித்தபோது கழிப்பறையில் இருந்து மகனின் உடலை எடுத்தபோது ஆசனவாய் பகுதியில் இருந்தும் இரத்தம் இருந்ததாகக் கூறினர்’என்கிறார். ஆனால், சாதிய உடை அணிந்த காவல்துறையோ எறும்பு கடித்து இறந்திருக்காலம், மாரடைப்பு வந்து இறந்திருக்கலாம், வலிப்பு வந்திருக்கலாம், தற்கொலை செய்திருக்கலாம் என வழக்கை முடிக்கப் பார்க்கின்றனர். என் மகன் அடித்து துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்கிறது. மேலும் பிரேதப்பரிசோதனை அறிக்கையை எங்களிடம் காட்ட மறுக்கின்றனர். பிரேதப்பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை நிராகரித்தனர் என்றும் கூறுகின்றனர். போடிநாயக்கனூர் சாதிய உடை அணிந்த காவல்துறையும் இந்தக் கொடூரமான மரணத்தை முறையாக விசாரிக்காமல் மெத்தனப் போக்கில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
மாணவனின் பெற்றோரையும் காவல்துறையின் கல்லூரி நிர்வாகமும் அலைக்கழிப்பு செய்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி உடலை வாங்கிச்செல்லுமாறு மிரட்டி வருகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியதாகும். சமீப காலமாகத் தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீதும், மாணவர்கள், இளைஞர்கள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தங்கு தடையின்றி நடந்தேறி வருவது வேதனையளிக்கிறது. காவல்துறையைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரும் இது குறித்துப் பேசாமல் எளிதாகக் கடந்து செல்வது விவாதத்திற்குரியது. இது குறித்து இன்று விக்னேஷின் மரணத்திற்கு நீதி வழங்கிட கோரி
பெற்றோர்,உறவினர்கள் திருநெல்வேலி ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்,
@Collectortnv மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே, மாணவர் விக்னேஷின் உடலை மூன்று தலைமை மருத்துவர்களைக் கொண்டு வீடியோ பதிவுடன் உடற்கூறாய்வு செய்து வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசை
#நீலம்பண்பாட்டுமையம் வலியுறுத்துகிறது!! #JusticeForVignesh
@beemji@CMOTamilnadu
As long as the inequality, oppression & tyranny exists in this world;so the fighting spirit of ‘che’ continues to exist .. Remembering ‘ Che’ on the day of his ‘Last Breath’✊✊✊