கட்சியில் இருக்கறவன் பாதி பேர் ஒன்னு பொம்பள கேஸ்ல இருக்கானுங்க.
இல்லனா போதை பொருள் கடத்தன கேஸ்ல இருக்கானுங்க.
ஆனா எவ்வளவு confident ha தூய சக்தினு சொல்றான் பாரு.
பார்ட் பார்ட்டாக சொல்கிறோம்..
பார்ட் -1
40-50 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் அதிகமாக கூடும் மார்க்கெட் பகுதி மற்றும் தியேட்டர்களுக்கு முன்பு மூன்று சீட்டு என்று ஒருவகை சூதாட்டம் நடக்கும்.
மூன்று சீட்டுக்களை பக்கத்தில் பக்கத்தில் இடம் மாற்றி பரப்பி கொண்டே இருப்பார்கள். மூன்று சீட்டுகளின் அடியில் ஒரு சீட்டின் அடியில் மட்டுமே படம் இருக்கும்.
அந்த சீட்டை சரியாக கணித்து அதன் மீது பணம் வைத்து வெல்பவர்களுக்கு இரண்டு மடங்காக கிடைக்கும். படம் இல்லாத சீட்டு மேல் வைத்தவர்கள் காசு அம்பேல். சீட்டுகளை திருப்பிப் பார்த்து ரிசல்ட் சொல்லும் கம்பெனிக்கு போய்விடும்.
பார்ட் 2..
சூதாட்டம் தொடங்கியதும், சுற்றி 20 பேர் நிற்கிறார்கள் என்றால் அதில் மூன்று நான்கு பேர் மட்டும் ஒவ்வொரு முறையும் பணம் வைத்து மாறி மாறி ஜெயித்து பணத்தை வாரிக் கொண்டே இருப்பார்கள்.
சூதாட்டம் நடத்துபவரிடமே உன் பணம் எல்லாம் இன்னைக்கு காலி மகனே" என்று கலாய்ப்பார்கள்.
இந்த வெற்றி கில்லாடிகள் காட்டும் படு ஓவரான அலட்டலும் உற்சாகமும் சுற்றி நிற்கும் மற்றவர்களையும் உசுப்பேற்றும்.
அவர்களும் காசு வைத்து விளையாட ஆரம்பிப்பார்கள். முதலில் ஒன்று இரண்டு முறை வெல்வார்கள். பேராசை பெருக பெருக அதிக அளவில் தொகை வைத்து விளையாட ஆரம்பிப்பார்கள். அப்புறம்தான் கச்சேரி.
பெருந்தொகைகளை சீட்டில் எவரெவர் இறக்குகிறார்களோ அவர்களெல்லாம் என்ன பண்ணாலும் ஜெயிக்கவே முடியாது. கடைசியில் பாக்கெட்டில் வைத்திருந்த மொத்த பணத்தையும் இழந்து விட்டு அங்கேயே அழுவார்கள்.
சூதாட்டம் தொடங்கிய போது தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் மூன்று பேர் என்றால் அவர்களைப் பார்த்து பணத்தை இழந்தவர்கள் 100 பேர் வரை தேர்வார்கள். அதாவது அந்த மூணு பேரை பார்த்து இந்த 97 பேர் மோசம் போயிருப்பார்கள்.
இப்போ பார்ட் 3..
அது எப்படி நூறு பேரில் 97 பேரை சூதாட்ட கும்பலால் தோற்கடிக்க முடிகிறது என்ற கேள்வி உங்களுக்கு தோன்றும். நியாயம்தான்.
ஆரம்பத்தில், கும்பலில் நின்று சீட்டு மேல் விளையாடி ஜெயிப்பவர்கள் வேறு யாரும் அல்ல, அவர்களும் சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்கள் தான்.
அவ்வளவு வேகமாக மாற்று மாற்றி வைக்கப்படும் சீட்டுகளில் அவர்களால் மட்டும் எப்படி படம் இருக்கும் சீட்டை கண்டுபிடித்து அதன் மேல் பணம் வைத்து ஜெயிக்க முடிகிறது?
சூதாட்டம் நடத்துபவன் தன்னுடைய ஆட்களுக்காக ஒரு பாடலை படு ஸ்பீடாக தொடர்ந்து படிப்பான். அதில்தான் காசு வைப்பவர்களுக்கான கோடுவேர்ட்.
மாத்தி போடுறது என் சாமர்த்தியம் பார்த்து கட்றது உன் சாமர்த்தியம்.
முகம் பார்த்தா சுகம் கிடையாது.
ஆலக்கா ஈலக்கா அந்த்துரு ஒக்கே லக்கா.
ஆலக்கா என்றால் படம் உள்ள கார்டு அந்த பக்கம். ஈலக்கா என்றால் கார்டு இந்த பக்கம். அந்துரு ஒக்கே லக்கா என்றால் கார்ட்டூன் நடுவில் உள்ளது என்று அர்த்தம்.
சூதாட்டக்காரன் கடைசியாக இந்த மூன்று வார்த்தைகளில் எதை சொல்லி நிறுத்துகிறானோ கார்டு படம் அங்கே இருக்கிறது என்று அர்த்தம். அதை வைத்து சூதாட்ட கும்பல் ஆட்கள் படம் உள்ள கார்டு மீது பணம் வைத்து சுலபமாக ஜெயிப்பது போல் காட்டுவார்களாம்….
கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும்🫤
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமே கிடையாது..
கடந்த 10 வருடங்களாக, எடப்பாடியை நேரமையாக எதிர்கொண்டு அழிக்கமுடியவில்லை.. அவர் பல கொடூர திட்டங்களை தமிழகத்தில் கொண்டுவர முட்டுக்கட்டையாக இருந்தார்.. ஒரு கோமாளியை வைத்து நாடகம் நடத்துகிறார்கள்..
மதுராந்தகத்தில் இயந்திரம் பழுதாகவில்லை ஏன் என்றால் TVK leading.
அதிமுக முன்னிலை என்று வந்தவுடன் இயந்திரம் பழுது, நிறுத்திவைப்பு, பிறகு தொடக்கம், TVK முன்னிலை...
உடுமலை ராதாகிருஷ்ணன் சொன்னார், வெயிட் and see, TVK lead எடுக்கும் என்று.
2021 அதிமுக 105 தொகுதி முன்னிலை, பிறகு 75 தொகுதியில் சுருண்டது
2026, 78 தொகுதி முன்னிலை பின்பு 47 சுருண்டது
இந்த இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை பின்பு மூன்றாவது இடம். முன்னிலை வகிக்கும் கட்சி இரண்டாம் இடம் வரும், அதெப்படி முன்னிலையில் இருந்த கட்சி திடீர் என்று மூன்றாவது இடம்? அதிமுக வேட்பாளர் விலை போய்விட்டாரா? இது match fixing ah?
எதற்கு செங்கோட்டையன் அருண்ராஜ் ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் தொகுதிக்கு வெளியில் உள்ள சில கிலோமீட்டரில் தங்கி உள்ளார்கள் இந்த தேர்தல் நியாயமாக நடைபெறுமா?
ஆளும் கட்சி சேர்ந்த ஆட்கள் ஏன் இன்னும் தொகுதிக்குள் சுற்றித் வருகிறார்கள்? காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அவர்களை வெளியேற்ற வேண்டாமா ?
@TNelectionsCEO
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial