அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
Complaining about Police | காவல்துறை மீது மக்கள் குற்றச்சாட்டு
3 வயது சிறுமியை சின்னாபின்னமாக்கி முட்புதரில் வீசியிருந்ததாக மக்கள் தகவல்
பீகார் இளைஞர்கள் 4 பேர் இருந்ததாகவும், 3 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் புகார்
சிறுமி இறப்பு குறித்து போலீசார் உண்மையான தகவல்களை அளிக்கவில்லை எனவும் புகார்
நேற்றிரவே சிறுமி இறந்தும் காலை வரை போலீசார் தகவல் அளிக்கவில்லை என புகார்
Thiruvallur Issue | Harassment | Police | Tragedy
#Thiruvallur | #Issue | #Harassment | #Police | #Tragedy | #Newstamil24x7 | #Tamilnews
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டு இருக்கும் சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது... வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில். . வெளி மாநிலத்தைச் சார்ந்த ஒரு குழந்தை கசக்கி வீசப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது... தமிழக முதலமைச்சர் @CMOTamilnadu பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வார்த்தைகள் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது... பிஞ்சிக் குழந்தையை கடித்து குதறும் மனித ஓநாய்களை தமிழக சிங்கப்பெண்கள் கட்டுப்படுத்த முடியவில்லை..கண்டுபிடிக்க முடியவில்லை ... என்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பாலியல் வன்முறைகள் தொடர்கதைகளாக ஆகி கொண்டு இருப்பது.. மிகுந்த கவலை அளிக்கிறது... தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு இந்த இரக்கம் இல்லாத மனித மிருகங்களை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்....
@BJP4India ,@BJP4TamilNadu@ani_digital@PTI_News@pibchennai
கும்மிடிப்பூண்டியில் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசி, கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதறச் செய்கின்றன. முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் ஆட்சி நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், தமிழகம் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறிவிடுமோ என்று அச்சம் உண்டாகிறது.
காரணம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், குழந்தைகள், முதியவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் தினசரி ஒரு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருப்பதை பத்திரிக்கைகள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இதுதான் தவெகவின் மாற்று அரசியலா? பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத திரு. ஜோசப் விஜய் அவர்கள், எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தையும் முன்னேற்றுவார்?
எனவே, திமுகவின் கடந்த கொடூர ஆட்சிக்கு மாற்றாக தமிழக மக்கள் விரும்பியது, பாதுகாப்பான, அமைதியான நல்லாட்சியைத் தானே தவிர, ஆட்சியில் நகலை அல்ல என்பதை உணர்ந்து, முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் சற்று விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிடுக!
தமிழக மின்சார வாரியத்தின் முதுகெலும்பாக விளங்கும் கேங்மேன் உள்ளிட்ட ஊழியர்கள், பணி உயர்வு மற்றும் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அரசு தொடர்ந்து அலட்சியம் செய்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் நிலையில், அவர்களை அழைத்துப் பேசக்கூட முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கோ அல்லது மின்சாரத்துறை அமைச்சர் திரு. @CTR_Nirmalkumar அவர்களுக்கோ நேரமில்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.
ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால் பொதுமக்களும், சிறு, குறு தொழில்துறையினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இத்தகைய சூழலில், மின்வாரிய ஊழியர்களின் இந்தப் போராட்டம் தொடர்ந்தால், தமிழகத்தின் மின்கட்டமைப்பு முற்றிலும் சிதையும் அபாயம் உள்ளது.
எனவே, திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு உடனடியாக மின் ஊழியர் சங்கங்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று @BJP4TamilNadu சார்பில் வலியுறுத்துகிறேன். மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உறுதிசெய்ய வேண்டுமானால், முதலில் அந்தத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் மனக்குறையைப் போக்க வேண்டும். மக்களின் அன்றாடத் தேவையைப் பாதிக்கும் மின்சாரப் பிரச்சினையில் மெத்தனப்போக்கை விடுத்து, காலதாமதமின்றி உரிய தீர்வை எட்ட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
ఈరోజు ఎంతో విశిష్టమైన సోమవతి అమావాస్య సందర్భంగా, హైదరాబాద్ లోని మా ఇంట్లో వేద పండితుల ఆధ్వర్యంలో ఏకాదశ మహాన్యాస పూర్వక రుద్రాభిషేకం నిర్వహించుకున్నాం. వేదమంత్రాల మధ్య మేము మహాశివుడికి రుద్రాభిషేకం చేసి అందరినీ చల్లగా చూడమని ఆ శివుడిని కోరుకున్నాం.
இன்றைய தினம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் திரு. தாமரை ஜெகதீசன் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தேன்.
திருமயம் காலபைரவர் கோவிலில் அமைச்சர் முகமது பர்வேஸ் சாமி தரிசனம்..
நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொட்டு வைக்க மறுத்ததாக வீடியோ வெளியான நிலையில் இன்று சாமி தரிசனம் செய்தார்..!
#Pudukkottai | #MinisterFarvas | #Temple | #Worship | #PolimerNews
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே வெறும் 3 வயது பிஞ்சுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கி, பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய தினம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டிருந்த அந்த பிஞ்சுக் குழந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். அப்போது, துயரத்தில் வாடும் குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், இந்த மனிதத்தன்மையற்ற கொடூரச் செயலை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீது சட்டத்தின் உச்சபட்ச தண்டனை உறுதி செய்யப்படும் வரை தமிழக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் போராடும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக என்றும் நிற்கும் என்றும் உறுதியளித்தோம்.
🛑குளத்தை காணவில்லை!!🛑
சென்னை வளசரவாக்கத்தில் அழகான ஒரு குளம் இருந்தது. அதற்கு பெயர் சிவன் கோவில் குளம். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பொறுப்பில் இருந்த போது அந்த குளத்தை மண் அடித்து நிரப்ப போட்ட திட்டத்தை அறப்போர் புகார் அளித்து தடுத்தது. இதையடுத்து அந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கிறோம் என்று ஒரு டெண்டர் போட்டு குளத்தின் அளவை சுருக்கி உள்ளே ஒரு கான்கிரீட் நீச்சல் குளத்தை கட்டிவிட்டார்கள். இது குறித்து அறப்போர் பல்வேறு புகார்கள் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்து வந்த திமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கட்டுப்பாட்டில் இந்த குளம் வந்த பிறகு, நாங்க அதில் ஒரு மண்டபம் கட்ட போகிறோம் என்று டெண்டர் போட்டார்கள். அதையும் கண்டுபிடித்து புகார் அளித்து அறப்போர் இயக்கம் தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு திமுக ஆட்சியில் இந்த குளத்தை பற்றியே மறந்து விட்டார்கள்.
அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சிவன் கோவில் குளத்தை TVK அரசு காப்பாற்றுமா? இதன் உள்ளே கட்டப்பட்டுள்ள நீச்சல்குளத்தை அகற்றி முழு கொள்ளளவுக்கும் (20500 CUM) இந்த குளத்தை தூர்வாரி இந்த பகுதியின் நிலத்தடி நீர் பெருக TVK அரசு முயற்சி எடுக்குமா?
@RameshOffcl@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu@tnhrcedept
தமிழ் கல்வி எங்கள் உரிமை,
திமுகவும் (@arivalayam), ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களின், தவெகவும் எவ்வளவு தகிடுதத்தங்களை செய்தாலும் நாங்கள் அதை பெற்றே தீருவோம்!
@blsanthosh@NainarBJP
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான கடந்த 12 ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறை வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான நவீன கட்டமைப்பு வசதிகள், நேரடி நிதியுதவி, உலகத் தரமான பயிற்சி, திறமைகளை கண்டறியும் திட்டங்கள் மற்றும் பெண்கள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தியா இன்று உலக விளையாட்டு அரங்கில் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்துள்ளது.
“கேலோ இந்தியா” (Khelo India), “டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்” (TOPS), “ஃபிட் இந்தியா” (Fit India) போன்ற திட்டங்கள் நாட்டின் விளையாட்டு சூழலை முழுமையாக மாற்றியமைத்துள்ளன. கிராமப்புற இளைஞர்கள் முதல் சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் வீரர்கள் வரை அனைவருக்கும் இந்த அரசு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது சிறந்த சாதனைகளைப் பதிவு செய்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 7 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. அதில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, தடகளத்தில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்திய வீரர்கள் பல்வேறு பதக்கங்களை வென்று நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினர்.
பாராலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தது. மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு உலக அரங்கில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தியது.
2023 ஆம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வரலாற்றில் முதன்முறையாக 100 பதக்கங்களைத் தாண்டி 107 பதக்கங்களை வென்றது. இதில் 28 தங்கப் பதக்கங்கள் இடம்பெற்றன. இது இந்தியாவின் சிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டி செயல்திறனாக அமைந்தது.
பேட்மிண்டனில் பி.வி. சிந்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் பெண் வீராங்கனையாக சாதனை படைத்தார். இந்திய வீரர்கள் பல்வேறு உலகத் தர போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவை பேட்மிண்டன் வல்லரசாக மாற்றினர்.
2022 ஆம் ஆண்டு இந்தியா வரலாற்றில் முதன்முறையாக தாமஸ் கோப்பையை வென்று உலக பேட்மிண்டன் அணிச் சாம்பியனாக உயர்ந்தது. இது இந்திய விளையாட்டு வரலாற்றின் மிக முக்கியமான மைல்கல்லாகும்.
கிரிக்கெட்டில் இந்திய அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வந்தது. உலக கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கம் மேலும் உறுதியானது.
இந்திய சதுரங்கம் புதிய பொற்காலத்தை கண்டது. டி. குகேஷ் உலகின் இளம் வயது உலக சதுரங்க சாம்பியனாக உருவெடுத்து வரலாறு படைத்தார். மேலும் இந்தியா முதன்முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய ஹாக்கி மீண்டும் தனது பெருமைமிக்க நிலையை நோக்கி முன்னேறியது. ஒலிம்பிக் வெண்கலப் பதக்கங்கள், ஆசிய விளையாட்டுப் போட்டி தங்கம் மற்றும் பல்வேறு சர்வதேச வெற்றிகள் இந்திய ஹாக்கியின் மறுமலர்ச்சியை உலகிற்கு உணர்த்தின.
துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, குத்துச்சண்டை, மல்யுத்தம், பளுதூக்குதல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த், ஆசிய மற்றும் ஒலிம்பிக் அரங்குகளில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஒலிம்பிக் மேடைகளிலிருந்து உலக சாம்பியன்ஷிப் அரங்குகள் வரை, கிரிக்கெட் மைதானங்களிலிருந்து சதுரங்கப் பலகைகள் வரை, இந்தியாவின் மூவர்ணக் கொடி உலகம் முழுவதும் பெருமையுடன் பறக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையின் இந்த எழுச்சி, வலுவான தலைமையின், தொலைநோக்கு கொள்கைகளின் மற்றும் வீரர்களுக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும்.
“வளர்ந்த பாரதம்” நோக்கி பயணிக்கும் இந்தியா, விளையாட்டுத் துறையிலும் உலக வல்லரசாக உருவெடுத்து வருகிறது. இது புதிய இந்தியாவின் வெற்றிக் கதை!
@blsanthosh@NainarBJP
#மோடி_அரசு12ஆண்டுகள் #விளையாட்டு_புரட்சி #KheloIndia #NewIndia #ViksitBharat
திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான ஆட்சியில், தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 5 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது, அதில் 3 வயது குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் திரு. ஜோசப் விஜய் அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள், தற்போது தினந்தினம் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கண் துடைப்பு பட்டியலை விடுத்து, டாஸ்மாக் வெள்ளை அறிக்கையை வெளியிடுக!
"மூடப்பட்டதாக" அறிவிக்கப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை பல நாட்களாக பூட்டி வைத்து நாடகமாடிய முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அரசு, ஒரு வழியாக நமது @BJP4TamilNadu கொடுத்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், மூன்று பக்கம் கொண்ட ஒரு பட்டியலை இன்று கடமைக்கே என்று வெளியிட்டு இருக்கிறது.
முகவரியுடன் மூடப்பட்ட கடைகளின் விவரங்களையும், அக்கடைகளில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு வழங்கியுள்ள மாற்றுப் பணி விவரத்தையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனும் நமது வலியுறுத்தலுக்கு நேர்மாறாக, எண்களை வாரி இறைத்து, ஒரு பட்டியலை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு யாருக்கு என்ன பலன்?
இந்த "எண்"துடைப்பு பட்டியலை இன்றே தூக்கி எறிந்துவிட்டு, உடனடியாக தெளிவான முகவரியுடன் கூடிய ஒரு பட்டியலை வெளியிட வேண்டும்! மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள எஞ்சியிருக்கும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, அவற்றை மூடுவதற்கான திட்டத்தையும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் அறிவிக்க வேண்டும்!
" நைட்டு 7 மணிக்கு இந்த புதரில் இருந்து எடுத்தாங்க.. கு*ந்தைக்கு சுய நினைவே இல்ல.. கால் நடுங்கிட்டு இருந்துச்சி.." - கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் கு*ந்தை பா*யல் கொ**.. சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் குழந்தை மீட்கப்பட்டது குறித்து ஆதங்கத்துடன் விவரித்த அப்பகுதி பெண்..
#Gummidipoondi | #Police | #PolimerNews
கட்சி தலைவராக இருந்த காலத்திலும் சரி அதற்கு பிறகும் சரி, அவருடைய ஆதரவாளர்கள் என்ற அடையாளத்தை வைத்து கொண்டு மற்ற தலைவர்களை, குறிப்பாக கட்சியின் மூத்த பெண் தலைவர்களை பற்றி அருவருப்பான, ஆபாசமான கருத்துக்களை சமூக ஊடகங்களில் வந்து பதிவிட்டு வந்தனர்.
இதைபற்றி அவரிடமே பலமுறை நேரடியாக பேசிய பொழுது அதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
#GoatMafia
🚨 BIG BREAKING
US lawmakers from both the Democratic and Republican parties have raised concerns over proposed CHANGES to India's FCRA.
— The pain is real. Looks like the Modi Govt hit the right target 🎯
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.