மயிலாடுதுறை மாவட்ட இளைஞர் அணி சார்பில், ஒன்றிய-நகர-பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மயிலாடுதுறை அண்ணா பகுத்தறிவு மன்றத்தில், 17.11.2026 அன்று மாவட்டக் கழகச் செயலாளர் @Nivedhamurugan_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் 50-வது பிறந்தநாள் விழாவை, எளிய மக்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுவது குறித்தும், எதிர்வரவுள்ள இடைத்தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் @ilaiyadmk, மயிலாடுதுறை நகரச் செயலாளர் @Selvaraj_DMKMYL ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
@mkmaruthudmk #DMKYouthWing #DMK4TN
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு எந்தக் காரணமுமின்றி உதவித் தொகையை நிறுத்த முற்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.
முன்னாள் நிதித்துறை அமைச்சர் திரு. @TThenarasu எம்.எல்.ஏ. அவர்கள்
TVK ஆட்சியில் Vice City ஆகும் தமிழ்நாடு!
சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த மாதம் நாகையில், 270 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளுடன் த.வெ.க. நிர்வாகியான 'மெத்' பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே DRI அமைப்புதான் இதனையும் பிடித்துள்ளது. நம் மாநிலத்தில் அவர்கள் மாதாமாதம் பிடிக்கிறார்கள்.
இதில் நமக்கு எழும் கேள்வி என்னவென்றால், தமிழ்நாட்டுக்குள் நடக்கும் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருள் நடமாட்டங்களை மாநில அரசின் காவல்துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை?
பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா? முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழ்நாடு இப்போது மெத், ஹெராயின் கடத்தல்காரர்களின் favourite destination ஆகிவிட்டது.
தொடரும் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, த.வெ.க.வினரின் கட்டுக்கடங்காத பாலியல் அத்துமீறல்கள், மாபெரும் கொள்ளைச் சம்பவங்கள், குலைநடுங்க வைக்கும் லாக்கப் மரணங்கள் என TVK ஆட்சியில் தமிழ்நாடே Vice City ஆகிக் கொண்டிருக்கிறது.
இவற்றில் இருந்தெல்லாம் திசைதிருப்ப நேற்று புள்ளிவிவரங்களை ஒப்பித்த காவல்துறைத் தலைவர் இந்த ஹெராயின் பறிமுதல் குறித்து என்ன சொல்லப் போகிறார்? எல்லவாற்றுக்கும் 'வழக்கு பதியப்பட்டுள்ளது' என்பதை மட்டுமே பதிலாகத் தரும் அவர், மாநில அரசின் அமைப்புகளால் ஏன் போதைக் கடத்தல்காரர்களைப் பிடிக்க முடியவில்லை என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க அமைக்கப்பட்ட 65 சிறப்பு அதிரடிப் படை என்ன செய்துகொண்டிருக்கிறது?
முதலமைச்சர் விஜய் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையில் இத்தனை பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கிறது. இப்போதும் பேசவில்லை என்றால் எப்போதுதான் அவர் பேசுவார்?
த.வெ.க. ஆட்சியில் அக்கட்சியின் ரீல்ஸ்மோகிகள் சட்டவிரோதமாக அணையைக் கூட திறக்கிறார்கள். ஆனால், முதலமைச்சர் விஜயின் வாயை யாராலும் திறக்க முடியவில்லையே!
#TVKfails
செஞ்சி சிறுமி மாயமாகி இன்றுடன் 37 நாட்கள் கடந்துவிட்டன. இந்த டம்மி அரசின் அலட்சியத்தால், சிறுமி இன்னும் மீட்கப்படாமல் இருக்கிறார்.
நிர்வாகம் தெரியாத ஒரு டம்மி அரசின் அலட்சியம் என்னவெல்லாம் செய்யும் என்பதை, இது நொடிக்கு நொடி காண்பித்துக் கொண்டிருக்கிறது
#TVKFailsTN
நேரு பிறந்தநாளான குழந்தைகள் தினத்தில் நேருவின் புகைப்படம் இல்லாமல், விளம்பர வெறி கொண்ட டம்மி மாமாவின் புகைப்படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. பதவிக்காக காங்கிரஸ் வாய் மூடி மௌனமாக இருக்கிறது; பதவிக்காக நேருவை மறந்துவிட்டனர்.
முதியவர் எரித்துக் கொலை, 5 பெண்கள் அடுத்தடுத்து மாயம், காவல் நிலைய வாசலிலேயே பெண் தீக்குளிப்பு என த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது!
#LawAndOrderFail#TVKVijayFails#DummyCM#TVKCrimes
செஞ்சியில் சிறுமி மாயமாகி 34 நாட்களாகியும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம். பி. அவர்கள் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.