#BREAKING | திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை
#SunNews | #Thiruparankundram | #MadrasHC
நிர்வாண வீடியோ கேட்டு
புள்ளி வைப்பவர்களின் விரல்கள்
ஒருமுறைகூட கூசுவதில்லை
' லிங்க் ப்ளீஸ்' என கெஞ்சும் குரல்கள்
குற்ற உணர்வில்
ஒருமுறைகூட நடுங்குவதில்லை
'இன்பாக்ஸிற்கு' வரச்சொல்லி
பகிர்பவர்களின் ���ண்கள்
ஒருமுறைகூட அவமானத்தில் தாழ்வதில்லை
காணாத எதைத்தான்
காண விரும்புகிறார்கள்?
எத்தனை எத்தனை
ஆடையற்ற மேனிகளைக் கண்டாலும்
அவர்கள் ஒளியிழந்த கணகள்
ஒரு உடலின் வசீகரத்தை
ஒருபோதும் கண்டதேயில்லை
ஒருமுறையாவது எங்கேனும்
அதைக் கண்டுவிடலாம் என்றுதான்
ஒவ்வொருவராக பின்தொடர்கிறார்கள்
அறியப்பட்ட ஒரு��்தியின் ஆடையின்மை
அறியப்படாத ஒருத்தியின் ஆடையின்மையைவிட
பலமடங்கு ஆர்வமுடையதாகிவிடுகிறது
அது பரவுகிறது விஷக் காற்றைப்போல
ஒரு கூட்டுப் பலாத்கார வெறிக்கூச்சலின்
எளிய வடிவம் அங்கே நிகழ்கிறது
யாரோ அதைப் பார்க்கிறார்கள்
யாரோ அதைப் பகிர்கிறார்கள்
அந்த உடல் ஒரு மழைக்கால மின்னல்
அது ஒரு கணம் தோன்றி மறைகிறது
ஒருவராலும் அதைக் கையில் பற்றமுடியாத மின்னல்
தோல்வியுற்றவர்கள்
அ��ுத்த மின்னலுக்கு காத்திருக்கிறார்கள்
அடுத்த மின்னலுக்கு
அடுத்த மின்னலுக்கு
அடுத்த மின்னலுக்கு
ஒரு மாமிசத் துண்டுக்காக
எத்தனை நா*ய்கள் குரைக்கின்றன
ஒரு நா*ய் புகார் செய்கிறது
" பிரிண்ட் சரியாக இல்லை"
அந்த நடிகை புன்னகையுடன் கூறுகிறாள்
" அடுத்த முறை சிறப்பாகச் செய்யலாம் சகோதரா"
இன்னொரு நடிகை சொல்கிறாள்
" என் உடலை நான் கடந்துவிட்டேன்
நீங்கள் எப்போது கடக்கப் போகிறீர்கள���?"
மொத்த உலகமும்
கசாப்புக் கடையின் கிடங்குபோல காட்சியளிக்கிறது
உரிக்கப்பட்டு தொடங்கும் உடல்கள்
ரத்தக் கவுச்சி வேட்கை
மாமிச ருசி வேட்கை
ஒரு உடல் எப்போதும்
வெல்ல முடியாததாக இருக்கிறது
அதிலும் ஆடையற்ற ஒரு பெண் உடல்
வெல்லவே முடியாததாக இருக்கிறது
அது ஏதோ ஒரு மர்மத்தை
எப்போதும் ஒளித்துவைத்துக்கொள்கிறது
உடலின்முன் தோல்வியடைபவர்கள்
புள்ளி வைக்கிறார்கள்
சாவித்துவாரங்களில்
தங்கள் கண்களை பதிய வைக்கிறார்கள்
ஆடையற்ற உடல்கள்
ஒரு பனிமூட்டமாக
எங்கும் நிரம்பிக்கொண்டிருக்கிறது
13.10.2024
பகல் 12.17
மனுஷ்ய புத்திரன்
தேசிய கீதத்தை புறக்கணித்து வெளியேறியது ஆளுநர் தான்
என்பதை நாம் உரக்கச் சொல்வோம்!
ஏனைனில் இதை சொல்ல வேண்டிய ஊடகங்கள் பாசிசத்தின் காலடியில் வீழ்ந்து கிடப்பதால்
29 ஆம் தேதிகொண்ட
லீப் வருட பிப்ரவரியின்
முதல் நாளுக்கு
உங்களை வரவேற்கிறேன்
இந்த பிப்ரவரி 29 பிறப்பவர்களுக்கு
நான்காண்டுகளுக்கு ஒருமுறைதான்
பிறந்த நாள் வரும்
அன்றைய தினம்
இறப்பவர்களுக்கு
நான்காண்டுகளுக்கு ஒருமுறைதான்
நி���ைவுதினம் வரும்
அன்றைய தினம் எடுக்கும் முடிவுகள்
அன்றைய தினம் பட்ட அவமானம்
அன்றைய தினம் செய்யும் பயணம்
அன்றைய தினம் செய்யும் துரோகம்
எல்லாவற்றையும்
நான்காண்டுகளுக்குப்பிறகு
நினைத்துக்கொண்டால் போதும்
நான் பிப்ரவரி 29
ஒரு புதிய காதலைத் தொடங்குவேன்
அது அடுத்த லீப் வருடம்வரை
நிலைத்திருக்கிறதா பார்ப்போம்...
1.2.2024
காலை 7.01
மனுஷ்ய புத்திரன்