@policybazaar The biggest problem is not the work or the targets—it’s the lack of good leadership. Managers and TLs should support and understand their employees instead of creating unnecessary pressure.
பள்ளிக்கூடம் என்பது குழந்தைகள் சமத்துவத்தை கற்றுக்கொள்ளும் இடம்; சாதியைச் சுமந்து செல்லும் இடமல்ல.
பள்ளி மாணவர்களுக்கு #சாதி விவரத்துடன் அடையாள அட்டை வழங்கும் எண்ணமே ஆபத்தானது. இது சமூக ஒற்றுமைக்கு எதிரானது மட்டுமல்ல, பள்ளி வளாகங்களுக்குள்ளேயே சாதி அடையாளங்களை நிறுவனமாக்கும் முயற்சியாக மாறிவிடும்.
குழந்தைகளின் அடையாளம் அவர்களின் திறமை, கனவு, கல்வி ஆகியவையாக இருக்க வேண்டும்; சாதி அல்ல.
இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு சமூக நீதியின் மண்; குழந்தைகளின் மனதில் சாதி விதைகளை விதைக்கும் சோதனைக்கூடம் அல்ல.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
மொழிக்காக வாழ்ந்த தலைவரே,
எழுத்தாலும் பேச்சாலும் மக்களை வென்றீர்,
சமத்துவப் பாதையில் சமூகத்தை நடத்தினீர்.
சூரியனாய் ஒளி தந்து தமிழை வளர்த்தீர்,சொற்களால் பல தலைமுறைகளை செதுக்கியீர்,
உங்கள் புகழ் காலம் கடந்தும் நிலைத்திருக்கும்,
தமிழர் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்திருக்கும்.🖤❤️
ஆளும் கட்சி நாளைக்கு பதவி ஏறும், நம்ப தோல்வியை நம்ப ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்.
ஆனா , @Udhaystalin அண்ணா, நீங்க அடுத்த 5 வருஷத்துல சபையில செய்யப் போற எதிர்க்கட்சி அரசியல் தான் நம்பள அடுத்த 20 வருஷத்துக்கு திராவிட இனத்த காப்பாத்தப் போகுது 🌄🔥
விட்டுராதண்ணே எவனையும்!🔥🖤❤️🙏🏽