பூமியில் மனித இனம் உள்ளவரைக்குமான கருத்து யாதெனில் :
நாம் எவ்வளவு நல்லவராக வாழ்ந்தாலும்
எவ்வளவு உதவிகள் செய்தாலும்
நல்லன கூறினாலும்
திருக்குறளே எழுதினாலும்
நமக்கு
புகழ்
பணம்
பதவி என ஒன்று இல்லாவிட்டால் யாருமே கண்டுகொள்ளவோ
மதிக்கவோ மாட்டார்கள்
#உண்மை#மனிதன்
பெரும்பாலான படங்களின் கொடும் வன்முறைக் காட்சிகள் தொடர்ந்து செல்ஃபோன் வழியே குழந்தைகள் மனதில் பதிந்து அவர்கள் வளர வளர அவை செயலில் வெளிப்படுகின்றன.
செல்ஃபோன் தான் குழந்தைகளை வளர்க்கிறது.
அனிமல்,மார்கோ,ஹிட்3,டாக்ஸிக் வகையறா காட்சிகள் உணவாக இருக்கும்போது அதுவே இயல்பாக வெளிப்படும்
ஏங்க இங்கனயே தான உங்க முன்னாடி நிக்கிறேன்,உள்ளயே போகல..இப்ப வெளியவும் போகல..கொஞ்சம் முன்ன போனாத்தான் லாக் ஓபன் ஆகும் உங்க முன்னாடிதான் 10 அடி ப���யிட்டு வரப்போறேன்னா அதெல்லாம் போகக்கூடாதுனு சொன்னாங்க.அதோட வெளியே செல்லும் வழியில் எதுவும் வாங்காம வந்தாச்சு.
அதுக்கப்புற��் நோ டிமார்ட்
DMart ல இதுபோல ஓர் அனுபவத்துக்கு பின் அங்கே செல்வதே இல்லை.காரை நிறுத்திட்டு உள்ளே போற வழியிலை போயிட்டு வாசல்ல நிக்கிறேன்..
மனைவி பின்னாடி வந்தவங் ஏங்க ஃபோன் கிர்ல இருக்குனு சொல்ல கார் லாக்க எடுக்க வாசல்ல 2 அடி எடுத்துவச்ச உடனே குறுக்க கைய நீட்டி போகக்கூடாதுங்கனு சொல்றாங்க...
Scale up ல தடுமாறுறாங்கன்னு தோணுது ex Kannan departmental. 7 இடத்துல ஆள நிறுத்தி billing & checking process கொடுமையா இருந்துச்சு. வர்றவனையெல���லாம் திருடன் ரேஞ்ச்க்கு இருந்தா trust issues ஏ பிசினச கொன்னுடும். Have seen with other big stores as well. Good at single ownership stores
பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களின் குணம் இதுதான்.
நிறைய ஊர்களில் நிறைய நண்பர்களின் பகிர்வும் இப்படித்தான் இருக்கிறது.
எங்கும் திமிர், தெனாவட்டு, அராஜகம்,சுயநலம் நிறைந்த மனித��்கள்.
#தமிழ்நாடு
எனக்கின்னே வருவீங்களாடா?
நேற்று சாயந்தரம் 5 மணிக்கு, என்னுடைய Brother-in-lawவிடமிருந்து ஒரு ஃபோன்.
“நம்ம மாப்பிள்ளை வீட்டு வாசல்ல ஒரு கார் நிக்குது. கொஞ்சம் என்னன்னு பாருங்க!”
எனக்கு ஒரே ஆச்சரியம்! மாப்பிள்ளையும் அவன் மனைவியும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் மாம்பலம் போயிருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் வருவார்கள்.
வாசல் பெருக்குபவருக்குச் சிரமம் இருக்க வேண்டாமென்று வீட்டைப் பூட்டிவிட்டு, வாசல் கேட்டை மட்டும் வெறும் கொண்டி போட்டு விட்டு, பூட்டாமல் போயிருக்கிறார்கள்.
உடனே மாப்பிள்ளையைக் கூப்பிட்டேன். “நீ யாருக்காவது காரை பார்க் பண்ண permission கொடுத்திருக்கிறாயா?”
அவனுக்கு என்னுடைய கேள்வியே ஒரு Breaking News!
“இல்லையே!” என்றான். என்னிடம் Duplicate சாவி உண்டு. அவனுடைய வீடு மூன்று நிமிட தூரம்தான். போய்ப் பார்த்தேன்.
காம்பவுண்டுக்குள் ஒரு கார் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது! காரை எடுக்காமல், வீட்டுக்குள் யாரும் போக முடியாது. அந்த அளவு close parking.
காரைப் பார்த்தால், வீட்டின் உரிமையாளரே வாடகை கொடுத்துக் குடியிருக்கிறாரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு உரிமையுடன் நின்றிருந்தது! அருகில் ஐயப்பன் கோவில். கொஞ்சம் கூட்டம் இருந்தது.
அங்கே போய், “இங்கே யாராவது கார் பார்க் பண்ணியிருக்கீங்களா?” என்று சத்தமாகக் கேட்டேன்.
கோவில் ஆபீஸில் இருந்தவரும் கூப்பிட்டார். பதிலில்லை!
ஐயப்பனைத் தரிசிக்க வந்தவர்கள் எல்லோரும் இருந்தார்கள். ஆனால் காரின் உரிமையாளர் மட்டும் மாயமாகிவிட்டார்! வேறு வழியின்றி அவன் வீட்டுக்குத் திரும்பினேன்.
கேட்டைப் பூட்டினேன். பூட்டில், “CALL THIS NUMBER” என்று ஒரு பேப்பரில் என் ஃபோன் நம்பரை எழுதி பூட்டில் சொருகிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒருமணி நேரம் ஓடிவிட்டது. I was slightly restless.
இரவு 7.30 மணிக்கு ஃபோன். “சார்! காரை எடுக்கணும். பூட்டைத் திறந்து விட��ங்க!”
நான் அப்போது மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். “சாப்பிட்டுவிட்டு வருகிறேன்” என்று சொன்னாலும், அவசர அவசரமாகச் சாப்பிட்டேன்.
காரை நிறுத்தியவருக்கு அவசரம். காரைப் பூட்டிய எனக்குச் சாப்பிடக்கூட அவகாசமில்லை! என்ன ஒரு சமூக நீதி!
போய்ச் சேர்ந்தேன். ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அருகில் அவர் மனைவி. என்னைப் பார்த்ததும், “என்ன சார்! இப்படிப் பூட்டிட்டுப் போயிட்டீங்க?” என்���ார்.
அவர் கேட்ட தோரணையைப் பார்த்தால், அவருடைய சொந்த வீட்டில் நான் அத்துமீறிப் பூட்டுப் போட்டுவிட்டது போலிருந்தது!
நான் பொறுமையாக, “நீங்க யாரு சார்?” என்றேன்.
“கோவிலுக்கு வந்தோம். எங்க பார்க் பண்ணலாம்னு பார்த்தோம். வீடும் பூட்டியிருந்தது. கேட்லயும் பூட்டு இல்லை. அதான் பார்க் பண்ணினேன்!” என்றார்.
அடடா! என்ன ஒரு அருமையான லாஜிக்! வீட்டில் ஆள் இல்லையென்றால் அது Google Maps காட்டும் Free Parking Zone ஆகிவிடுமா?
எனக்குச் சரியான கோபம். “பார்க் பண்ணினீங்க சரி. பக்கத்து வீட்டிலேயாவது சொல்லியிருக்கலாமே? உங்க வீட்டில் யாராவது இப்படி வந்து காரை நிறுத்தினால் சும்மா இருப்பீங்களா?” என்றேன்.
அதற்குள் அவர் மனைவி ஆரம்பித்தார். “என்ன ��ெரிய திருட்டுக் குத்தமா பண்ணிட்டோம்?”
நல்லவேளையாக அந்தக் கணவர் உடனே மனைவியை OFF செய்தார்.
எனக்கு அந்த பெண்மணி பேசிய ஸ்டைலில் கோபம் வந்தாலும், மேலும் பேசுவது சரியாக இருக்காது என்று அமைதி காத்தேன். அவர்கள் காரை எடுத்துக் கொண்டு போனால் தேவலை என்றிருந்தது
கேட்டைத் திறந்தேன். அவர் காரை எடுத்தார். கிளம்பிப் போனார்.
குறைந்தபட்சம் ஒரு “Sorry” கூட இல்லை! பிறகு கேட்டை மீண்டும் பூட்டினேன்.
மாப்பிள்ளையைக் கூப்பிட்டேன். “இனிமேல் வீட்டில் நீங்க இல்லைன்னா, கண்டிப்பாகக் கேட்டைப் பூட்டிட்டுத்தான் போகணும்!” என்றேன்.
ஏனென்றால் இன்றைக்கு ஒரு கார் வந்தது. நாளைக்கு Parking Available” என்று போர்டே வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இதில் இன்னொரு பெரிய சந்தேகம்... கேட் திறந்திருந்தால் கார் நிறுத்தலாம் என்றால், வீட்டுக் கதவு திறந்திருந்தால் உள்ளே போய் AC போட்டுத் தூங்கலாமா?
எனக���கு இன்னும் ஒரு விஷயம் புரியவில்லை. கோவிலுக்கு வந்தவர்கள், அடுத்தவர் வீட்டில் அனுமதியின்றி காரை நிறுத்திவிட்டு, அதைக் கேட்டால் நம்மையே குற்றவாளி போலப் பார்ப்பது என்ன மாதிரியான Behaviour?
எவ்வளவு வலியுடன் வாழ்ந்திருப்பார்.
நம் உழைப்பை இன்னொருவர் பெயரில் எழுதும் முட்டாள் மக்கள் இருப்பதால் தான் என்னவோ தேவா மட்டுமல்ல இன்னும் பலரின் புகழ் வெளி உலகிற்கு தெரியவில்லை.
அரங்கன் நிழலில் அமைதியில் நிறைக
#தேனிசைத்தென்றல்_தேவா
தேனிசை தென்றல் தேவா இசையில் கார்த்திக்- இஷா கோபிகர் நடித்த திரைக்கு வராத திரைப்படம்
காதல் சொல்ல வந்தேன்
செம்பருத்தி பூவே செம்பருத்தி பூவே உள்ளம் அள்ளிப்போனாய் நினைவில்லையா
நமக்கெல்லாம் மிகவும் பிடித்த பாடல்.
மறக்க முடியுமா
#தேனிசைத்தென்றல்தேவா#RIPDevaSir#DevaHits#Devasir
எ��க்குப் பிடித்த தேனிசைத்தென்றல் தேவா பாடல்கள்
ஓ..ஸ்வர்ணமுகி - கருப்பு வெள்ளை
சின்னஞ்சிறு பூவே - ஆத்தா உன் கோயில���லே
முத்துநகையே - சாமுண்டி
எனக்கென பிறந்தவ - கிழக்கு கரை
மன்னவனே - கோட்டை வாசல்
நீ ஒரு பட்டம் - ரோஜாவைக் கிள்ளாதே
வந்தாளப்பா - சீதனம்
#RIPDevaSir
#RIPDevaSir
தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் ரத்தினங்களில் ஒன்று.
கருப்பு வெள்ளை (1993)
திரைப்படத்தின் ஓ.. ஸ்வர்ணமுகி பாடல்.
இன்னும் ரசிக்கப்பட்டிருக்க வேண்டிய பாடல்.
சிலருக்கு இந்தப் பாடல் தெரியாமல்கூட இருக்கலாம்.
ஒருமுறை கேட்டுப் பாருங்கள்.
#தேவா#தேனிசைத்தென்றல்தேவா#DevaSir#90s
காதல் இல்லாதது ஒரு வாழ்க்கையாகுமா என்ற ஒரு பாடலால் நினைவில் இருக்கும் படம்.
காலம் இளமையைக் கடக்கச் செய்யலாம்..
ஆனால் சில பாடல்கள் சில நிமிடங்களுக்கு நம்மை மீண்டும் இளமையாக்கும்.
#மணிரத்னம்#சிற்பி