அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் 2022, ஆசியான் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக்கொள்ள தகுதிப் பெற்றுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த ஜஸ்வினை அவரின் குடும்பத்துடன் சந்தித்து பேசினேன். திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி பதக்கம் வெல்ல வாழ்த்துகளை தெரிவித்தேன்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திரைப்பட நடிகர் சத்தியராஜ் அவர்கள் இன்று தாய்மண் அலுவலகத்தில் சந்தித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் திருமா இரவு பாடசாலைக்கு கணினியை வழங்கினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் கழகத்திற்கு பெரும் வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் தமிழகஅரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்புகளையும் விளக்கி கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும், நமது கழக அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பினை விளக்கவும் சென்னை வடக்கு மாவட்ட திமுக ஒருங்கிணைத்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். (1/2)
சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு. தா. இளைய அருணா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐட்ரீம்ஸ் R. மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். (2/2)