சூப்பர் எல் நினோ தாக்கம் - "இன்று கடலில், நாளை நம் வயல்களில்"
#தலைப்பு : சூப்பர் எல் நினோ தாக்கத்தை உணரத்துவங்கிய தமிழ்நாடு, எல் நினோ பாதிப்பு பதிவு -1 தேதி: 8 ஜூன், 2026
==> முல்லைப் பெரியார் அணை தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு மிக முக்கியமான நீர் ஆதாரம். இது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் மீது அமைந்துள்ளது. 1887-1895ல் பிரிட்டிஷ் பொறியாளர் மேஜர் ஜான் பென்னிகுயிக் கட்டியது.
==> தமிழ்நாடு 999 வருட ஒப்பந்தத்தின் கீழ் இதை நிர்வகிக்கிறது. அணையிலிருந்து தண்ணீர் சுரங்கப்பாதை, கம்பம் பள்ளத்தாக்கு வழியாக வைகை ஆற்றுக்கு திருப்பி விடப்படுகிறது.
==> வைகை அணை மூலம் #தேனி, #மதுரை, #திண்டுக்கல், #சிவகங்கை, #ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் முக்கியமாக பயனடைகின்றன.
==> 5 மாவட்டங்களில் வேளாண்மை பாசனப் பகுதி சுமார் 68,558 ஹெக்டேர் (சுமார் 2.57 லட்சம் ஏக்கர்) விவசாய நிலங்கள்.
==> குடிநீர்: தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரம்.
==> முல்லை பெரியாறு நீர் வைகை அணைக்கு வந்து அங்கிருந்து பாசனத்துக்கு விநியோகிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் வறண்ட நிழல் பகுதிகளுக்கு உயிர்நாடியாக உள்ளது.
==> தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியார் அணை ஜூன் 6, 2026 அன்று 111.7 அடி (முழு கொள்ளளவு 152 அடி; அனுமதிக்கப்பட்ட அதிகபட்சம் 142 அடி).
==> வைகை அணை: 21.75 அடி (முழு 71 அடி; கொள்ளளவு 6091 mcft-ல் 133 mcft மட்டுமே). இத்தகைய வறட்சி சூழல் வைகை அணையில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
==> ஜூன் மாதத்தில் தேனி-கம்பம் பள்ளத்தாக்கு வழியாக தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நீர் இதுவரை திறக்கப்படவலை, முல்லை பெரியாறு அணை 111 அடிக்கு கீழ் (மிகவும் குறைவு) இருப்பது உண்மை.
==> தென்மேற்கு பருவமழையும் தீவிரமடையாத காரணம், நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் தென் மாவட்டங்களில் குறுவை பயிருக்கு தண்ணீர் வெளியிட முடியாத நிலை.
==> தற்போதைய நிலையில் முல்லை பெரியாறு அணை திறக்கப்படாததும் , வைகை வறண்டு காணப்படுவதும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலையை மட்டுமே தென் மாவட்டங்களில் ஏற்படுத்தவில்லை. வரும் மாதங்களில் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தும்.
==> மேலும் வைகை அணையில் 20 அடி வரையில் சேறும், சகதியும் சேர்ந்து அணை பரமாரிப்பு இன்றி காணப்படுகிறது. தற்போது போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வைகை அணையை தூர் வாரினால் வரும் காலங்களில் வைகை அணையில் மேலும் அதிக நீரை சேமிக்க முடியும், அனையின் சூற்றுச்சுழலும் பாதுக்காக்கப்படும்.
==> உருவாகி வரும் சூப்பர் எல் நினோவால் கோடையில் மழை சரிவர பெய்யாததும், தென் மேற்கு பருவமழை நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிரமடையாததும் தற்போது வைகை அணை வறண்டு காணப்பட முக்கிய காரணம்.
==> வரக்கூடிய மாதங்களில் எல் நினோ தாக்கம் தீவிரமடைந்தால் முல்லை பெரியாறு, வைகை அணைகளின் நிலவரம் மேலும் சவாலை ஏற்படுத்தும் என்பதால் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu@BussyAnand@KASengottaiyan@actorvijay@TVKVijayHQ
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
BJP’s long timer Yeddiyurappa was suddenly allowed to start a party in Karnataka "KJP" in 2012. After 2 years, he merged with BJP in 2014 .
Same way #Annamalai starting a new party is now just a trap set for later merging with his loyal lotus party. TN ppl are not dumb to fall into this trap.
What did Stalin gain from the opportunist alliance partners after the elections? Or the people who voted him out of office despite benefiting from his welfare schemes. the guardrails could be lowered. There is nothing wrong with politics when survival is at stake. #DMK
Dear @mkstalin@Udhaystalin 🙏🙏
Please allow them to make administrative mistakes, so that you will have something to fight for, expose and return stronger with in the next election.
@TughlaqBinMohd as long as Annamalai aspires for CM chair he will be seen as a threat to someone else who might be aspiring for the same. I will be happy to be proven wrong.
Dear @INCIndia &fans of @RahulGandhi . The guy (ex rss) in the frame shamelessly hugging actor Vijay is the one ,who used the picture of @priyankagandhi ‘s daughter hugging @RahulGandhi & posted with very unparliamentary remarks of the relationship. Good frame bro @RahulGandhi
@beef_parotttaa I think the only way to take on Vijay's cult is another celebrity cult. Data driven economics is not for the crowd that backed this change. Progressive growth is no longer relevant.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!