கேள்வி: வட இந்தியர் ஒருவரை நான்கு சிறார்கள் தாக்குவதை சங்கிகளும், வட இந்திய ஊடகங்களும் மாய்ந்து மாய்ந்து பரப்புகிறார்களே? இது தமிழ்நாட்டின், அரசின் தோல்வியா?
பதில்: முதலில், இப்படியான தாக்குதல்கள் இதுவரை தமிழ்நாட்டில் நடந்துள்ளதா? இது தமிழ்நாட்டில் வழக்கமாக நடக்கும் ஒன்றா? இல்லை. இந்த சம்பவம், isolated incident என ஆங்கிலத்தில் சொல்வார்களே , அதுபோல ஒரு தனித்த சம்ப��ம். ஆனால், அந்த நால்வர் உடனே கைது செய்யப்பட்ட பின்பும், தமிழ்நாட்டின், தமிழ்நாட்டு அரசின், தமிழர்களின் 'கேரக்டராக' 'பண்பாக' 'இயல்பாக' இந்தச் சம்பவம் பரப்பப்படுகிறது.
அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களைப் பாருங்கள். அங்கு மாட்டுக்கறி கொலைகளும், இஸ்லாமியர்கள், தலித்துகள் மீதான கொடூர தாக்குதல்களும், சமீபத்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல்களும் அன்றாடச் செய்திகள். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்படியான செய்திகளைப் பார்க்கிறோம். எத்தனை பேர் மாண்டு போயுள்ளார்கள்! ஆனால் இந்தச் சம்பவங்களை ஒருபோதும் மோடி அரசின், இந்துத்துவவாதிகளின் 'கேரக்டராக' 'பண்பாக' 'இயல்பாக' எந்த ஊடகமும் பரப்பியதில்லை. இன்னும் சொல்லபோனால் யாரும் கைது செய்யப்படுவதுமில்லை, ��ப்படியே கைது செய்யப்பட்டாலும் பில்கிஸ் பானு வழக்கைப் போல மாலை மரியாதை போட்டு அவர்களை பாஜக வெளியில் எடுத்து ஆராதிப்பதைப் பார்க்கிறோம்.
இந்த ஒப்பீடு ஏன் அவசியமாகிறது என்றால், இதைப் புரிந்துகொண்டால்தான் சங்கிகள்/பாஜகவின் அயோக்கியத்தனம் நமக்குப் புரியும். சங்கிகள்/பாஜகவைப் பொறுத்தவரை, முஸ்லிம்களை எதிரியாகக் காட்டி வட இந்திய 'முட்டாள் இந்துக்களிடம்' எப்படி வாக்கு வாங்குகிற��ர்களோ, அதேபோல் தமிழ்நாட்டை எதிரியாகக் காட்டி வட இந்திய 'இந்தி வெறியர்களிடம்' வாக்கு வாங்க முயல்கிறார்கள். ஒரிசா, பீகார் என அவர்களுக்கே உரிய இந்த பிரிவினை அரசியல் ��ந்தச் சம்பவத்திலும் தொடர்கிறது. இதற்கு வெட்கமே இல்லாமல் அண்ணாமலை போன்ற தமிழ்நாட்டுச் சங்கிகள் துணை போகிறார்கள்.
-டான் அசோக்
டிசம்பர் 29, 2025
#100நாள்100கேள்வி