#தவெக ஆட்சியில் தினமும் காணும் செய்திகள்
1. பாலியல் வன்கொடுமை
2. கொலை
3. சாலை மறியல் போராட்டம்
4. பாட்டிலுக்கு 20 ரூபாய் அதிகம்
5. தவெக மாமூல் கேட்பதாக போராட்டம்
#மாற்றம்!
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தடிக்காரன் கோணம் ஊராட்சியை சார்ந்த முக்கிய பொறுப்பாளரான ராபின்சன் அவர்களின் இணையரும் நாம் தமிழர் கட்சி உறவுமான திருமதி ப. சசீலா அவர்கள், தாவரவியல் துறையில் தனது உயரிய முனைவர் (Ph.D.) பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது நம் அனைவருக்கும் பெருமிதமும் மகிழ்வும் தருகிறது💐
நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரியின் தாவரவியல் துறை மூலமாக, நமது மாவட்டத்தின் கீரிப்பாறை - வீரபுலி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள வெள்ளாம்பி மலையில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி மிகவும் முக்கியமானது.
இந்த ஆய்வில் நம் சகோதரி வெள்ளாம்பி மலையில் உள்ள 504 மலர்தாவரங்களை மிகத் துல்லியமாக ஆராய்ந்து ஆவணப்படுத்தியுள்ளார்.
இதில் 340 தாவரங்கள் பழங்குடியின மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதைக் கண்டறிந்துள்ளார். அவை நாட்டு மருத்துவம், சித்தா , மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை நிரூபித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அவரது இறுதி வாய்மொழித் தேர்வில் பல முன்னணி ஆய்வாளர்கள் முன்னிலையில் தனது ஆய்வைச் சிறப்பாகச் சமர்ப்பித்த நிகழ்வில் நாமும் கலந்துகொண்டு வாழ்த்தி பாராட்டினோம்.
மக்களுக்கு எப்போதும் களத்தில் நிற்பதோடு கல்வியிலும் ஆராய்ச்சியிலும் சாதனை படைத்திருக்கும் நமது சகோதரிக்கும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் இணையருக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! உங்களது இந்த ஆய்வுப் பணி நமது பாரம்பரிய மருத்துவத்திற்கும், இயற்கை பாதுகாப்புக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாகும்.
இனிவரும் உங்களது அறிவுசார் பயணங்களும், எதிர்காலப் பணிகளும் சிறக்க வாழ்த்துகிறேன்! 🙏
நாம் தமிழர் கட்சி சார்பாக தொடரப்பட்ட அரசுக்கு எதிரான வழக்கில் வெற்றி
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலத்தில் ரூபாய் 20000 உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி உடனடியாக தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொகையாக 20000 ரூபாயை உறுதி வழங்கிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிபதி அவர்கள் நாம் தமிழர் கட்சிக்கும்,மனுதாரர் அவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.
வழக்கறிஞர்
தீரன் திருமுருகன்
மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழ் கட்சிசி
Tamil Nadu mini truck drivers transporting essential commodities, including vegetables, to Kerala alleged that @TheKeralaPolice collect bribes to allow their trucks to enter their State. @vdsatheesan
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? அல்லது அரசுப்பள்ளிகளுக்கும் அமைச்சரா? தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகள் மீதும் காட்டத்தவறுவது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
"தனியார் பள்ளிகளுக்கான உரிமங்கள் ஜூலை மாதம் முதல் 100 விழுக்காடு இணையதளம் வாயிலாகப் பெறலாம்; நகைகளை அடமானம் வைத்து மிகுந்த சிரமங்களுக்கு இடையே தனியார் பள்ளிகளை நடத்தி வருகின்றனர். பள்ளிகளை நடத்துவது இலாப கணக்கு அல்ல; புண்ணியக் கணக்கு” என்று தனியார் பள்ளி நிறுவனங்கள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கண்ணீர் வடித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கான அமைச்சர் மட்டும்தானா? அல்லது அரசு நடத்தும் பள்ளிகளுக்கும் அவர்தான் அமைச்சரா? தனியார் பள்ளிகள் உரிமம் பெறுவதை எளிதாக்கி அதனை ஊக்குவிப்பதற்குத்தான் அமைச்சர் ஆனாரா ராஜ்மோகன்? தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் நடத்துகிறது என்ற நினைவாவது அமைச்சர் ராஜ்மோகனுக்கு இருக்கிறதா? தனியார் பள்ளிகள் எந்த அளவிற்குப் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன என்பதாவது அமைச்சருக்கு தெரியுமா? உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்து தனியார் பள்ளி முதலாளிகளுக்கு உதவிய அமைச்சர் ராஜ்மோகன், தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளையைத் தடுத்து ஏழை, நடுத்தர வர்க்க பெற்றோர்களுக்கு உதவ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தனியார் பள்ளிகள் நடத்துவது புண்ணியக் கணக்கு என்றால் அரசுப்பள்ளிகள் நடத்துவது பாவ கணக்கா? அரசுக்கு அந்தப் புண்ணியம் சேர அமைச்சர் ராஜ்மோகன் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? பாவ புண்ணியக் கணக்கு பேசும் அமைச்சர் எத்தனை தனியார் பள்ளிகள் தத்தம் பள்ளிகளில் எத்தனை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாய் கல்வி தருகின்றன என்று கூற முடியுமா? தனியார் பள்ளிகளின் உரிமம் பெறுவதில் நடைபெறும் ஊழல்களைக் களைய பல்வேறு நடவடிக்கைகளை வேக வேகமாக எடுத்துவரும் அமைச்சர் ராஜ்மோகன், அதே வேகத்தோடு அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகள் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பயின்று வருகின்றனர். முறையான கழிப்பறை, தூய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படாத பல்லாயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. பல்லாயிரம் பள்ளிகளுக்கு பாதுகாப்புச் சுவர்கள் இல்லை. போதிய ஆய்வகங்களோ, விளையாட்டு திடலோ, உபகரணங்களோ இல்லாத ஆயிரக்கணக்கான பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகள் குறித்த தினம் தினம் கண்ணீர் விடும் அமைச்சர் ராஜ்மோகன் அந்த அக்கறையில் சிறிதளவாவது அரசுப்பள்ளிகளைச் சீர்படுத்தி அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த காட்டாதது ஏன்?
தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,554 அரசுப் பள்ளிகளில் 52 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால், வெறும் 11,890 தனியார் பள்ளிகளில் 53 இலட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தவெக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம், பணி நிரந்தரம் வேண்டி பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில் அவர்களின் துயர் துடைத்து அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் உயர எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு, தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்காத தவெக அரசு தனியார் பள்ளிகள் குறித்துக் கவலைப்பட்டுக் கண்ணீர் சிந்துவதற்கு வெட்கமாக இல்லையா? தனியார் பள்ளிகள் குறித்து தவெக அரசு உள்ளம் உருகுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் தவெக அரசை உச்சி முகர்வதும் இந்த அரசு யாருக்கானது, கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கானதா? அல்லது தனியார் பள்ளி முதலாளிகளுக்கானதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.
ஆகவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இனியாவது, தான் தமிழ்நாடு அரசின் அமைச்சர் என்பதை நினைவில்கொண்டு, தனியார் பள்ளிகளை மீதான அக்கறையில் சிறிதளவேனும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சட்டத்தை மீறி கட்சி கொடிகளையும், கட்சி பிரமுகர்களின் சுயவிளம்பர பேனர் கட்அவுட்களையும் சாலைகளில் வைத்து பொது மக்கள் உயிருடன் விளையாடும் சமூக விரோதிகள் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
@tnpoliceoffl@chennaipolice_@ChennaiTraffic
உங்கள் மின்சார கம்பங்களை ஆளுங்கட்சி பேனர் வைக்க வாடகைக்கு விட்டுள்ளீர்களா? இதனால் ஏற்படும் ஆபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பீர்களா? @TANGEDCO_Offcl@RAKRI1
ECR | Sholinganallur
நாங்க வேண்டாம்னு சொல்லிட்டே இருப்போம், நீங்க உங்க இஷ்டத்துக்கு வைத்துக் கொண்டே இருங்கள் என்பது தான் தவெகவின் எழுதப்படாத விதியா? இது இப்படியே தொடர்ந்தால் மக்கள் உங்களை பார்த்து அறிவிருக்கா தவெக..? என்று கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.
@BussyAnand@TVKPartyHQ
1000 தனியார் பள்ளிகளுக்கு எந்த கேள்விகளும் இல்லாமல் ஒப்புதல் அளித்த இதே TVK அரசுதான் ..
ஒரே நாளில் 207 அரசு பள்ளிகளையும் இழுத்து மூடி இருக்கிறது...
கொடுமை
#TVKFails@dir_keeraa
Flex banners erected at the bus stop opposite the Sankarankovil Court have completely blocked the waiting area, forcing passengers to stand on the roadside and raising safety concerns - from our photo journalist @KARTHIKALAGU86
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் @Seeman4TN எச்சரிக்கை
#Murugan#Seeman#EngalDesam
தமிழ்நாட்டில் பிறந்து ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களுக்காகப் போராடிய மனித உரிமைச் செயற்பாட்டாளரும், சமூகப் போராளியுமான ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!
முதுமையாலும், உடல்நலக்குறைவாலும் நலிவுற்றிருந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களை பொய் வழக்கில் தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தி, அவரது உடல்நலனை மேலும் குன்றச் செய்த பாஜக அரசின் கொடுங்கோல் செயல்பாட்டின் விளைவாகவே ஐயா ஸ்டான் சுவாமியின் மரணம் நிகழ்ந்தது, நடுக்கவாத நோயால் நீரருந்தக்கூட முடியாது அவதிப்பட்டு வந்தவருக்கு உறிஞ்சுக்குழாய் கொடுப்பதற்கு நீதிமன்றத்தில் காலநேரம் கேட்டு, பிறகு, அதனையும் தரமுடியாதென மறுத்தது பாஜக அரசு.
தேசியப் புலனாய்வு முகமைக் குற்றஞ்சாட்டிய 44 ஆவணங்களும் ஐயா ஸ்டான் சுவாமியின் கணினியில் அவருக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டவை என்பது ‘அர்செனல் கன்சல்டிங்’ எனும் அமெரிக்கத் தடயவியல் நிறுவனம் கண்டுபிடித்தின் மூலம் அவர் மீதான கைது நடவடிக்கை ஆளும் பாஜக அரசின் அப்பட்டமான பழிவாங்கல் என்பது உறுதியானது. .ஐயா ஸ்டான் சுவாமியின் மரணமென்பது சட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி பாஜக அரசு செய்த பச்சைப்படுகொலை. கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற சனநாயகம் காக்க தங்கள் இன்னுயிரை பறிகொடுத்த சமூக செயற்பாட்டாளர்கள் வரிசையில் ஐயா ஸ்டான் சுவாமி அவர்களும் இணைந்த நாள் இன்று.
வாழ்நாள் முழுவதும் பழங்குடியின மக்களுக்காக போராடி வாழ்ந்து மறைந்த ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் ஈகம் வரலாற்றில் நிலைபெற்றிருக்கும்!
ஐயா ஸ்டான் சுவாமி அவர்களின் பேரீகம் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தவெக அரசு தாரைவார்த்திருக்கும் IREL விரிவாக்கத்திற்கான கால நீட்டிப்பு அனுமதி, அதனால் குமரிக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள், இந்த புதிய அரசின் தரமற்ற செயல்பாடுகள் பற்றிய என் கருத்துகளை @thedebatetamil வலையொளியில் பகிர்ந்திருக்கிறேன்.
காணொளி இணைப்பு👇🏻
https://t.co/ITtHNUgWu5
பாலியல் பொறுக்கி தவெக 🤬🤬🤬
நடுரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற தவெக நிர்வாகியின் மகன்.
போலீஸில் புகார் தெரிவித்ததால் கல்லூரி மாணவியின் வீட்டை சூறையாடிய 20 பேர்
கொண்ட கும்பல் 🤬
#TVKfails
நெல்லை இரட்டைக் கொ*ல
- சிறுவன் பகீர் தகவல்
நெல்லை வீரவநல்லூரில் நடந்த இரட்டைக் கொ*ல சம்பவம் குறித்து உயிர்தப்பிய சிறுவன் பகீர் தகவல்
``8 பைக்குகள், ஒரு காரில் வந்த கும்பல் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கொடூர தாக்குதல். வேலைக்கு சென்று திரும்பும் போது வழிமறித்து தாக்கினார்கள்.''
தாக்குதலில் தந்தை காளிமுத்து, 5 வயது மகன் படுகொ*ல செய்யப்பட்ட நிலையில் படுகாயமடைந்த மற்றொரு மகன் சின்னத்துரை (15) நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி
#nellai #crime #police #thanthitv
#கருங்கல்#7ஸ்டார் உள்விளையாட்டரங்கில் வைத்து, #நெடியவிளாகம் நண்பர்கள் நடத்திய மாவட்ட அளவிலான #கபடி போட்டியில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் #ராஜேஷ்குமார் அவர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தோம். கலந்து கொண்டு விளையாடிய வீரர்கள் மற்றும் அழைத்த நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
அன்னைத் தமிழ் விளையாட்டு குழு.