அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் @MaiamOfficial தலைவருமான திரு. @ikamalhaasan அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.
இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான்.
அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்!
பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும்!
BREAKING : Massive blow to Israel
Germany has announced to withdraw its defence of Israel in the Genocide case at the International Court of Justice 🔥
Israel is getting globally isolated, as Europe is uniting against Zionists 🫡
போலி முற்போக்கு பரிதாபங்கள்
(கோபி சுதாகர்)
வடக்கன் என்கிற வார்த்தையே மோடி ஆட்சிக்கு வந்த பின்தான் தமிழ்நாட்டில் புழக்கத்தில் வந்தது. அதற்கு முன்பு அவர்கள்தான் நம்மை மதராஸிகள், கருப்பர்கள், ரைஸ் பேகுகள் என்றெல்லாம் தரக்குறைவாகப் பேசுவார்கள் (இப்போதும் கூட). ’வட இந்தியர்கள்’ இப்படிதான் என்ற பிம்பத்தை உலகெங்கும் பரப்பிய பெருமை மோடியையும் அவரின் மீடியாவையும் சேரும். ரோட்டில் மட்டன் (பீஃப்) கொண்டு போனால் அடித்துக் கொல்வது, ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி அடிப்பது, பாகிஸ்தான் பிளேயரைப் பார்த்து ஜெய் ஸ்ரீராம் என கத்துவது, கொரோனாவுக்கு பைத்தியங்களைப் போல பாத்திரங்களைத் தட்டுவது, மூத்திரம் சாணியைத் குடிப்பது தின்பது பூசிக்கொள்வது, கோ கரோனா கோ என கத்திக்கொண்டே ரோட்டில் ஓடுவது, கொரோனாவுக்கு விளக்கு ஏற்றுவது… என சேர்ந்துகொண்டே போன வடக்கு அவலங்களின் வரிசையில் இப்போது சேர்ந்துள்ளதுதான் வடக்கர்களின் ரயில் அட்டகாசம்!
மோடி வந்ததில் இருந்தே, சாமானியர்களின் பயணமுறையான ரயில் என்பது மேல்தட்டு பயணமுறை ஆகிவிட்டது. கட்டணம் குறைவான ரயில்களை அதிகமாக விடாமல், கட்டணம் மிக அதிகமான வந்தே பாரத்களில் மட்டுமே கவனம் செலுத்தியது பாஜக. காலம்காலமாக ரயிலை மட்டுமே நம்பி வாழும் வடக்கர்களுக்கு இது குழப்பத்தைத் தந்ததோடு, இடப்பற்றாக்குறையால் கோபத்தை, வெறுப்பை, பொறாமையைத் தூண்டி விட ஆரம்பித்தது. நியாயமாக அவர்கள் யார் மீது கோபப்பட்டிருக்க வேண்டும்? மோடி மீது. பாஜக மீது. ஆனால் கோபப்பட்டது யார் மீது? டிக்கெட் எடுத்து பயணிக்கும் சக மனிதன் மீது!
அப்படியே தமிழ்நாடு வாருங்கள். தீபாவளி, பொங்கல் வந்தால் அடிக்கடி டிவியில் வருவது யார்? நம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர். எத்தனை பஸ் விட்டிருக்கிறோம், எப்படி வசதி செய்துகொடுக்கிறோம் என விளக்குவார். பண்டிகை முடிந்தபின், இத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற பட்டியலும் வரும். மோடியின் ஒன்றிய அரசின் ரயில் பற்றாக்குறையையும் சேர்த்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தனது பஸ்களின் மூலம் சமாளிக்கிறது. அதாவது மக்களின் வசதிக்கு பொறுப்பேற்றுக்கொள்கிறது. அதேபோல, பஸ் பற்றாக்குறை இருக்கும் சூழல்களில் கூட தமிழர்கள் அரசின் மீதுதான் கோபப்படுவார்களே தவிர டிக்கெட் எடுத்து பயணிக்கும் சக மனிதனை தள்ளி விடுவது, அவன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பது, கண்ணாடியை உடைத்து காயப்படுத்துவது, அடுத்தவன் சீட்டில் போய் உட்கார்ந்துகொள்வது, எச்சி துப்புவது போன்ற மிருகத்தினும் கீழான செயல்களைச் செய்ய மாட்டார்கள். செய்வதா, நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் வடக்கர்களைப் பாருங்கள்.
ஒப்பீட்டளவில் அவர்கள் எந்த அளவுக்கு நம்மில் இருந்து தள்ளி இருக்கிறார்கள்! அரசியல் புரிதல் இல்லாதது அவர்கள் சமூகச் சூழலாக இருக்கலாம், ஆனால் சக மனிதன் மீதான வடக்கர்களின் குற்றச்செயல்களுக்கு அவர்களைக் குறை சொல்லாமல் யாரைக் குறை சொல்வது?
தமிழ்நாட்டிலும் குற்றங்கள் நடப்பதுண்டு. அதைப் பொதுச் சமூகம் ஏற்றுக்கொள்ளாது. கண்டிக்கும். இப்படி நாம் நடந்துகொள்ளலாமா என குற்ற உணர்ச்சியில் புலம்பும். ஆனால் சக மனிதன் மீதான குற்றச் செயல்களை வடக்குச் சமூகம் நார்மலைஸ் செய்துவைத்துள்ளது. குற்றங்களை, சட்டமீறல்களை மிகச்சாதாரணமாக வாழ்க்கைமுறையாக வைத்திருக்கிறது. வொர்கிங் கிளாஸ் வடக்கர்கள் மட்டுமல்ல, படித்த மேல்தட்டு படக்கர்களும் விதிவிலக்கல்ல. அதுவும் மோடியின் கடந்த பத்தாண்டு+ ஆட்சிகாலத்தில் வடக்கர்களின் வாழ்க்கைமுறை மட்டுமல்ல, அவர்களின் நாகரீகம், பண்பாடு, வாழ்க்கை வசதி, மனிதாபிமானம் என எல்லாமே பாஜக ஆட்சியில் ரூபாய் மதிப்பு போல அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
ஆக, கோபி சுதாகர் வீடியோ என்பது ஏதோ சில வடக்கர்கள் செய்வதை ஒட்டுமொத்த வடக்கர்கள் மீது சுமத்தும், ஜெனரலைஸ் செய்யும் வீடியோ அல்ல. அது பெரும்பான்மை வடக்கர்களின் வாழ்வியலைக் காட்டும் நகைச்சுவை. அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி.
முற்போக்கு முகமுடி போட்டுக்கொண்டு, “பொதுமைபடுத்தாதீங்க, பப்லுவ திட்டாதீங்க, வடக்கன்களை வையாதீங்க..” என கண்டிக்கும் மூளைவீங்கிகள், தங்கள் கண்டிப்புகளை, பரிதாபங்கள் குழுவின் நியாயமான ஒரு முற்போக்கு வீடியோவை ஆன்லைனில் மிரட்டி மிரட்டியே நீக்க வைத்த வெஸ்ட் மாம்பல பயங்கரவாதிகளிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
-டான் அசோக்
19/2/2025