தெலுங்கர்கள் அதிகம் வருகிறார்கள் என்பதற்காக தமிழர்கள் ஏண்டா தெலுங்குலயே பேசுறீங்க? அது தமிழ்நாடு தெலுங்கர்கள் கிட்ட தமிழ்ல பேசுங்க உங்களுக்கெல்லாம் அசிங்கமா இல்லையா?
கீழ பாருங்க 5000 கிலோமீட்டர் தாண்டி வாழ்கிறார்கள் அவங்க நினைச்சா தமிழை கலப்படமாக பேசலாம் ஆனா அவங்க தாங்கள் தமிழர்கள் என்று உணர்கிறார்கள். அந்த உணர்ச்சி ஏன் உங்களுக்கு எல்லாம் இல்லாம போச்சு?
உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.
த.வெ.க விஜய் ஆட்சியில் பழனி கோயில் நில ஊழல் - நடந்தது என்ன ?
நிலத்தை விற்றவர்கள், வாங்கியவர்கள், பதிவு செய்த அதிகாரிகள், தடுக்க தவறிய அதிகாரிகள் என இந்த குற்றத்தில் தொடர்புடைய யார் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
ஆனால் இது குறித்து social media வில் பதிவிட்டவரை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைக்கிறது பாசிச அரசு.
#TVKFails #HRCE #Corruption
3ம் தேதியே அப்போது இருந்த சார்பதிவாளர் மூலம் கிரயம் செய்யப்பட்டு Pending போடப்பட்டுள்ளது.
மேலிட அழுத்தம் காரணமாகவே அவர் Pending Document Release செய்து Number Allocation செய்யாமல் விடுப்பில் சென்றுள்ளார்.
அதை தொடர்ந்து Chit Fund பதிவாளரை பொறுப்பு சார்பதிவாளராக கொண்டு வரப்பட்டு மாவட்ட பதிவாளர் மூலம் அழுத்தம் கொடுத்து Pending Document Release செய்து Number ஒதுக்கீடு நடந்துள்ளது என்பது இன்றைய முன் ஜாமின் வழக்கின் மூலம் தெரிகிறது.
இதை அரசு தரப்பிலும் ஆம், 3ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது என ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே இது முற்றிலும் கூட்டு சதி என்பது அம்பலம் !
News Update | உச்ச நீதிமன்றம் கவலை
சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியை கட்டாயமாக்கும் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, மாணாக்கர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் கவலை
5 அல்லது 6-ம் வகுப்பு முதல் அமல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் ஆலோசனை
CBSE | Three Language Policy
#SupremeCourt #CentralGovernment
“அவதூறு வழக்கு தானே தொடர முடியும்?”
சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்கு தானே தொடர முடியும்? கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்
- தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வலியுறுத்தல்
பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டின் கீழ் கலவரங்களை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கருத்து
பாசிசமா பாயாசமா என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்த போது விஜய் அவர்கள் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
"திருப்பதி சென்றதால் சிவாஜிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய கழகம் என்ற வரலாறு உண்டு.
இன்று கட்சியின் பொதுச் செயலாளர் வீட்டுத் திருமணமாம். பார்ப்பனர்கள் ஹோமம் வளர்க்க படு ஜோராய் நடக்கிறது.
குடும்பத்தை இப்படி வைத்துக் கொண்டு, பாஜகவை எதிர்த்தால் என்ன? ஆதரித்தால் என்ன?
இவர்களைக் காட்டித்தான் இளைஞர்களிடம் கொள்கையை வளர்க்கப் போகிறார்களா?"
இந்த காட்சியைக் கண்டால், பெரியாரும் அண்ணாவும் ரத்தக் கண்ணீர் வடிப்பார்கள்.
@katpadidmk
விஜய் அரசின் இரண்டாவது அடி — சென்னை மக்களுக்கு
பரந்தூர் விமான நிலையத்திற்கு பிறகு, இப்போது குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து.
261 கோடி செலவில் செம்மஞ்சேரியில் 80 ஏக்கரில் உலகளாவிய விளையாட்டு மையம் — சர்வதேச கால்பந்து மைதானம், ஒலிம்பிக் தர வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், நீர் விளையாட்டு நிலைகள் என்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தோடு இணைத்து என்று கடந்த அரசு திட்டமிட்டு வேலை தொடங்கியிருந்தது. இப்போது எல்லாம் போயே போச்சு.
OMR ஐடி காரிடரில் அந்த 80 ஏக்கர் நிலம் திடீரென்று அரசுக்கு எப்படி கிடைத்தது?
ஜேப்பியார் கல்வி டிரஸ்ட் ஆக்ரமித்திருந்த அரசு நிலம்த்தை சட்ட போராட்டம் மூலம் முந்தைய திமுக ஆட்சியில் வழக்கில் மீட்கப்பட்டது. கல்லூரி கட்ட OMRல் அரசு நிலத்தை வள்ளல் எம்ஜிஆர் ஜேப்பியாருக்கு கொடுத்தார், அரசு குடுத்ததோடு ஜேப்பியார் அருகில் இருந்த 80 ஏக்கர் ஆட்டை போட்டு கொண்டார், அந்த நிலத்தை தான் திமுக அரசு மீட்டது.
தமிழ்நாடு நிதியமைச்சர் மரியா வில்சன் ஜேப்பியாரின் மாப்பிளை. ஜேப்பியார் கல்லூரியின் இயக்குநர்.
தமிழ் நாடு அரசு ஏன் குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டமும் ரத்து செய்தது என்பதை உங்கள் ஊகத்திற்க்கு விட்டுவிடுகின்றேன்
Super da
முதலமைச்சர் விஜயின் கீழ் இயங்கும் காவல்துறையினர் வசம் இருந்த விசாரணை கைதியான சபரி வர்மன் லாக் அப் மரணம் அடைந்துள்ளார்
சபரி வர்மனின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு வேலை வழங்குவாரா முதல்வர் விஜய்?
தனது கட்சி சார்பில் நிதி உதவியும் அரசு சார்பில் நிதி உதவியும் வழங்குவாரா?
கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் முதல்வருக்கு அழுத்தம் கொடுப்பார்களா?
I love @RameshOffcl and have said it often, but this video clearly shows the previous Govt never allowed temple lands to go to private parties. A court order to “consider upon verification” is a standard directive, not an operational order—it just means “review the documents.” Imagine if the @arivalayam Govt made this exact decision. Every BJP bhakt would be up in arms over giving away temple land to private party.
#தவெக அரசு அதிரடி 🔥🔥🔥
ஊழலற்ற தூய ஆட்சியின் அடுத்த எபிசோடு
பழனி சார் பதிவாளர் சஸ்பென்ட்
இதுல முக்கியமான விஷயம்
அவர் கொடைக்கானல் ஆப்பீசில இருந்து இந்த பத்திர பதிவு செய்யுறதுக்காக ஒரு நாள் மட்டும் பழனிக்கு டிரான்ஸ்பரல அனுப்பி நிலத்தை பதிவு பண்ணி இருக்காங்க. பக்கா பிளானிங்.
👏👏👏
ஆனா செய்தி வெளியில் தெரிஞ்சதால் அந்த அதிகாரி மீது மட்டும் ஆக்ஷன். 😌😌
அவரை டிரான்ஸ்ஃபர் செய்தவர் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
கோவில் நிலத்தை எழுதி கொடுத்த அறநிலைய துறை அதிகாரிகள் மீது ஆக்ஷன் இருக்கா தெரியல!
அந்த நில விற்பனை பத்திரம் ரத்து ஆச்சா தெரியல!
100 கோடி ரூபாய் சொத்தை விற்பது, துறை அமைச்சருக்கு எப்படி தெரியாமல் போச்சு? அந்த நிலத்தை வாங்கியவர்கள் யார்? அரசே ஒரு அதிகாரியை அவர்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்து அனுப்பும் அளவுக்கு அவர்களுக்கு என்ன செல்வாக்கு?
அண்ணன் தப்பு செஞ்சாலே தட்டி கேட்போம் என சொன்ன #தவெக நண்பர்கள் இதெல்லாம் அமைச்சர்களை கேப்பாங்க இல்லே? "மக்கள் பணத்தை தொடவும் மாட்டோம் தொட்டவனை விடவும் மாட்டோம்" டயலாக் இனி ஆக்ஷனா மாறுமா?
கேளுங்க நண்பா..
விஜைனா பேரை சொன்னதும் தான் அடி பலமா விழுந்திருக்கு போல ப்ரெண்ட்ஸ்...
ஊழல் தான் பிரதான பிரச்சினை மாதிரி காட்றாங்க .. ஆனா பிரச்சினை அங்கிருக்கற பார்ப்பனியம் .. அதை எத்தனூ ரமேஷ் வந்தாலும் மாற்ற முடியாது .. அதுக்கு ஸ்டாலின்களே தேவைப்படும் ...
அப்புறம் வீடியோ போடறது எல்லாம் தவெகயன்ஸ் தான் .. நாம வேடிக்கை பார்ப்போம்
கரூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நான்கு கோவில்களின் நிலத்தை அவசரக் கதியில் அறநிலையத்துறை இணை கமிஷனர் பரிந்துரையில் ஒரே நாளில் தனியாருக்கு பட்டா போட்டு வழங்கியுள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன