மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.7.2026) சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், புதிய வழித்தடத்தில் இரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் எதிர்கால மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதத் தடை வரவேற்கத்தக்கது: நிரந்தரத் தடை - சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!
தமிழ்நாட்டிலிருந்து கருங்கல் பாறைகள், ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தற்காலிகமானதாக இருந்தாலும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு மிகப்பெரிய அளவில் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த காட்பாதரின் ஆதரவுடன் கனிமவளக் கடத்தல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று தவெக அரசு பொறுப்பேற்ற சில நாள்களிலேயே வலியுறுத்தியிருந்தேன். அதைத் தொடர்ந்து சில குவாரிகளுக்கு கனிமவளத்துறை அமைச்சரே நேரில் சென்று ஆய்வு நடத்தினாலும் கனிமக் கொள்ளையும், கடத்தலும் குறையவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து கேரளத்திற்கு செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிகள் காரணமாக அந்த சாலையில் கனிம வளங்களை கொண்டு செல்லத் தடை விதித்த போதிலும் கடத்தல் குறையவில்லை. மாறாக மாற்றுப்பாதையில் கடத்தல் தொடர்ந்தது. அதைச் சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பற்றாக்குறை காலங்களில் கனிமவளங்களை கேரளத்திற்கு கொண்டு செல்லக் கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, நிரந்தரத் தடை இன்று வரை அரசால் விதிக்கப்படவில்லை; அதனால் உடனடியாக கனிமக் கடத்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாகத் தான் வெளி மாநிலங்களுக்கு கனிமங்களைக் கடத்திச் செல்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை முழு அளவில் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்காணிப்பு காமிராக்களைப் பொறுத்தி கனிமவளங்கள் கடத்தப்படுகின்றனவா? என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இப்போது 3 மாதங்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ள கனிமவளக் கடத்தலுக்கானத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டும். மேலும், கனிமக் கொள்ளை மற்றும் கடத்தல் குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
#CMJosephVijay
#CWG2026 | #RajaMuthupandi | #SilverMedal
திமுகவின் மொத்த போலி போராட்ட டிராமாவையும் எக்ஸ்போஸ் பண்ணி முடிச்சு விட்டுட்டாங்க @ungalsanam 👏🏻🫡🔥
இங்க ஒருத்தனும் மாணவன் இல்லை.. இங்க மாணவனுக்கான போராட்டமும் இல்லை💯