நெடுங்காலமாக பணிக்கு வராத சுமார் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். அது வரை அவர்களின் கடவுச்சீட்டு(Passport) மற்றும் மருத்துவர் அங்கீகார பதிவை நிறுத்தி வைக்க அறப்போர் இயக்கம் கோருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு (PG-Degree)மற்றும் பட்டயப்படிப்பு (PG-Diploma) படித்த பல மருத்துவர்கள், விதியை மீறி அரசின் மருத்துவமனைகளில் மருத்துவப்பணியை, அரசின் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பேராசிரியர்கள் பணியை மேற்கொள்ளாமல் இருகின்றனர். எந்தவித அனுமதி இன்றியும், அறிவிப்பும் இன்றி, நெடுங்காலமாக பணிக்கு (Unauthorized Absence - Absconds) வராமல் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இருக்கின்றார்கள்.
இதனால், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, சிறப்பு சிகிச்சை சேவைகள் குறைபாடு, மருத்துவ மாணவர்கள் பெறவேண்டிய மருத்துவ நுணுக்கங்கள் (Clinical Exposure) மற்றும் மருத்துவ கல்வியில் செறிவின்மையும் (Academic Guidance) இழக்கின்றனர். இதை தடுக்கும் பொருட்டு, மருத்துவ கல்வி இயக்கத்துக்கு RTI மனு தொடுக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 28 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரி தரவுகள் கிடைக்கப்பெற்றது. அதில் 229 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் இது போன்று நெடுங்காலமாக பணிக்கு வராமல் இருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.
சேவை ஒதுக்கீட்டீல் (Service Quota) பயின்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் நெடுநாள் பணிக்கு வராமல் இருந்தால், அவர்களிடம் அரசின் இழப்புத்தொகை, உரிய பிணைத்தொகை (Bond) ஆகியவை மீட்கப்படவேண்டும். அதுவரை கடவுச்சீட்டு (Passport) நிறுத்தி வைப்பு, காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பல நடைமுறைகள் மருத்துவக்கல்வி இயக்ககம் செய்திருக்க வேண்டும். பெரும்பாலும் அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் RTI மூலம் தெரியவந்துள்ளது. சில மருத்துவர்கள் தனியார் மருத்துவனைகளில் பணிபுரிவதாகவும், சில மருத்துவர்கள் மருத்துவமனை போன்று நடத்துவதாகவும் அறிகிறோம்.
எனவே, இதன் மீதான உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு அரசு இழந்த பணத்தை முழுமையாக மீட்க வேண்டும். அதுவரை அவர்களின் கடவுச்சீட்டை (Passport) நிறுத்தும் நடவடிக்கை மற்றும் காவல்நிலைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரி அறப்போர் இயக்கம் இன்று (22.06.2026) முதலமைச்சர் திரு.விஜய், மருத்துவத்துறை அமைச்சர் திரு.Dr.கே.ஜி.அருண்ராஜ், மருத்துவத்துறை செயலாளர் Dr.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கும் புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.
நேற்று இரவு 11 மணிக்கு இரண்டாவது மகனுக்கு கைட்டை விரலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனே கொப்பளித்தது, தாங்க முடியாத வலியும் எரிச்சலும் அதிகமானது...
வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைத்து இரண்டு நிமிடங்களில் தெளிந்த நீர் கிடைக்கும்.. இந்த சுண்ணாம்பு தெளிந்த நீரில் சம பங்கு நல்லெண்ணெய் கலந்து இடைவிடாமல் கலக்கும்போது வெண்ணெய் போல் களிம்பு(கிரீம்) ஆக மாறிவிடும்..(படத்தில் உள்ளது போல்)
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் இதை உடனடியாக தயார் செய்து தீப்புண்ணில் வைத்தவுடன் உடனடியாக குளிர்ச்சியாக உணர்ந்து வலியும் எரிச்சலும் உடனே மறைந்தது...
சுண்ணாம்பு நீரையும் நல்லெண்ணெயையும் கலந்து தீப்புண்களுக்குப் பயன்படுத்தும் முறை நமது பாரம்பரியத்தில் "சுண்ணாம்புத் தைலம்" அல்லது "வஜ்ர களிம்பு என்று பெயர்.. தீப்புண் பட்ட இடத்தில் இதை தடவினால் தீப்புண் ஆறுவது மட்டுமல்லாமல் ஆரிய பின்பு தளும்பு இல்லாமல் மறையும்..இந்த பதிவை save செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஏதோ ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவும்.. நல்லெண்ணைக்கு பதில் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்...
#homeremedies
Riyaz
கல் குவாரிகளில் எப்படி முறைகேடு நடைபெறுகிறது?
இந்த முறைகேடுகள் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?
இந்த முறைகேடுகளை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது?
இந்த தண்டனையில் இருந்து கல் குவாரி கொள்ளையர்கள் எப்படி தப்பித்தார்கள்?
திமுக ஆட்சியில் நடந்தது என்ன?
விரிவான காணொளி - https://t.co/cNKhGHOHJl
முதலமைச்சர் @TVKVijayHQ ப்ரோ அவர்களுக்கு...
ஒரு எளிய ஆனால் முக்கியமான கோரிக்கை... 🙏🌾
வயலில் உழைக்கும் விவசாயிகள்... வெயிலும் மழையும் பார்த்து தன் நெல்லை காப்பாற்ற போராடுகிறார்கள்....
ஆனால் அறுவடை செய்த பிறகும், அந்த நெல் மூட்டைகளை பாதுகாக்க சரியான சேமிப்பு கிடங்குகள் போதுமான அளவு இல்லாமல்...
இன்னும் தர்பாய்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை மிகவும் வேதனைக்குரியது.
உள்ள கிடங்குகளும் நிரம்பி விடுகிறது....
விவசாயிகள் திறந்த வெளியில் தர்பாய் போட்டு நெல் மூட்டைகளை வைக்க வேண்டிய நிலை தொடர்கிறது...
ஒரு விவசாயியின் உழைப்பு மழையில் நனைந்து வீணாக கூடாது...
அவர்களின் கண்ணீரும் உழைப்பும் பாதுகாக்கப்பட வேண்டும்...
அதனால், விவசாயிகளுக்காக நிரந்தரமான நெல் சேமிப்பு கிடங்குகளை அமைத்து தருமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
இதற்கு தீர்வு தரக்கூடிய சக்தி உங்களிடமே உள்ளது முதலமைச்சரே.... 🌾
“விவசாயி பாதுகாப்பாக இருந்தால் தான், நாட்டின் உணவு பாதுகாப்பாக இருக்கும்.”
@CMOTamilnadu
#TVK
அனைவருக்கும் வணக்கம்!
அடுத்த 2-3 வாரங்கள்
வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மிகவும் அதிகமாக இருக்கும்.
தேவையில்லாமல் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
அதிகமாக தண்ணீர் குடிக்கவும்.
வயதானவர்கள், குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும்.
முடிந்தால் வீட்டு வாசல், மாடி அல்லது மரங்களின் அருகில் பறவைகளுக்காக சிறிது தண்ணீர் வையுங்கள். இந்த வெயில் அவற்றுக்கும் கடினமானதே.
கவனமாக இருங்கள். உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
எழுதிப் படிக்கும் வார்த்தைகள்
.......
ஐக்கிய நாடுகள் சபையாகட்டும், ஆஸ்கர் மேடையாகட்டும்; உலகத்தின் மதிப்புமிக்க மனிதர்கள் கையில் ஒரு சிறு காகிதத்தை வைத்துக்கொண்டுதான் தங்களின் முக்கியமான வார்த்தைகளைப் பேசுகிறார்கள்.
ஆனால், நம் ஊரில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யார் காகிதத்தைப் பார்த்து வாசித்தாலும் நையாண்டி செய்கிறார்கள். "யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்பிப்பதாக" ஒரு கேலி வேறு.
உதவியாளர்கள் தயார் செய்து தரும் உரையாகவே இருந்தாலும், அதில் உள்ள கருத்துகளைத் தீரப் பரிசீலனை செய்யாமல் எந்தவொரு தலைவரும் மேடையில் அப்படியே படித்துவிட மாட்டார்கள். யாரோ தருவதை எந்தச் சிந்தனையுமின்றி மேடையில் அப்படியே ஒப்பிப்பதற்கு அவர்கள் கிளிப்பிள்ளைகள் இல்லையே.
குறிப்புகளின்றி மணிக்கணக்கில் பேசும் பேச்சாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அந்த நதிக்கு பெரும்பாலும் கரைகள் இருப்பதில்லை; நேர வரையறையும் இருப்பதில்லை.
காலம் மிகச் சிறியது. ஒரு சினிமாப் படப்பிடிப்பையோ, இசைப் பதிவையோ குறித்த நேரத்திற்குள் கச்சிதமாக முடிப்பதற்கு 'எழுதி வைத்த சமன்பாடு' (Script) எவ்வளவு அவசியமோ, அப்படித்தான் பேச்சும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள், சொல்ல வந்ததைச் சிதறாமல் சுருக்கமாகச் சொல்லி முடிக்க எழுதி வைத்துப் பேசுவதுதான் அத்தியாவசியமானது. அது வார்த்தைகள் நழுவிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு.
உலகில் இருக்கக்கூடிய மிக முக்கியமான இலக்கியக் கட்டுரைகள் எல்லாமே எழுதி வைத்து வாசிக்கப்பட்டவைதான். ஆனால், பேசிய பேச்செல்லாம் காற்றோடு போயிற்று.
பேச்சு நிலைக்காமல் போவதற்கும், எழுத்து ஆவணமாகி நிற்பதற்கும் எது காரணமாக இருக்க முடியும்?
பேச்சு என்பது பேசுபவரின் உடல் மொழியோடும் சம்பந்தப்பட்டது; அதைத் தனி ஆடியோவாகக் கேட்பதில் உள்ள சுகத்தைவிட, நேரடியாகப் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
நம் பேச்சாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு சில நேரங்களில் வரையறைகளை தாண்டி அதிகமாக பேசிவிடுவது,
தரம் தாழ்ந்து பேசி விடுவது சில நேரங்களில் மிக உன்னதமான தருணங்களையும் பேசுவது இவை இரண்டும் நிகழ்ந்து விடுகின்றன.
பிறகு பேசியவர்களே ஒரு ஃப்ளோல (flow)
பேசி விட்டேன்
என்று என்னிடமே சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், எழுத்து என்பது முழுக்க முழுக்க அதை வாசிப்பவரின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் சென்று, அவரது யூகங்களில் வாழ்கிறது.
ஆக, எழுதி வைத்து அதைப் படிப்பவர்கள் திறமையற்றவர்கள் அல்லர்,
அந்த மனப்பாங்கை பொதுப் புத்தியிலிருந்து நாம் நீக்க வேண்டும்.
சீனு ராமசாமி.
@TVKVijayHQ@DMKITwing@INCIndia@BJP4India@AIADMKITWINGOF@kamalkvlkamal77@MDMK1994
தமிழக வெற்றிக்கழகத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!
அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு செல்லும் சிறந்த தலைவராகநீங்கள் உயர, வளர வாழ்த்துகள். பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும்கொண்டாடும்,
சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்ததாக மாற்றும் பயணமாக உங்கள் பணி சிறக்கட்டும்!
ஏஆர் ரஹ்மான்
@madraspaiyanda Inga ivargal than irukanum vera yarum vara kudathu soldra unga mana nilamai ah ennanu solla.idhu jananaayaga nadu ellorum nirkalaam. kolgai,seiyal thittam idhu ellam sariya irundha makkal vote poduvanga.
@im_inba1 ஊருக்குள்ள ஒரு கதை உண்டு பசியில் இருக்கும் ஒருவனுக்கு மீன் பிடித்து கொடுப்பது நல்லதா;மீன் பிடிக்க சொல்லி கொடுப்பது நல்லதா? இங்கு எல்லாருக்கும் வேலை வாய்ப்பை கொடுத்தாலே மாதம் 10000 ஆவது சம்பாதிப்பார்கள்.இங்கு மாதம் 2000 தேவையா இல்லை வேலைவாய்ப்பு தேவையா?
@despoters_12345 ஹீரோவுக்கு விளங்கும் மதுரை பேச்சு வழக்கு வர வில்லை உடல் மொழி பொருந்த வில்லை.காதல் காட்சிகள் சேர்க்க வேண்டும் என்பதற்காக சேர்த்தது போல் இருந்தது. கிடா சண்டை காட்சிகள் நன்றாக இருந்தது.திரைக்கதையில் இன்னும் வேலை பார்த்திருக்க வேண்டும்.
@AshwinBala_Offi செல்வா மற்றும் கே எஸ் ரவிக்குமார் வீட்டுக்குள் ரைட் போகும் காட்சி எல்லாம் நல்லா இருக்கும்.இன்று தான் தெரியும் இது செல்வா டைரக்ஷனில் வந்த படம் என்று.நல்ல படம்.