மனோகரா..!
"ஒரு பேரியக்கத்தின் அஸ்தமனம்" என எழுதிய ஒரு நாளேட்டின் மையக்கருத்து யாதெனில் திமுகவில் வாரிசு அரசியல் சண்டை மூளுகிறது, அதனால் அந்த கட்சி இறுதி அத்தியாயத்தை நோக்கி செல்கிறது என்றார் அன்றைய நாளேட்டின் ஆசிரியர் "சமஸ்" இந்த கட்டுரை வெளிவந்து ஏறத்தாழ பத்தாண்டுகாலம் கடந்து விட்டது ..! ஆதிக்க சாதி வெறியர்கள் நிறைந்த இந்த காலத்திலேயே இப்படியான ஒரு தலைப்பு செய்தி கட்டுரையை திமுகவின் மீது ஏவி இருக்கும் என்றால்? 60 -90 காலகட்டங்களில் முழுக்க முழுக்க பார்ப்பானிய கட்டுப்பாட்டில் இருந்த ஊடகம் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்..! குண்டுமணி அளவு நினைத்தாலும் குலை நடுங்குகின்றது ..!
அரவணைக்கும் ஆற்றல், பொறுமையான தோற்றம், நிதானம் இழக்காமை, கொடுஞ்சொல்லோர் கேட்பு, எதிரியை தேற்றல், கொடும்பகைவர் எதிர்ப்பு என தனது அசாத்திய புத்தியால் வென்றார்..!
என் மகனை நான் சரியாக வளர்க்க தவறினேன் போதைக்கு அடிமையானான், உன்னை தான் திட்டி தீர்ப்போம் ..!
என் மகனை மாற்று சாதி பையனை காதலித்தால், உன்னை தான் திட்டி தீர்ப்போம் ..! பிறகு ஆதிக்க சாதி வெறியர்களின் கோர தாண்டவத்தால் அவன் படுகொலை செய்யப்பட்டால் அதற்கும் உன்னை தான் திட்டிதீர்ப்போம்..!
சரி அந்த படுகொலை செய்தவனுக்கு காவல்துறையால் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கும் நான் உன்னை தான் திட்டுவோம்..!
காவல்துறையின் பிடியில் சிக்கினால் சின்னாபின்னமாகிவிடுவோம் எனத்தெரிந்தே பெண்கள் இருக்கும் விடுதிக்கோ அல்லது வீட்டிற்கோ சென்று வன்கொடுமை செய்யும் என் தறுதலை மகன் செய்யும் இந்த வக்கிர புத்திக்கும் உன்னை தான் திட்டுவோம், பிறகு அவனுக்கு ஏதேனும் ஆனால் அதற்கும் உன்னை தான் திட்டுவோம்..!
டாஸ்மாக் மூடுவோம் என்று நீ சொன்னால் உனக்கு வாக்களிக்க மாட்டோம். ஆட்சிக்கு வந்து மூடாவிட்டால் உன்னை தான் திட்டுவோம்..!
ஏங்கோ நடக்கும் ஒரு ஈனச்செயலுக்கு உன்னை தான் திட்டுவோம்..!
எங்கோ ஒரு திமுககாரனின் பெரியப்பாவுக்கு பிறந்த பையனின் மகள் வயிற்று பேரன் பரோட்ட கடையில் காசு கொடுக்காமல் சண்டையிட்டால் அதற்கும் உன்னை தான் திட்டுவோம்..!
எனக்கு இரட்டிப்பு பொருளாதார வளர்ச்சி பற்றி தெரியாது..!
காலை உணவு திட்டம் பற்றி தெரியாது..!
மகளிர் இலவச பேருந்து பயணம் பற்றி தெரியாது...!
மகளிர் உரிமைத் தொகை பற்றி தெரியாது..!
தோழி விடுதி பற்றி தெரியாது..!
புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் பற்றி தெரியாது..!
நலம் காக்கும் ஸ்டாலின் பற்றி தெரியாது..!
நம்மை காக்கும் 48 மணிநேரம் பற்றி தெரியாது..!
அன்புக்கரங்கள் திட்டம் பற்றி தெரியாது..!
அன்புச்சோலை திட்டம் பற்றி தெரியாது..!
மெரினா ஆதரவற்றோர் கூடம் பற்றி தெரியாது..!
பெரியார், கலைஞர் நூலகங்கள் பற்றி தெரியாது..!
மாற்றுத்திறனாளி நலம் திட்டம் பற்றி தெரியாது..!
பன்னாட்டு நகரம் திட்டம் பற்றி தெரியாது..!
அமுதகரங்கள் திட்டம் பற்றி தெரியாது..!
அம்பேத்கர் அயலக உதவித் தொகை திட்டம் பற்றி தெரியாது..!
நான் முதல்வன் திட்டம் பற்றி தெரியாது..!
உலகத்தரம் வாய்ந்த பன்னோக்கு மருத்துவமனை பற்றியும் தெரியாது..!
மாவட்டந்தோறும் புதிய பேருந்து நிலையங்கள் பற்றி தெரியாது..!
தாயுமனவர் திட்டம் பற்றி தெரியாது.!
கிராமங்கள் தோறும் ஊராட்சி-மாவட்டம் இணைப்பு சாலைகள் பற்றி தெரியாது ..!
வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தகுதியான வேலைவாய்ப்பு பெருக்கம் திட்டம் பற்றி தெரியாது..!
குடும்பத் தலைவி பெயரில் தான் நியாயவிலைக்கடை அட்டை வழங்கும் திட்டம் தெரியாது..!
இதையெல்லாம் தெரிந்தால் நான் ஏன் உன்னை திட்டப்போகிறேன் ..!
எனக்கு தெரிந்த தெல்லாம் நீயும் உங்க அப்பனும் செய்த திட்டங்களில் எல்லாம் பாமரனுக்கு சென்று சேர்ந்தது..!அதனால், எனக்கு வயிறு எரிகின்றது..! வளர்ச்சி அடைந்த இந்த தமிழ்நாட்டை அடுத்த ஐந்து வருடத்திற்கு கொண்டு செல்லும் உங்களின் சாத்தியக் கூறுகளை கண்டு எனக்கு இன்னும் உங்கள்(ளை) திட்ட(ம்) வேண்டும் ..!
மீண்டும் ஒரு பெரிய புரட்சி அதற்கான சொல்லாதிக்கம், செயல் திட்ட பரவல், இதை காண நான் உன்னை திட்ட வேண்டும்..!
மீண்டும் வா தலைவனே.!
வென்று வா ஸ்டாலினே..! 🔥🔥🔥🔥
#Dmk_2PointO
நான் வெளிநாட்டில் வசித்தாலும் ஏன் திமுகவை ஆதரிக்கிறேன்?
இந்த கேள்வியை பலர் என்னிடம் கேட்கிறார்கள்.
என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே என் பதில் வருகிறது.
1. சமூக சேவகர் ஆன என் அப்பாவை பார்த்து வளர்ந்தேன். சமூகத்தின் அடிப்படைகளை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
2. அவர் வீட்டிற்கு கொண்டு வந்த செய்தித்தாள்கள், இதழ்கள் மூலம் அரசியல் எப்படி வேலை செய்கிறது என்று புரிந்துகொண்டேன்.
3. தஞ்சாவூரில் என் பள்ளி காலத்தில் இரண்டு ஆட்சிகளை பார்த்தேன்:
* 1991–1995: ஜெயலலிதா ஆட்சி - மிகவும் கொடுமையான ஆட்சியாக நான் உணர்ந்தேன். பின்னர் அவர் வழக்கில் தண்டிக்கப்பட்டதையும் பார்த்தோம்.
* 1996–2000: திமுக ஆட்சி - மாணவனாக நான் இலவச பேருந்து பாஸ் பெற்றேன்; உழவர் சந்தை, டைடல் பார்க் போன்ற திட்டங்களை நேரில் கண்டேன்.
4. கல்லூரி காலத்திலும் அரசியலை கவனித்தேன். வீட்டில் திராவிட இயக்கப் பின்னணி அதிகம் இல்லாவிட்டாலும், கலைஞரின் உழைப்பு, அறிவு, தமிழ்பற்று என்னை ஈர்த்தது. 2000-ல் டைடல் பார்க்-ல் இறுதி ஆண்டு project செய்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.
5. சென்னை IT துறையில் வேலை தொடங்கி வளர்ந்தேன். 2008-ல் ஈழப் பிரச்சினை என்னை மிகவும் பாதித்தது. முழு பின்னணி தெரியாமலேயே, அருகிலேயே தமிழ் மக்கள் கொல்லப்படுவது மனதிற்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்திய அரசியலை எதிர்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தேன்.
6. அந்த நேரத்தில் முழு புரிதல் இல்லாமல் தமிழ் தேசியத்தைப் பற்றி பேசினேன். கலைஞரை கூட விமர்சித்தேன் - அவரால் எதையும் சாதிக்க முடியும் என்று தவறாக நினைத்தேன்.
7. 2009-2013 காலத்தில் நான் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தேன். தமிழ் தேசியவாதிகளுடன் இணைந்து எழுதினேன், கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
8. 2014 என் வாழ்க்கையில் பெரிய திருப்பம். இந்துத்துவ அரசியல் எழுச்சி, நரேந்திர மோடி வருகை எனக்கு கவலை அளித்தது. தஞ்சாவூரில் வளர்ந்த எனக்கு மதம் எப்போதுமே தடையாக இல்லை. விபூதி/குங்குமம் இன்றி வெளியே போகாத என் அப்பா - வேளாங்கண்ணி, நாகூர் தர்கா எல்லாம் இன்னொரு கோவிலாகவே அழைத்துச் செல்வார். அந்த ஒற்றுமைக்கு இந்துத்துவம் ஒரு அச்சுறுத்தலாக தோன்றியது.
9. லண்டனில் நான் இருவிதமான மக்களை சந்தித்தேன்:
* ஈழத் தமிழர்கள் - அவர்கள் ஸ்ரீலங்கா பிரச்சினையின் உண்மையை புரிய வைத்தார்கள். இது ஒரு பன்னாட்டு அரசியல் விஷயம், தமிழ்நாடு தலைவர்களால் மட்டுமே தீர்க்க முடியாதது என்று உணர்ந்தேன். LTTE பற்றிய மற்றொரு பார்வையும் தெரிந்தது.
* சில வடஇந்தியர்கள் – அவர்களிடம் முஸ்லீம்கள் மீது இருக்கும் வெறுப்பு, தமிழ்நாட்டுச் சமுதாயம் அவர்களிடமிருந்து எவ்வளவு வேறுபட்டது என்பதை உணர்த்தியது.
10. இந்த காலத்தில் திமுக ஆதரவாளர்களுடன் ஆன்லைனில் உரையாட ஆரம்பித்தேன். தமிழ்நாடு, இந்தியாவிற்கு எது தேவை என்பதில் ஒற்றை கருத்து எழுந்தது - அதுவே திராவிட சிந்தனை.
11. பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், புத்தம் போன்ற சிந்தனைகளை படிக்க ஆரம்பித்தேன். திராவிட சிந்தனை என்பது மனிதநேயத்தின் அடிப்படையில் இருப்பது என்று புரிந்தது. அது சாதி, மதம், இனம் என்று பிரிக்காது.
“நான் பீஹாரிலிருந்து வந்த திராவிடன்” என்ற பாபு ஜெகஜீவன் ராம் சொன்னதும், “நான் ஸ்பெயினிலிருந்து வந்த திராவிடன்” என்ற ஹென்றி ஹெராஸ் சொன்னதும் படித்த போது, இந்த சிந்தனையை பரப்ப வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.
12. 2015 சென்னை வெள்ளப் பேரழிவு, அதன் பின் நடந்த ஆட்சி குறைபாடுகள் - இருந்தும் 2016-ல் ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்றது எனக்கு ஒரு பெரிய பாடம். வாக்கு பிளவால் அவருக்கு வெற்றி கிடைத்தது.
13. 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் - சசிகலா கைது, EPS முதல்வர் பதவி - அதன் பின் NEET, GST போன்ற திட்டங்கள் விரைவாக தமிழ்நாட்டிற்குள் வந்தது. இதற்கு பின்னால் பெரிய network இருக்கிறது என்று புரிய வைத்தது.
14. வரலாற்றைப் பார்த்தால், திமுக வலுவாக வந்த ஒவ்வொரு முறையும் அதை தடுக்க பல முயற்சிகள் நடந்துள்ளன. இதனால் எனக்கு ஒரு தெளிவு வந்தது:
👉 திமுக இல்லையென்றால், தமிழ்நாட்டின் சமூக நீதி பாதிக்கப்படும்.
அப்படியென்றால், நான் வெளிநாட்டில் இருந்தும் ஏன் திமுக ஆதரவு?
ஏனெனில்:
✅ நான் ஒரு தமிழன்
✅ தமிழ்நாடு என் வீடு
✅ என் மக்களை நான் நேசிக்கிறேன்
✅ 12+ ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்து பல நாடுகளை பார்த்த அனுபவத்தில், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது:
🎯 கட்டமைப்பு
🎯 கல்வி
🎯 சுகாதாரம்
🎯 பெண்கள் முன்னேற்றம்
🎯 வேலை வாய்ப்புகள்
🎯 வாழ்க்கை தரம்
👉 இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை.
எனது திமுக ஆதரவு என்பது இந்த முன்னேற்றத்தை காப்பாற்றுவது.
யோசித்து வாக்களியுங்கள்.
ஸ்டாலின் தொடரட்டும்,
தமிழ்நாடு வெல்லட்டும்!
- ராஜராஜன் RJ