Why is crossing the Chennai One signal on Radial Road a nightmare during peak hours?
Traffic queues extend for more than a km, and commuters can take 10–15 mins just to cross the signal.
I used drone footage to identify where the traffic gets choked, what causes these bottlenecks, and what practical solutions could improve the situation.
Let’s look at the root causes. 🧵
@ChennaiTraffic@chennaicorp@sameerangs@CMOTamilnadu@AadhavArjuna@UpdatesChennai@OMRupdates #ChennaiOne #omr #radialroad #chennai #traffic
1000 ரூபாய்க்கு ரசீது வேண்டும்.
29 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட எங்களுடைய வீட்டு முன்பாக இருந்த சாலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட 4’ மேலே வந்துவிட்டதால் வீட்டின் தரைக்கு சமமாக சாலை மட்டம் வந்துவிட்டது. ஆகவே சாலையில் மழைநீர் தேங்கினால் அது உடனடியாக வீட்டு உள்ளே வந்துவிடுகிறது. இதனால் வீட்டை உயர்த்தும் பணியை செய்து வருகிறோம்.
இந்த பணியை துவங்க பல வருடங்களாக யோசித்து வந்ததால் சில வருடங்களுக்கு முன்பாக ஒரு முறை எங்கள் வீட்டு மின்சார கேபிள் பழுதடைந்த போது புதிதாக போடப்பட்ட கேபிளை தலைக்கு மேலே செல்லும் வகையில் ஒரு பைப் மூலம் மின்துறை ஊழியர்கள் ஒப்புதலுடன் மீட்டருடன் இணைத்து விட்டோம்.
தற்பொழுது வீட்டை உயர்த்தும் பணி முடிவடைந்துவிட்டதால் அந்த கேபிளை தரைக்கு அடியில் புதைத்து மீட்டருடன் இணைக்க இணையத்தின் மூலம் ஒரு புகார் (09217012135) அளித்திருந்தேன். கடந்த 9 நாட்களுக்கு முன்பாக அளித்த இந்த புகாரை திருவான்மியூர் AE அவர்களுக்கும் வாட்சப் வாயிலாக அனுப்பி வைத்தேன். ஆனால் எதற்கும் எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆகையால் எங்களுக்கு எலெக்ட்ரிக்கல் வேலை செய்து கொடுப்பவர் திருவான்மியூர் EB அலுவலகம் சென்று நேரில் இந்த புகாரை நேற்று மாலை தெரிவித்தார். இன்று காலை வந்து பார்ப்பதாக அங்கிருந்த ஊழியர் சொல்லவே இன்று மீண்டும் அலுவலகம் சென்று நினைவூட்டினார்.
இதையடுத்து இருவர் இன்று வீட்டிற்கு வந்து பார்த்தனர். அவர்களிடம் எங்கள் வீட்டிற்கு செல்லும் கேபிள் இணைப்பை துண்டித்து கொடுத்தால் நாங்களே அதை பூமிக்கடியில் போட்டுள்ள பைப் வழியாக மீட்டர் பாக்ஸ் உள்ளே இணைத்து விடுவோம். நீங்கள் அதற்கு பிறகு இணைப்பு கொடுத்து விடுங்கள் என்று சொல்லவே அவர்களும் ஒரு நிமிடத்தில் இணைப்பை துண்டித்து விட்டு வேலை முடிந்ததும் அழைக்க சொல்லி கிளம்பி விட்டார்கள். அதற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவர்களை அழைத்து வேலை முடிந்து விட்டதாக சொல்லவே சிறிது நேரத்தில் வந்து மீண்டும் 1 நிமிடத்தில் இணைப்பை கொடுத்துவிட்டார்கள்.
இந்த வேலைக்கு கட்டணமாக ரூபாய்.1000 எங்களிடம் வாங்கி சென்றுள்ளார்கள். இதற்கு எந்த ஒரு ரசீதும் கொடுக்கவில்லை. ஆகவே இது லஞ்ச கணக்கில் வருமா என்று எனக்கு சந்தேகம் வருகிறது. இந்த பணிக்காக 1000 ரூபாய் அரசுக்கு கட்ட எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதற்கு ரசீது எனக்கு கொடுக்கப்பட வேண்டும். அல்லது நான் லஞ்சம் கொடுத்துவிட்டதாக அர்த்தமாகி விடும். 1000 ரூபாய் வாங்கி சென்றவர் படத்தையும் நான் வைத்திருக்கிறேன். அதை அரசு கேட்டால் கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.
எனக்கு நான் கொடுத்த 1000 ரூபாய்க்கு ரசீது கிடைக்குமா?
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@CMOTamilnadu@TVKVijayHQ
திமுகவின் டிரான்ஸ்பார்மர் ஊழல் பூதாகரமாக வெடித்து கிளம்பி இருக்கிறது. ஒரே விலையை கொடுத்த ஒப்பந்ததாரர்கள், ஒரே ஐபி முகவரியில் இருந்து அப்லோடு செய்யப்பட்ட டெண்டர்கள் மற்றும் சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு கொடுக்கப்பட்ட டெண்டர்கள் என இவை அனைத்தும் ஒப்பந்ததாரர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு இடையே இருந்த கிரிமினல் சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவதாக DVAC தனது FIRல் தெரிவித்துள்ளது.
இந்த டிரான்ஸ்பார்மர் ஊழல் குறித்த அறப்போர் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு முன்பு அந்த ஊழல் குறித்து பல படங்களை தயார் செய்து வைத்து அந்த சந்திப்பு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே ஒவ்வொரு படமாக வெளியிட்ட போது இந்த ஊழல் வெளியீடு திமுகவை இந்த பாடு படுத்த போகிறது என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த ஊழல் வெளியீட்டிற்காக அறப்போர் டீம் பல மாதங்கள் உழைத்தது. இந்த வழக்கின் முக்கிய புள்ளி காசி தினமும் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று டெண்டர் செட்டிங் வேலை செய்வதை அவரை பின் தொடர்ந்து போய் வீடியோ எடுத்து ஆதாரங்களை அறப்போர் டீம் சேகரித்தது. இந்த ஊழலை நீதிமன்றம் மூலம் சிபிஐ விசாரணைக்கு அறப்போர் தள்ளி இருக்கிறது.
திமுக பாஜக கூட்டணி அமைந்துவிட்டதால் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்காது என்று தெரிந்து TVK அரசு தங்கள் பங்கிற்கு ஒரு FIR பதிந்து DVAC மூலம் விசாரணையை துவங்கி இருக்கிறது.
திமுக தலைமை குடும்பத்துக்கு ஊழல் செய்ய பினாமியாக செயல்படும் பாலாஜிகள் சிறைக்கு செல்லட்டும்.
The @CMOTamilnadu should visit the Medavakkam–Sholinganallur Metro construction stretch and witness how hazardous and pathetic the road conditions are for daily commuters.
With several schools, hospitals, and workplaces along this route, people are forced to risk their safety every single day.
#medavakkam #sholinganallur
My unstarred Question in Parliament to the Ministry of Jal Shakti sought clarity on the status of the Mekedatu project and the safeguards protecting Tamil Nadu's water rights.
Cauvery is shared by States and governed by law. Respecting both is essential to a lasting solution.
I welcome the Union Government's confirmation that any future appraisal of the Mekedatu DPR will be undertaken only in accordance with the Cauvery Water Disputes Tribunal Award and the Hon'ble Supreme Court's judgment. Those legal safeguards must remain the foundation of every decision affecting the Cauvery basin.
#MekedatuDam
I watched the Parithabangal video a few hours after they uploaded.
I had absolutely no idea who they were making fun of in THAT particular segment until I saw DMK IT wing chief TRB Raaja's outrage on Twitter.
The problem with so-called democrats is that one day they behave like the strongest defenders of free speech, but forget it another day.
FYI former (internationally renowned) Industries minister, you just reposted a tweet where someone said the sons of Bhagyaraj, Sathyaraj and Mahendran didn't make it big in their lives because they apparently didn't respect their fathers.
And your party continues to lampoon Shabbir for just doing his job.
Hey @atherenergy, my Ather Rizta has been at your service centre since 9 July for a no-start issue. I was informed on 14 July that a rat-bitten wire harness needed replacement. It's been 15+ days, and I'm still being told the part hasn't arrived. This delay is unacceptable.
My dear @mammukka,
Congratulations on your fourth National Award. You once promised me you would overtake me in the number of National Awards. As always, you are a man of your word! Here's to many more accolades, my friend.
Congratulations as well to all the winners of the 72nd National Film Awards. Special congratulations to @Nagashwin7@vyjayanthifilms and entire #Kalki2898AD family. Indian cinema is richer because of your excellence.
அதாவது என்ன ஆச்சுன்னா மக்களே,
சீர்கேட் நிறுவனம் ஒரு மாத காலமாக உருட்டிய பொய்கள் அனைத்தும் வீணா போச்சு.
பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலம் என்று திமுக அரசு அறிவிக்கிறது. அதற்கு சாட்டிலைட் மூலம் எல்லைகளை நிர்ணயித்து அந்த வரைபடத்தை அரசாங்க இணையதளங்களில் வெளியிடுகிறது. அதன் பிறகு அந்த எல்லைகளை களத்தில் சென்று உறுதி செய்து மார்க் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் வழக்கம் போல தூங்கி விடுகிறார்கள். இதனால் ராம்சார் எல்லைக்குள் பல்வேறு ஆக்கிரமிப்புகள் செய்யப்படுகிறது. இதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவே அவர்கள் களத்தில் எல்லைகளை மார்க் செய்யும் வரை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ராம்சார் சாட்டலைட் எல்லையில் இருந்து 1 கிமீ தொலைவுக்கு எந்த வித கட்டுமானத்திற்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று உத்தரவு போட்டு விடுகிறது. இந்த உத்தரவின் அடிப்படையில் cmdaவும் ராம்சார் எல்லைக்கு வெளியே 1கிமீ சுற்றளவுக்கு கட்டுமான அனுமதி கொடுப்பதை நிறுத்தி வைத்து விடுகிறது. திமுக அரசு எல்லைகளை மார்க் செய்து முடித்திருந்தால் இந்த கட்டுமான தடையே வந்திருக்காது. அவர்கள் ஏன் இதை செய்து முடிக்கவில்லை என்று உங்களுக்கு கேள்வி வரும்.
அதற்கு காரணம் திமுக அரசு ராம்சார் எல்லை என்று வரைபடம் வெளியிட்ட இடத்திக்கு உள்ளேயே 1250 வீடுகளுக்கு கட்டிட அனுமதியை அதே திமுக அரசு கொடுத்துள்ளது. இந்த கட்டிடத்தை கட்டுபவர்கள் தான் சீர்கேட் நிறுவனம். ராம்சார் எல்லைக்கு உள்ளே இருக்கும் இந்த இடத்தை எல்லையில் இருந்து 1 கிமீ தாண்டி தான் இருக்கிறது என்று பொய் சொல்லி ஏமாற்றி இங்கே கட்டிடம் கட்ட தடை இல்லா சான்றிதழையும் அதே திமுக அரசின் சுற்றுச்சூழல்துறை வழங்குகிறது. அந்த சான்றிதழ் அடிப்படையில் தான் இந்த கட்டிட அனுமதியை சேகர் பாபு தலைமையிலான cmda கொடுக்கிறது. இந்த விஷயத்தை தான் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் வெளியிட்டு புகார் அளித்தது. ஆனால் திமுக ஆட்சி முடியும் வரை இது குறித்து ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோர் வாய் திறக்காமல் மவுனம் காத்தனர்.
தேர்தல் முடிந்து திமுக ஆட்சி மீண்டும் வராது என்று உறுதியான பிறகு விஜய் முதல்வராக பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சுற்றுச்சூழல்துறை அவர்கள் கொடுத்த தடை இல்லா சான்றிதழை விலக்கிக் கொள்கிறார்கள். இதனடிப்படையில் அந்த NOC மூலம் வாங்கப்பட்ட CMDA அனுமதியும் செல்லாமல் ஆகும் நிலை வருகிறது.
உண்மை நிலவரம் இப்படி இருக்க சீர்கேட் நிறுவனம் இதை எல்லாம் மறைத்துவிட்டு NGT தற்காலிக தடை விதித்த 1கிமீ சுற்றளவில் நிலம் வைத்திருப்பவர்களிடையே ஒரு பயத்தை உருவாக்க கடந்த ஒரு மாதமாக பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. இதன் விளைவாக தான் கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு படங்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் கண்ணில் பட்டிருக்கும். சென்னையில் வளர்ச்சிக்கு தடை, வேளச்சேரியில் வீடு வாங்கியவர்களுக்கு பாடை என்ற ரீதியில் பீதியை கிளப்பிக் கொண்டு இருந்தார்கள். உண்மை என்னவென்றால் ராம்சார் எல்லைகளை உறுதி செய்து அறிவித்துவிட்டால் இந்த 1 கிமீ தற்காலிக தடையை NGT விலக்கிக் கொள்வார்கள். குறைந்த பட்ச அளவிற்கு எல்லையை பாதுகாக்க 50 மீட்டர் வரை கட்டுமான அனுமதிக்கு தடை விதிக்கலாம்.
சீர்கேட் நிறுவனம் இப்படி பீதியை கிளப்பி என்ஜிடி உத்தரவால் தான் தங்கள் கட்டிடமும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற ஒரு பொய்யை உண்மையாக்க முயற்சி செய்து அப்படியே உச்சநீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அனுமதியை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்கள். இந்த அனுமதியை நீக்கியதால் எங்களை போலவே பல்வேறு மக்கள் சென்னையில் தங்கள் நில உரிமையை இழக்கிறார்கள் போன்ற கட்டுக்கதைகளை பரப்பி உச்சநீதிமன்றத்தை ஏமாற்றி விடலாம் என்று இந்த வேலையை செய்துள்ளார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இன்று அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து நீங்க NGT அல்லது உயர்நீதிமன்றம் சென்று வழக்கு போடுங்கள் என்று விரட்டி விட்டிருக்கிறது. இதனால் ஒரு மாத காலமாக சென்னை மக்களை பீதியில் ஆழ்த்தி இவர்கள் செய்த தில்லுமுல்லு வேலைகள் பயனில்லாமல் போனது.
இந்த சீர்கேட் நிறுவனம் தொடர்ந்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதை தடுக்க விஜய் அரசு உடனடியாக இவர்களுக்கு கொடுக்கப்பட்ட CMDA அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அடுத்து திமுக அரசு செய்யாமல் விட்டுச்சென்ற ராம்சார் எல்லைகளை களத்தில் உறுதி செய்யும் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். அல்லது அதை விரைந்து முடிப்போம் என்று NGTயிடம் முறையிட்டு இந்த 1கிமீ தற்காலிக தடையை உடனடியாக நீக்க வேண்டும்.
@CMOTamilnadu@CMDA_Official@TVKVijayHQ
In any sane nation, everyone in the chain from the department head to the site engineer, would lose their jobs over this.
The minister in charge at the time would likely face criminal prosecution.
But in India, corruption has been normalized to the point where accountability is almost nonexistent :((
*முதல்வர் விஜய் கண்டெடுத்த மாணிக்கம் அருண் ஐபிஎஸ் லீலைகள்*
தமிழக அரசு அருண் ஐபிஎஸ்ஸை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமித்த நாள் 25 மே 2026.
அருணுக்கு சென்னை மாநகர விபச்சார தடுப்பு பிரிவின் ஆய்வாளர் ராஜலட்சுமி, இரண்டு வருடங்களாக மாதம் 20 லட்சம் மாமூல் கொடுத்து வந்ததை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.
அருணுக்கு பல வகைகளில் பணம் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கையில் இந்த ராஜலட்சுமியை காப்பாற்ற வேண்டும் என்று ஏன் இவ்வளவு கடுமையாக மணக்கிறார் என்று காவல்துறையில் விசாரித்தபோது, விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது பணம் மட்டுமல்லாமல், பெண்களையும் சப்ளை செய்திருக்கிறார் ராஜலட்சுமி என்ற தகவல் வருகிறது. 1/2
இதனால்தான், எப்படியாவது ராஜலட்சுமியை காப்பாற்ற வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்தார் அருண்.
அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக பதவியேற்ற ஒரே வாரத்தில் ராஜலட்சுமி தன் மீது லஞ்ச ஒழிப்புதுறை பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார்.
இந்த வழக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் விசித்திரமாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை ராஜலட்சுமிக்கு எதிராக பதிவு செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் முகாந்திரம் இருக்கிறது என்று, வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது.
இதையடுத்து அருண் ராஜலட்சுமியை காப்பாற்ற செய்த தந்திரம்தான், ராஜலட்சுமி மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் விமலாவை சஸ்பெண்ட் செய்தது.
ராஜலட்சுமி மீது பதிவு செய்த வழக்கு தவறானதென்று, நடவடிக்கை எடுத்து விமலாவை சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால், அந்த ஒழுங்கு நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு, ராஜலட்சுமி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, வழக்கை ரத்து செய்யமுடியும். வழக்கு பதிவு செய்ததே தவறு என்று வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், என் மீதான வழக்கை ரத்து செய்யுங்கள் என்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அணுகினால், New facts, new circumstances என்ற அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யகூடும் என்று அருண் மற்றும் ராஜலட்சுமி போட்ட திட்டத்தின் விளைவே விமலாவின் பணி இடைநீக்கம். 2/2
என்ன செய்யப்போகிறார் முதல்வர் @CMOTamilnadu ?
உடல் நலக்குறைவால் மரணித்த நண்பர் கே. பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்ததன் மூலம் பிறிதொரு உயிருக்குப் பார்வையளித்துச் சென்றிருக்கிறார். அவர் மாபெரும் ஆளுமை மட்டுமல்ல மகத்தான மானுடநேயரும் கூட. அவர் என் தோழர் என்பதில் பெருமிதம் அடைகிறேன்.
எடப்பாடி அதிமுகவை காலி செய்தது போல உதயநிதி திமுகவை காலி செய்வார். செங்கலை தூக்கிக் கொண்டு அவர் மட்டுமே நக்கலும் நையாண்டியும் செய்து கொண்டு இருக்கலாம் என்று நினைத்துவிட்டார் போல.
ஒரு துணை முதல்வராக, திமுக ஆட்சியில் அறப்போர் வெளியிட்ட ஒரு ஊழல் புகார் பற்றியும் அவர் வாய் திறந்ததில்லை. தொடர்ந்து ட்விட்டர் மூலம் tag செய்யவே அறப்போர் ட்விட்டர் idஐ பிளாக் செய்து ஓடி ஒளிந்து கொண்டார் இந்த சூராதி சூரர். அதுவும் அவருடைய தொகுதியில் இருந்த ஒரு பழைய அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அங்கே புதிய பள்ளி கட்டிடம் கட்டி தருவதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு, கட்டிடத்தை இடித்த பிறகு திருமண மண்டபம் கட்ட போவதாக அந்த பகுதி கவுன்சிலர் மூலம் காய் நகர்த்தினார். அறப்போர் இயக்கம் சரியான நேரத்தில் தலையிட்டு அந்த மோசடியை அம்பலப்படுத்தியதால் வேறு வழி இல்லாமல் அங்கே மீண்டும் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு பிறகு தான் அறப்போர் ட்விட்டர் id block செய்யப்பட்டது.
Anti-democratic: TVK government has stopped the live telecast of Tamil Nadu Assembly proceedings. In the past two press meets, the Assembly Speaker JCD Prabhakar clearly hinted that there would not be live telecast of Assembly proceedings. Whenever I had a chance, I had been questioning the former Speaker M Appavu in Tirunelveli about DMK’s election promise of live-telecast. Now the new regime has also killed it.
So much for ‘transparency” and “new politics.”
People of Tamil Nadu deserve to see what their elected representatives are doing inside the Assembly. This decision is anti-democratic and a betrayal of public trust.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராவது பெரும்பாக்கம் பிரிகேட் நிறுவனத்தின் வீடுகளை வாங்க நினைத்திருந்தாலோ அல்லது அட்வான்ஸ் கொடுத்திருந்தாலோ அவர்களை உடனடியாக எச்சரியுங்கள். நீங்கள் அந்த கட்டிடத்தில் செய்யும் முதலீடு முழுக்க முழுக்க வீண்.
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைப்படி, முன்னாள் cmda அமைச்சர் சேகர் பாபு அப்பட்டமாக விதிகளை மீறி பாதுகாக்கப்பட்ட ராம்சார் நிலத்தின் உள்ளேயே 1250 வீடுகள் கட்ட கொடுத்த கட்டிட அனுமதி விரைவில் ரத்தாக வாய்ப்புள்ளது.
ஸ்டாலின் ஏன் தோற்றார் என்று ஒரு மாதமாக ஒப்பாரி வைப்பவர்களுக்கு இது போல பல காரணங்களை சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. ரீல்ஸ் போடாததால் தான் ஸ்டாலின் தோற்றார் என்ற நம்பிக்கையிலேயே அவர்கள் இருக்கட்டும்.
#Brigade #Ramsar #SekarBabu #Stalin #Dmk
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னையின் வெள்ளத்தை தாங்கக்கூடிய பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், ராம்சார் நிலம் என்று அறிவிக்கப்பட்ட கட்டிடங்கள் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியில் மிகவும் துணிச்சலாக, உட்சபச்ச திமிர் கொண்டு, பல அரசு துறைகள் இணைந்து மோசடி செய்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு (Brigade Heights) 1250 வீடுகள் கட்ட அனுமதி கொடுத்துள்ளனர். அந்த நிறுவனமும் பாதுகாக்கப்பட்ட சதுப்பு நில பகுதியில் மணலை கொட்டி கட்டுமான வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.
இந்த மோசடியை செய்தவர்கள் மீது TVK அரசு இது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை..? அந்த இடத்தில் மோசடியாக கொடுக்கப்பட்ட cmda அனுமதி ஏன் ரத்து செய்யப்படவில்லை? இந்த நிறுவனம் கட்டும் வீடுகளை வாங்கி நாளை இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் பாதிக்கப்பட போகும் மக்களுக்கு TVK அரசு பதில் சொல்லுமா?
@CMOTamilnadu@CMDA_Official@Chief_Secy_TN@CmcellTamilNadu@TVKVijayHQ