@SriramMadras Firstly, if you want to prove the worth of your claim, you must enable the Lokayukta to conduct trials for political powers, whoever they are. Only then will government officials be afraid to accept bribes.
@karthik2k2 Whoever now comes out to say about corruption, didn't speak against, but instead blissfully paid the amount and the only aim is to run the school. Just imagine, how wd hv paid the bribe only by cash connect the dots by what denominator are they collect the fees ?😁
@mekalapugazh Even though a little I know about politics, that I hv been watching for years together, I too believed DMK’s win just because of paid persons and party’s hope and speech.
Sabir Ahmed and other one kept saying of the real situation, that we hate just because of our leniency😊
The Cockroach Party of India invites India’s top leaders for a real public debate. No drama, no excuses.
PM Narendra Modi: come without a teleprompter.
Rahul Gandhi: come without talking only about your family legacy.
Arvind Kejriwal: come without playing the victim card.
Let’s debate real issues:
Jobs.
Unemployment.
AI and automation.
Education.
Healthcare.
Paper leaks.
Inflation.
Corruption.
Women’s safety.
Urban collapse.
Taxpayer accountability.
India does not need more speeches, slogans, reels, or emotional packaging.
India needs answers.
So here is the challenge:
Face the people.
Face the questions.
Face the data.
If you claim to lead India, then debate India’s real problems.
விடியல் தள்ளிப் போகலாம் ஆனால் தடுக்க முடியாது! 🌄🖤❤️
Blog Link 🔽
https://t.co/fARMhE4K4X
பொருளடக்கம்
1. முகவுரை
2. கொள்கை அரசியல்
3. தேர்தல் படிப்பினை
4. ஊடகங்கள் விவாதிக்காத கேள்விகள்
5. விஜய்யின் உண்மையான நோக்கம்
6. கொள்கை விட்டால் கட்சி இல்லை
7. த.வெ.க அரசின் தெளிவற்ற நிலை
8. முடிவுரை
முகவுரை
நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளின் ரேடாரில் சிக்காமல், The Route மூலம் த.வெ.க மேற்கொண்ட அவதூறான பிரச்சாரங்களும், பெற்றோர்களை "Emotional Blackmail" செய்த குழந்தைகள் மூலமும், த.வெ.க ஆட்சிக்கு வந்துள்ளது. த.வெ.கவுக்கும் தி.மு.கவுக்கும் மற்றும் தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையே ஏறக்குறைய 20 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். இருப்பினும், த.வெ.க சார்பில் விஜய் முதலமைச்சராகவும், தி.மு.க சார்பில் உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளனர்.
இப்போது இருக்கும் அரசியல் சூழலில் தி.மு.க என்ன செய்தாலும் திட்டவும், த.வெ.க என்ன செய்தாலும் பாராட்டவும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. அதனால் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசு, அண்டாவில் கையை விட்டு தேனை குடிக்க முயன்றால், அதே அண்டாவில் தேள் இருந்தால் அதை எப்படி கையாள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதையே அரசு நிர்வாகத்தின் சவால் என்று சொல்லலாம்.
கொள்கை அரசியல்
மனிதன் காலம் காலமாக கையால் உணவை எடுத்து வாய் வழியாகவே உண்கிறான். மாற்றம் வேண்டும் என்பதற்காக உணவு உண்ணும் முறையே மாறிவிடாது. அதுபோல, அரசியல் என்பது அடிப்படையில் உறுதியான கொள்கை மற்றும் சித்தாந்தங்களை மையமாகக் கொண்டதே. ஒரு மாற்றம் வேண்டும் என்ற நோக்கத்துக்காக, நீதிக்கட்சியின் நேரடி வாரிசான திமுக உருவாக்கி வளர்த்த தமிழ்நாட்டின் அடித்தளமான சமூகநீதி கொள்கை ஒருபோதும் அழிந்து போகாது.
அதே நேரத்தில், 2026 தேர்தலில் மக்கள் கொள்கைக்காக வாக்களிக்கவில்லை என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அதற்கு சான்றாக, தி.மு.க கூட்டணிக்கு 1.54 கோடி வாக்குகள் கிடைத்துள்ளன. மேலும், புதியதாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்ற த.வெ.க கட்சிக்கு நம்மைவிட வெறும் 17.5 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. இருப்பினும் அவர்கள் ஆளுங்கட்சி; நாம் எதிர்க்கட்சி. அதுவே ஜனநாயகத்தின் தீர்ப்பு. ஆனால், தி.மு.கவின் கொள்கை அரசியலின் பயணம் இதனால் முடிவுக்கு வராது.
தேர்தல் படிப்பினை
இந்தத் தேர்தல் தி.மு.க.வினருக்கு ஒரு தெளிவான உண்மையை உணர்த்தியுள்ளது. சமூக ஊடகங்களில் நாம் இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அரசியல் என்பது களத்தில் மட்டுமல்ல; சமூக ஊடக உலகிலும் நடக்கிறது. அங்கே நம்முடைய குரல் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தி.மு.க தன்னைத் தானே சீரமைத்து, வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் தெளிவாக உள்ளது.
நீங்கள் அரசியல் பற்றிய புரிதல் கொண்டவராக இருந்தால், மாத வருமானத்தைத் தாண்டி சமூக நலனில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால், நாட்டையே ஒரு குடும்பமாகக் கருதுபவராக இருந்தால், வரலாற்றில் ஆர்வம் கொண்டவராக இருந்தால், தி.மு.கவின் இந்தத் தோல்வியை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக, நம் தலைவரின் தோல்வி மனதை அதிகமாகப் பாதிக்கிறது.
ஆனால், வரலாறு எதைக் கற்றுக் கொடுக்கிறது? பேரறிஞர் அண்ணா கூட தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். ஆக, தோல்வி இறுதி முடிவு அல்ல; ஒரு இடைநிறுத்தம் மட்டுமே. அதே உணர்வோடு நாம் இதையும் பார்க்க வேண்டும்.
நாம் அடங்கி வாழும் மக்கள் அல்ல. எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும், நம் கொள்கையையும் கருத்தையும் உறுதியாக முன்வைக்கும் துணிச்சலே தி.மு.கவினராகிய நம் அடையாளம். இந்தத் தேர்தல் முடிவு நம்மைப் பின்வாங்கச் செய்யாது; மாறாக, இன்னும் உறுதியாக நிற்கத் தூண்டும்.
ஊடகங்கள் விவாதிக்காத கேள்விகள்
முதல் நாளில் கையெழுத்தான திட்டங்கள், கம்யூனிஸ்ட், வி.சி.க, முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவை நாடியது, தலைவர்கள் சந்திப்பு, வீட்டு சாப்பாடு, கூட்டணி அமைச்சரவை, அதிக அளவில் தலித் மற்றும் பெண் அமைச்சர்கள் இடம்பெற்ற அமைச்சரவை போன்றவை தொடர்பான விஜய் குறித்த செய்திகள் அதிகமாக பரப்பப்படுகின்றன. ஆனால், அதே நேரத்தில் ஊடகங்கள் விவாதிக்காத செய்திகள் பல உள்ளன,
1. "தீயசக்தி" என்று கூறிவிட்டு தி.மு.க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடியது ஏன்?
2. "ஊழல் சக்தி" என்று கூறிவிட்டு அ.தி.மு.கவை சந்தித்தது ஏன்? "ஊழலை ஒழிப்பேன்" என்ற வாக்குறுதி என்னானது?
3. பார்ப்பன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி வந்த இந்து அறநிலையத்துறைக்கு பார்ப்பனரை அமைச்சராக நியமித்தது ஏன்?
4. "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்ற கொள்கையை பின்பற்றிய தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் எதற்கு?
5. PM Shri திட்டத்தை அமல்படுத்தக் கோரிய ABVP தரப்பின் கோரிக்கைக்கு "முடியாது" என்று உறுதியாகக் கூறாமல் "பரிசீலனை செய்வோம்" என்று விஜய் கூறியது ஏன்?
6. 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, 500 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசம் என்று ஏமாற்றியது ஏன்?
7. 6 சிலிண்டர், ரூ.2,500 உரிமைத் தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், தாய் மாமன் சீர் போன்ற வாக்குறுதிகள் எப்போது நடைமுறைக்கு வரும்?
8. "பாட்டிலுக்கு 10 ரூபாய்" என்று பாடியவர்கள், இன்று பாட்டிலுக்கு 20 ரூபாய் வாங்குவது ஏன்?
9. 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு, பின்னர் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது ஏன்?
10. டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடிவிட்டு புதிய FL-2 உரிமங்களுக்கு கையெழுத்து போடுவது ஏன்?
11. "அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவோம்" என்று சொல்லிவிட்டு, 8000 புதிய தனியார் மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுமதி வழங்கியது ஏன்?
12. த.வெ.க மருத்துவ அணியினர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்தது ஏன்?
13. விஜய் தரப்புக்கு இசைவான நிறுவனத்துடன் புதிய மின்மாற்றி ஒப்பந்தம் கையெழுத்தான விவகாரத்தில், அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததை தாண்டி என்ன விசாரணை?
14. 6 மணி நேரத்தில் தண்ணீர் தொட்டி கட்டும் ஒப்பந்தம் முடிக்கப்பட்ட விவகாரத்தில், அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ததை தாண்டி என்ன விசாரணை?
15. மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக கூறும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில்? வாகனத்தில் முகத்தை மூடி சென்ற நபர் யார்?
16. முதலமைச்சர் விஜய் ஊடகங்களை எப்போது சந்திப்பார்?
17. முதலமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடரை நியமிக்க விரும்பியது விஜய்யின் மூடநம்பிக்கை அல்லவா?
18. ஆட்சி அமைக்க விஜய்யை அலைக்கழித்ததாக கூறப்படும் புதிய ஆளுநர் ஏன் கள்ள மௌனம் காக்கிறார்?
19. தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு சென்றதற்கு என்ன எதிர் நடவடிக்கை?
20. பா.ஜ.கவில் இருந்து வந்தவர் த.வெ.க சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?
21. சிங்கப்பெண் திட்டம், போதைத்தடுப்பு பிரிவு என்ற பெயரில் "Pink Patrol, போதைத்தடுப்பு புகார் மையம்" போன்ற கடந்தகால தி.மு.க. அரசின் நலத்திட்டங்களுக்கு விஜய் ஸ்டிக்கர் ஒட்டுவது ஏன்?
22. தினசரி அதிகரிக்கும் கொலை, கொள்ளைக்கு என்ன நடவடிக்கை?
விஜய்யின் உண்மையான நோக்கம்
வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, ஜோதிட நியமனம், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சந்திப்பு, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம் போன்ற நிகழ்வுகளே "தூய சக்தி" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்ட விஜய்யின் Manipulative அரசியலை அம்பலப்படுத்துகின்றன; மக்களும் இதை பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
விஜய் ஆட்சியில் அரங்கேறி வரும் அவலங்களைப் பற்றி, தி.மு.கவை விட்டு பிரிந்த கூட்டணியினர் இன்று விஜய்யை எதிர்த்து விமர்சிக்கவில்லை. காரணம், இனிமேல் அவர்கள் "உள்ளேன் அய்யா" என்று சொல்லும் நிலைக்கு சென்றுவிட்டனர்.
மொத்தத்தில், பொது மக்களுக்கோ, கூட்டணி கட்சிகளுக்கோ நன்மை செய்வது விஜய்யின் அரசியல் நோக்கம் அல்ல. தி.மு.கவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்துவதற்காகவே அவர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாகிறது.
கொள்கை விட்டால் கட்சி இல்லை
தி.மு.கவுடன் பயணித்த கூட்டணி கட்சியினர், தி.மு.கவின் உழைப்பையும் லாபத்தையும் பெற்றுவிட்டு, இன்று கொள்கை தெளிவற்ற விஜய்யின் த.வெ.க அமைச்சரவையில் இணைந்துள்ளனர். இந்நிலையில், அதிகாரமா? கொள்கையா? என்ற கேள்வி மீண்டும் முன் வருகிறது. அதற்கான விடையை நம் வரலாறே தருகிறது.
அதிகாரத்தைத் தேடிச் சென்றால் அது கொள்கைகளில் சமரசத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்திருந்த பெரியார், தேர்தல் அரசியலிலிருந்து விலகியே இருந்தார். கொள்கைக்காக அதிகாரத்தை விட்டு விலகுவதே பெரியாரியம். அதிகாரத்திற்காக கொள்கையை விட்டு விலகுவதை சுயமரியாதை உள்ள மக்கள் ஏற்க மாட்டார்கள்.
அதே உணர்வோடு தான், பேரறிஞர் அண்ணா ராஜாஜியுடன் கூட்டணியில் இணைந்த போதும் கூட தனது கொள்கைகளைக் கைவிடவில்லை. அதனால் தான், தேர்தலுக்கு பிறகு விரக்தியடைந்த ராஜாஜி, "தி.மு.கவுடனான தேனிலவு முடிந்துவிட்டது" என்று குறிப்பிட்டார். ஆக, அதிகாரமா? கொள்கையா? என்ற கேள்விக்கு "பெரியார் - அண்ணா" காட்டும் பாதையே தெளிவானது; மற்றவை போலியானவை.
த.வெ.க அரசின் தெளிவற்ற நிலை
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க அரசின் நிலைப்பாடுகள் பல முக்கிய பிரச்சினைகளில் தெளிவாக இல்லை. தொகுதி மறுவரையறை, இந்தி திணிப்பு, திருப்பரங்குன்றம் தீப விவகாரம், நீட் விலக்கு, புதிய தேசிய கல்விக் கொள்கை போன்றவற்றில் "வேண்டுகோள் (Request) வைத்தோம்; ஆனால் ஒன்றிய பா.ஜ.க அரசு செவி சாய்க்கவில்லை" என்று சொல்லும் நிலையிலேயே த.வெ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், இந்தத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்கு அல்ல; மாறாக ஏமாற்றத்திற்காக வாக்களித்துவிட்டார்களோ என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கான பதிலை காலம் விரைவில் தரும்.
முடிவுரை
த.வெ.கவிற்கு ஒன்றை சொல்லி முடிக்கிறேன்! போற்றுவார் போற்றட்டும்! தூற்றுவார் தூற்றட்டும்! ஆனால் இத்தோடு தி.மு.க முடிந்துவிட்டது என்று எண்ணிவிடாதீர்கள்! கூவத்தூர், பாண்டிச்சேரி சம்பவங்கள் இல்லாத ஒரே கட்சி; கட்சி பெயர் மாற்றம் காணாத ஒரே கட்சி; சின்னத்தை இழக்காத ஒரே கட்சி அது தான் தி.மு.க! தி.மு.க தொடங்கி 77 ஆண்டுகள் ஆகின்றன; ஆளும் கட்சியாக இருந்தது வெறும் 26 ஆண்டுகள் மட்டுமே! அதன் பொருள் யாதெனில், எதிர்க்கட்சிக்குரிய இலக்கணத்தை வகுத்ததும் தி.மு.க தான்!
விஜய்க்கு "நட்சத்திர புகழ்" இருக்கலாம்; ஆனால் "கொள்கை" இல்லை. தி.மு.கவுக்கு "நட்சத்திர புகழ்" இல்லையெனலாம்; ஆனால் மக்களுக்காக நிற்கும் "கொள்கை" உள்ளது. வானில் ஜொலிக்கும் நட்சத்திரம் இறக்கும்; ஆனால் கிழக்கில் சூரியன் தினமும் உதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்!
தி.மு.க போராடும்!
தி.மு.க வெல்லும்!
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!
வாசித்தமைக்கு நன்றி.
வணக்கம்.
"Amazon is not too big to fail… In fact i predict one day amazon will fail. amazon will go bankrupt. If you look at large companies, their lifespans tend to be 30+ years, not a 100+ years."
Amazon நிறுவனர் திரு.ஜெப் தன்னோட நிறுவன ஊழியர்கள் கிட்ட பேசின வாக்கியங்கள் இது, people pulse, ground reality இத புரிஞ்சுக்காத எந்த organization ம் அது கட்டமைச்ச வளர்ச்சி அது தொழில், சினிமா, அரசியல்னு எதுல இருந்தாலும் ஒரு நாள் இருந்த இடம் தெரியாம காணாம போயிருக்கு அது தான் கசப்பான வரலாறு.
அடிமட்ட தொண்டனோட சாதாரண உணர்வுகள கூட புரிஞ்சுக்க முடியாம ஒரு கட்சியோட கட்டமைப்பு உருவாகுதுனா!!! அது தன்னோட அழிவுக்கான பயணத்த தொடங்கியிருக்குனு அர்த்தம்.
எதுவும் சரி செய்யப்படலனா திமுக'ங்கிற கப்பல் மூழ்கும், "அய்யோ கப்பல் மூழ்குதேனு" பதவிக்காக நாங்க கட்சி எல்லாம் தாவ மாட்டோம்... மூழ்குற கப்பல்'ல கைகட்டி நின்னு கப்பலோட கப்பலா எங்க அரசியலையும் முடிச்சுக்குவோம் அவ்ளோ தான்.
@mkstalin@KanimozhiDMK
@_kaduvan@DMKTiruvarur@mkstalin@DMKITwing@arivalayam Only future will have the answer, if the same will remain or otherwise.
Above all,the tag of the ‘toy chief minister’ should go.
It had been the talk and the under current that wasn’t not visible. This narrative was cleverly set by all opposition parties but reaped by Vijay 😊
வெகுஜன மனநிலை
...
திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் தோற்றது என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திருமிகு. ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாக எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் கலைத்துறையைச் சேர்ந்தவன் ஆயினும், தொடர்ந்து 50 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் அரசியலைக் கூர்ந்து கவனிப்பவன் அல்லது அந்தச் சுற்றுச்சூழலில் வாழ்ந்தவன் என்ற அடிப்படையில், எனக்கும் சில தனிப்பட்ட கருத்துகள் உண்டு.
வெகுஜன மனநிலை என்று ஒன்று எப்பொழுதுமே இருக்கிறது. அந்த மனநிலையை யாரும் பிரச்சாரத்தாலோ அவதூறுக் கருத்துகளாலோ உருவாக்க முடியாது. ஆனால், ஒரு சிறிய செயல் அதனை உண்டாக்கக் கூடியது.
இன்று திரு. விஜய் அவர்கள் அரசியல் பொறுப்பேற்றிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இருக்கக்கூடிய தன்மைக்கும், அன்றைய நாளில் ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற காலத்தில் இருந்த நேர்மறையான அதிர்வலைகளுக்கும் (Positive vibes) நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கிறேன்.
இப்பொழுது எல்லோருமே புதியவர்கள். என்ன செய்யப் போகிறார்கள்? ஏது செய்யப் போகிறார்கள்? யார் யார் அமைச்சர்கள்? அவர்கள் திட்டங்கள் என்ன? சாதிப்பார்களா, சாதிக்க மாட்டார்களா? போன்ற கேள்விகள் இருக்கின்றன. அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள், ஊடகத்துறை என எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவருக்கு எதிரே இயங்குகின்றன. ஆனால், அன்றைய ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில், அவர் பொறுப்பேற்ற அந்த முதல் மூன்று மாதங்களில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகவே,
உள்ளத்தைத் தொடும் விதமாக, உண்மையாக இருந்தன.
அவர் பதவியேற்றதும் தன் சிறுவயதில் இருந்து யாரெல்லாம் பாராட்டி ஊக்கப்படுத்தினார்களோ அவர்களை எல்லாம் அவர் சந்தித்தது, மிகவும் சாதாரணமாக ஒரு முதலமைச்சருக்கு உண்டான தோரணை இல்லாமல் தன்னைக் காண வருபவர்களைத் தன் வாகனத்தை விட்டு இறங்கிச் சென்று பார்த்தது போன்ற நற்குணங்கள் அவரிடம் இருந்தன.
அது தொடர்ந்தது. தொடர்ந்து அவர் சிந்தித்துப் பல நற்பணித் திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். நான் கூட நண்பர்களிடம், "திராவிட முன்னேற்றக் கழகம் இத்தனை இடங்களைப் பெற்றிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் முதல்வரின் நலத்திட்டப் பணிகள்தான்" என்று சொல்வேன். அவர் 'நலத்திட்ட நாயகர்' என்று சிறப்பான அழியாத பெயர் பெற்றுவிட்டார்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா,
வெகுஜன மனநிலை என்பது செயல்களால் உண்டாகும் என்று!
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு வெகுஜன மனநிலையிலிருந்துதான் நான் கவனித்து வந்திருக்கிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு எப்பொழுதுமே இருந்ததில்லை.
அந்தச் செயல்கள் என்னென்ன என்று அருமைத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிந்தித்துப் பார்க்கும் பட்சத்தில், அதற்கான விடை எளிதாக அவருக்குக் கிடைக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
பெருந்தன்மையாக அவர் முன்வந்து, இந்தத் தோல்விக்குத் தான்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் தோல்விக்குக் காரணம் ஸ்டாலின் அவர்கள் இல்லை; இவ்வளவு வாக்குகள் பெற்றதற்குத்தான் அவர் காரணம்!
"வெகுஜன மனநிலைக்கு எதிரான செயல்கள் அப்படி என்னதான் நடந்தது, நீயே சொல்லேன்" என்று நீங்கள் கேட்கலாம். அவற்றைச் சொல்வதால், ஒரு கலைஞனாக நான் தேவையற்ற பகைக்கு ஆளாகக்கூடும்.
"பின் ஏன் இதை எழுதுகிறாய்?" என்று நீங்கள் கேட்பீர்கள்.
ஒரு உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு மனிதன் கார் வைத்திருப்பதே ஆடம்பரம் என்று நினைக்கும் ஒரு நாட்டில், நீங்கள் ஒரு கார் ரேஸ் விழாவை நடத்துகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாய மக்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோரின் மனநிலையிலிருந்து அதைப் பார்த்தால்தான் உங்களுக்கான விடயம் புரியும்.
"அது சரி, அதற்காக ரேக்ளா ரேஸ்தான் நடத்த முடியுமா?" என்று யாராவது கீழே பதில் கேட்டால், அதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
எதிலுமே இந்த வெகுஜன மனநிலை என்பது மிக முக்கியமான காரணி.
எதைச் செய்தாலும் இந்த வெகுஜன மனநிலையைக் கண்ணோட்டத்தில் கொண்டுதான் செய்ய வேண்டும். இப்படி, நான் அறிந்து, இந்த வெகுஜன மனநிலைக்கு எதிரான சில விஷயங்கள் நிகழ்ந்தன.ஆனால் அது முதல்வர் அவர்களால் அல்ல.
இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் நேரத்தில், அப்படி என்னென்ன, எந்தெந்தத் துறைகளில் எப்படி நிகழ்ந்தன? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லாத் துறைகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் முன்னின்று வியாபாரமே செய்கிறது என்ற தோற்றத்தை எவையெல்லாம் உருவாக்கின? எப்படியெல்லாம் உருவாக்கின? வெகுஜன மனநிலையில் அந்த கோணத்தில் அணுகினாலே விடைகள் எளிதாக கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.
இருப்பினும் சோர்வில்லாமல்
நான் பார்த்த மழைக்கால சென்னை மேயர் போல இன்றும் இயங்கும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.
அன்பன்.
சீனு ராமசாமி
@mkstalin
In his first speech as Tamil Nadu chief minister, Vijay said that he grew up in poverty, and that he even knows what hunger is. It's bullshit because he was my classmate in the third standard in Loyola School.
His father was a filmmaker who set up his son for a career in films.
It is possible that like most filmmakers his father may have had periods of financial strife but that's not the same as Tamil-grade poverty. A lot of affluent boys confuse being broke with poverty. Two very different things.
@dmuthuk Not all six decades. In the MGR cabinet Dr. HV. Hande was the health minister.
DMK’ fundamental is always eradicate higher&lower hierarchy, I am not against any caste that is what real periyar’s,
if it goes opposite balance of the plank will tilt that is why DMK is not for 😊
A Qs for those living outside Tamil Nadu: would any other major state welcome as chief minister in today’s India someone whose full name is Chandrasekaran Joseph Vijay . What TN has shown today, may India do tomorrow: respect our unique multi-religious, multi-cultural diversity and give everyone a fair shot at their dreams. ⭐️👍
@sumanthraman@INCIndia All your forecast before elections and now are fun packed.
Take rest for sometimes like other failed politicians do.
Let TVK run the country for a year. Not the wonder will they do but only the blunder I am very sure. 😁
@MKumaramangalam@KSKBLUES How long do you live in the dream land? Was it possible to have won ten Parliamentary seats without the DMK; you would have lost deposit in all ten 🤣
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
@APunnaivalavan@arulmuru182002 Not that all opp parties supported MGR only Marxist,Muslim league and AIFB. Right comunist went with congress.
Big mistake did by Kalaingar was he just came out of the Janatha and Marxist alliance just before the election. If they joined together the result would be different 😊