தமிழர் தலைமுறை தலைநிமிரப் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குப் புரட்சி வணக்கம்!
பல தலைமுறைகள் ஆதிக்கத்துக்குப் பணிந்தன.
ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய புரட்சியைக் கண்டது.
பல தலைமுறைகள் அதன் மாற்றத்தைக் காண்கின்றன.
ஆனாலும், ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனை அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் பொறுப்பும்கூட!
வெளிச்சமற்ற இடம் இருள்; கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பேரிருள்.
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற கேள்விகள் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை அண்டாது.
பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!
#சமூகநீதிநாள் #SocialJusticeDay #PeriyarForever
தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!
#PeriyarForever#Periyar#SocialJusticeDay
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
பொதுவாக தமிழ்நாடு சில விசயங்களை திமுக அதிமுக என எந்த ஆட்சி வந்தாலும் கறாராகத் தடுத்து வைத்திருக்கும்.
துப்பாக்கி கலாச்சாரத்துக்கு இடம் கொடாமை , இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போக வைக்கும் குறுக்கு உழவு விசயங்களை நடைமுறைப்படுத்தாமல் தடுப்பது , விவசாய நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவதை தடுப்பது என பல்வேறு விசயங்கள் பட்டியலில் உண்டு.
ஆனால் இப்போது தமிழ்நாட்டில் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கும் தொழில்முறைக் கொள்ளைக் கூட்டமான லாட்டிரி மாபியா + கனிமவள ரெட்டி மாபியா + கல்விக்கொள்ளை மாபியா கூட்டணி அத்தனை தடைகளையும் உடைத்துப் புகுந்து புறப்பட்டுள்ளது.
ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சிஸ்டமும் வட இந்தியாவின் அழகிலேயே மாற்றப்பட்டிருக்கும். ஆனால் இந்த மாற்றம் தான் சுரணைகெட்ட மக்கள் விரும்பியது; எனவே சுவைக்கட்டும் 😁
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட்
கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா
தெரியுது..
இவனுக இதுவரை நாம் பார்த்த
அரசியல் கட்சிகளை விட பேராபத்தான
கட்சிதான்..
இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்..
இது புதுசாலா இருக்கு 🫣
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam