மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு,
சமீபத்தில் பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடி விளையாட்டுப் போட்டியில், இந்தியக் கொடியை ஏந்தி, அன்னைத் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த தங்க மகுடமாய் திகழும் நமது ���ன்புச் செல்வங்கள் செல்வி. கார்த்திகா ரமேஷ் மற்றும் திரு. அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோருக்குத் தாங்கள் வழங்கிய ₹25 இலட்சம் ஊக்கத்தொகை, அரசின் பாசமிகு அரவணைப்பை உணர்த்துகிறது. இதற்காகத் தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார நன்றி பாராட்டுகிறோம்.
ஆயினும், இந்த இள���் வீரர்கள் கடந்து வந்த பாதையும், அவர்களின் குடும்பங்களின் ஈடு இணையற்ற தியாகங்களும், இந்தத் தொகையை நிச்சயம் உயர்த்தி வழங்க வேண்டிய உணர்வுபூர்வமான கடமையை நமக்கு உணர்த்துகின்றன.
விளையாட்டு மைதானத்தில், கண்ணகி நகரில் வசித்து வரும் வீராங்கனை செல்வி கார்த்திகா காட்டிய அசாத்திய வெற்றிக்குக் பின்னால், தூய்மைப் பணியாளராக இருக்கும் அவரது தாயாரின் தியாகமும், ஆட்டோ ஓட்டுநராகவும் , ���ட்டுமானப் பணியாளராகவும் ஈடுபட்டு வரும் அவரது தந்தையின் தியாகமும் உழைப்பும் , வறுமையின் வலிக்கு மத்தியில் மகளை வளர்த்தப் பெற்றோரின் வியர்வை கலந்த கண்ணீர்த் துளிகளும் மறைந்துள்ளன.
அதேபோல், வீரர் அபினேஷ் மோகன்தாஸ், குடும்ப வறுமையின் சுழற்சியில் போராடி வரும் சூழலிலும், நாட்டிற்காகத் தங்கம் வென்றுள்ளார். இவர்களின் வெற்றி வெறும் பதக்கமல்ல. இது தமிழ்நாட்டின் எளிய மக்களின் போராட்ட வாழ்வுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகார���். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தின் ஒற்றை நம்பிக்கைச் சுடராக இவர்கள் இன்று உயர்ந்து நிற்கிறார்கள்.
விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு காட்டும் பெருந்தன்மை வரலாறு காணாதது. குறிப்பாக, உலக அரங்கில் சாதித்த வீரர்களுக்கு, கோடி ரூபாய்க்கு மேல் ஊக்கத்தொகை வழங்குவது நமது அரசின் கொள்கையாகும்.
செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு ₹5 கோடி அறிவித்ததும், பணி சறுக்கு விளையாட்டில் வென்ற ஆனந்த்குமாருக்கு ₹1.80 கோடி வழங்கியதும், அரசின் பெருந்தன்மையை வெளிப்படுத்துகிறது. இதே உயரிய அணுகுமுறையை, தங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே பணயம் வைத்து நாட்டிற்காக ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்களுக்கும் வழங்குவது தான் சரியான நீதியாகும்.
குறிப்பாகக் கபடி விளையாட்டு என்பது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். கபடிப் ��ோட்டியில் சாதித்த, இந்த இளம் வீரர்களின் தன்னம்பிக்கை, அவர்களின் குடும்பத்தின் சமூகத் தியாகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கபடி வீரர்களுக்கு வழங்கப்பட்ட ₹25 இலட்சத்தை உடனடியாகத் த��ா ₹1 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
அதோடு, இவர்கள் கல்லூரிக் காலத்திற்குப் பிறகு, எதிர்காலத்தில் இவர்களுக்குரிய அரசுப் பணியை வழங்குவதற்கான உத்தரவாதத்தையும், தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.
இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை எளிய இளையோர்களுக்கு "நாங்கள் விளையாடினால், எங்கள் அரசு எங்கள் கண்ணீரை���் துடைக்கும், எங்கள் கனவுகளை நிறைவேற்றும்" என்ற அழியா நம்பிக்கையையும் உத்வேகத்தையும் விதைக்கும்.
எனவே, இந்த வீரர்களின் குடும்ப வறுமையைப் போக்கி, அவர்களுக்கு ஒரு நிலையான எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கும்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களையும், அன்புரிம���யோடுக் கேட்டுக் கொள்கிறேன் .
தமிழக நலனைக் காப்போம்!
தமிழர் வாழ்வுரிமையை மீட்போம்!
தி.வேல்முருகன்,
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
கார்த்திகா ஜெயிக்கும்போது நமக்கு நாம ஜெயிக்கிற மாதிரி இருக்கு. அதுவே குகேஷ் ஜெயிக்கும்போது முதல்வருக்கு அவர் ���ெயிக்கிற மாதிரி இருக்கும் அது தான் இங்க வித்யாசம்.
தன் இனத்தை அளவு கடந்து நேசிப்பது தப்பில்ல.❤️🫰🏼
@arivalayam @DMK_Updates
👑ஜெய் பாலய்யா💪🏼ரசிகர் மன்றம் தமிழ்நாடுலு
உங்க அப்பா வீட்டு பணமா @mkstalin?
ஆசியா இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகாவிற்கு ரூ.25 லட்சம் மட்டும் அறிவித்து அநீதி இழைத்துள்ளது திமுக அரசு.
கண்ணகி நகர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதியில் இருந்து,சரியான மைதானம் முதல் உடலுக்கான ஊட்டச்சத்து வரை என எல்லா கஷ்டங்களையும் கடந்து கார்த்திகா வெற்றி பெற்றுள்ளார்.
எனவே தமிழ்நாட்டை சேர்ந்த இரு வீரரக்ளுக்கும் தற்போது வழங்கியுள்ள ஊக்கத்தொகையை தலா ரூ.1 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தான் கண்ட கனவை கார்த்திகா போன்ற எளிய பிள்ளைகளின் மூலம் நிறைவேற்றி வெற்றிக்கு முதற்காரணமாக இருந்துள்ள கண்ணகி நகர் அணியின் பயிற்சியாளர் திரு.ராஜி அவர்களுக்கு ஊக��கத்தொகையும-அரசுப்பணியும் வழங்கி அரசு கவுரவிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்துகிறேன்.
கண்ணகி நகர் போன்ற பகுதிகளில்,அன்றாட வேலைக்கு அலையும் மக்களாக அடுத்த தலைமுறை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பம்!
#KannaginagarKarthika
ஆதிக்க சாதியில் இருந்து வந்த, டாக்டர் தந்தை மற்றும் நுண்ணுயிரியலாளர் தாயின் மகனாக தம்பி குகேஷுக்கு இது வரை தமிழக அரசு தந்த Cash Award 6.35 கோடி.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, போலியோவால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான செஸ் ��ிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தாவுக்கும் எந்த வெற்றிக்கும் 10 முதல் 30 லட்சத்தை மட்டுமே (5 முறை சேர்த்து மொத்தம் 115 லட்சம்) வழங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு. அவரது தமக்கை வைஷாலிக்கு 75 லட்சம் இது வரை மொத்தமாக cash prize தந்திருக்கிறது தமிழ்நாடு அரசு!
கேரம் உலக சேம்பியன் வாங்கிய வட சென்னை ஆட்டோ ஓட்டுனர் மகளான மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த M காசிமாவுக்கு 1 கோடி
House Keeping பணியாற்றும் தந்தை மற்றும் ஆட்டோ ஓட்டுனர் அன்னையின் மகளான கபடி கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு வெறும் 25 லட்சம் போதும் என்று தமிழக அரசு முடிவு செய்திருப்பது வருத்தமாக உள்ளது.
இதற்கு பெயர் தான் சமூக நீதியா?
சமூக பொருளாதார பாலின கல்வி பொருளாதார ரீதியில் பின்தங்கிய கார்த்திகாவுக்கும் காசிமாவுக்கும் அதிகமாக தானே தர வேண்டும்?
இவர்கள் பெண் பிள்ளைகளாகவும் இருப்பதால் இன்னும் அதிகமான சிரமங்கள் தாண்டி தானே வந்திருப்பார்கள்?
ஹரியானா மாநிலத்தில் உள்ள அரசுகள் இதே கபடி ஆசிய போட்டியில் வென்ற ஒவ்வொருக்கும் 2 கோடி மற்றும் 3 கோடிகளை கொடுத்து வந்திருக்கின்றன. அதை விட இரண்டு மடங்கு பட்ஜெட் வைத்துள்ள நாம் ஏன் இன��னும் லட்சங்களில் தந்து கொண்டு இருக்கிறோம்?
சென்னையை சேர்ந்த காசிமா கார்த்திகா இருவருக்கும் ஒரே ஒரு வீடு வாங்க கூட இந்த பணம் போதாது.
அவர்கள் சார்ந்துள்ள இடத்தில் இருக்கும் ஒரு கடினமான சூழலை மாற்றும் அளவுக்கு பணம் கிடைத்தால் இந்த பெண்கள் பல சேம்பியன்களை உருவாக்குவார்கள்.
தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
கேள்விகள் கேட்டதனாலே...
World Gamesக்கும் Asian Tournamentக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் கண்ணகி நகர் கார்த்திகாவுக்காக பேசுவதாக நினைத்து கொண்டு உளறுகிறார்கள் என்கிறார்கள் சராசரி மனிதனைவிட அதிகமாக ம��ளை வளர்ச்சி கண்ட மேதாவிகள் (இணைய உ.பிஸ்).
குகேஷ் விளையாடியது Individual Game. ஆதலால் அவருக்கு ரூ.5 கோடி. (குகேஷ் தொம்மராஜூவின் தந்தை மருத்துவர் - தாய் நுண்ணுயிரியலாளர்)
மேலும் அது World Championship போட்டி. ஆனால், கண்ணகி நகர் கார்த்திகா விளையாடியது Individual Game அல்ல. அது குழு விளையாட்டு. (கார்த்திகாவின் பெற்றோர் அன்றாடக் கூலித்தொழிலாளர்கள்) இதனால்தான் அவருக்கு ₹ 25 இலட்சம் என்று திமுகவை நியாயப்படுத்துவதற்காக தற்காலிகமாக PEN க்காக வேலை செய்யும் கருத்தியல் குண்டர்களும் இதற்கும் ஒரு Narrative செட் செய்கிறார்கள்.
இவர்கள் தெரிந்துதான் சொல்கிறார்களா? இல்லை தெரியாமல் சொல்கிறார்களா? என தெரியவில்லை.
கடந்த 2024 நவம்பரில் 11 - 17 வரை அமெரிக்காவில் (கலிபோர்னியா) நடைபெற்ற 6ஆவது உலக கேரம் போட்டியில் (World Carrom Championship) தங்கை காசிமா தங்கப்பதக்கத்தை வென்றார். இவர்கள் சொல்வது போல இப்போட்டியும் உலகளவிலானதுதான்.
ஆனால், குக்கேஷுக்கு தந்த ₹5 கோடியை போல தங்கை காசிமா அவர்களுக்கு திமுக அரசு ஊக்கத்தொகையை போட்டிப் போட்டு கொண்டு அறிவிக்கவில்லை.
பல அழுத்தத்திற்கு பின்பாக தான் திமுக அரசாங்கம் காசிமாவுக்கு வேறு வழியில்லாமல் ஒரு கோடி ரூபாயை ஊக்கத் தொகையை வழங்கியது. குகேஷுக்கு 'World', 'Individual Game' என்ற அளவுகோல்கள் காசிமாவுக்கும் பொருந்தி இருக்குமே...
ஆனால், திமுக அரசாங்கமானது காசிமாவுக்கு வெறும் ₹ 1 கோடி மட்டுமே வழங்கியது. அது ஏன்..?
விளையாட்டு ஊக்கத்தொகை பற்றி கேட்டது உடனே, சாந்தி தெரியுமா? அவருக்கு திமுக அரசாங்கம் செய்த உதவிகள் தெரியுமா? என்கிறீர்கள்...
தடகள வீராங்கனை அ��்கா சாந்தி அவர்களின் பெயரை சொல்லி, அவருக்கு அவரது சக தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்த தந்த ஊக்கத்தொகையை இன்னும் எத்தனை நாட்களுக்கு தம்பட்டம் அடித்து விளம்பரம் தேடிக் கொண்டிருப்பீர்கள். அது ஒன்றும் திருவாளர் முத்துவேலரின் குடும்பச் சொத்தில் இருந்து எடுத்த தந்த பணமில்லை என்னருமை இணைய திமுக நண்பர்களே!
2022ஆம் ஆண்டில் ஆசியப்போட்டியில் வென்ற பெண்கள் அணியின் குழு பிரிவில் கபடி விளையாட்டில் விளையாடிய ஹரியானா வீராங்கனை பூஜா நார்வாலுக்கு அம்மாநிலத்தை ஆளும் சங்கி சனாதன அடிப்படைவாத பாஜக அரசாங்கமே ₹3 கோடி ரூபாய் வழங்கி இருப்பதாக சொல்கிறார்கள். இணையத்தில் அவரை, "மூன்று கோடி கபடி ராணி" என்றும் அவரது இரசிகர்கள் அழைக்கின்றனர்.
கண்ணகி நகர் கார்த்திகா அவர்களுக்கு திமுக அதைவிட கூடுதலாகவே நிதி அறிவித்திருக்க வேண்டாமா? திராவிட அரசர் இதை செய்திருக்க வ���ண்டுமில்லையா?
தனது தோழிக்காக ₹250 கோடி வரையில் கார் ரேஸ் நடத்தும் பெரிய வீட்டு பிரபலத்திற்கு 2026இல் பட்டாபிஷேகம் நடத்தியே ஆக வேண்டுமென பரி��விக்கும் பரம்பரை கொத்தடிமைகளே!
தங்கை கார்த்திகா தேசிய அளவிலான SGFI, Khelo India மற்றும் Federation Nationals உள்ளிட்ட போட்டிகளில் மொத்தம் 11 முறை தமிழ்நாட்டிற்காக விளையாடி, அதில் 8 பதக்கங்களை வென்ற சிறப்புடைய திறமையான விளையாட்டு வீராங்கனை ஆவார்.
தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகையை பெற சர்வதேச, ஆசிய போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றாலே போதுமானது.
உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் ���ன்று வைத்துக் கொண்டாலும் அரசின் குறிப்பில் சிறந்த வீரர்களுக்கான ஊக்கத் தொகை ₹30 லட்சம் என்று இருக்கிறது. அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு எல்லாம் எந்த அடிப்படையில் கோடிகளில் நிதி வழங்கினார்கள்? இதில் கபடி போட்டிக்கு விலக்கு இருக்கிறதா?
சமத்துவம், சம நீதி, சமூக நீதி, ஆண்பெண் நிகர்மைத்துவம், பாலாதிக்க எதிர்ப்பு, பெண்கள் முன்னேற்றம், அனைவரும் அனைத்தும் என்றெல்லாம் மேடைதோறும��� பேசிவரும் அப்பாவின் அரசாங்கத்திற்கு முட்டு தந்து நிற்போர் எழுத்தாளர்கள் - விளையாட்டு விமர்சகர்கள் - முற்போக்காளர்கள், 'சாதிக்கொரு நீதி' எனும் மனுதர்மம் போல திறமை - தகுதி என கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்கை கார்த்திகாவுக்கும், தம்பி அபினேஷுக்கும் தலா ₹5 கோடி கொடுத்திருந்தால் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, உழைக்கும் விளிம்புநிலை சமூகத்தில்/கிராமப்புறங்களில் இருந்துவரும் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமாக இருக்கும். அத்துடன், தமிழர் மரபு விளையாட்டான கபடியின் மீது மீண்டுமொரு மக்களுக்கோர் ஆர்வமும் எழும். தமது பிள்ளைகளை அவ்வ��ளையாட்டில் ஈடுபடுத்த பெற்றோர்களும் விரும்புவர்.
குகேஷ் க்கு தரப்பட்ட ஊக்கத்தொகை மேல விமர்சனங்கள் வைக்க வேண்டிய தேவையில்ல… ஆனா கார்த்திகா மற்றும் அபிநேஷ் க்கு தரப்பட்டுள்ள இந்த ஊக்கத்தொகை நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும்..
விளையாட்டு வகைகள் வேற வேறயா இருக்கலாம்…
பரிசுத்தொகை விளையாட்டுக்கேத்த மாதிரி இருக்கலாம்…
ஆனா ஊக்கத்தொகை யாருக்கு அதிகம�� தேவைப்படுமோ அவங்களுக்கு அதிகமா தான் இருக்கனும்…
ஒரு கார்த்திகா இன்னும் பல கார்த்திகாக்களுக்கு உத்வேகத்த தருவாள்…💪🏻