Preparedness cannot be outsourced to the people.
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?
#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர்.
🗓️11/03/2026
போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து,
⛽ அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்
✈️ வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்
⚡️ மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும்
- எனத் தங்களுக்குக் கடிதம் எழுதினேன். (https://t.co/iLujriPP2v)
🗓️12/03/2026
நிலைமையின் தீவிரத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். (https://t.co/5yJehl0kYW)
🗓️14/03/2026
தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு,
🔷 உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, யூனிட்
ஒன்றுக்கு ரூ.2 மானியம்!
🔷 MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!
🔷 தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள TNPCB இசைவாணை பெறத் தேவையில்லை.
🔷 உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடு இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.
உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள அறிவித்தோம். (https://t.co/5H0GZOFAHN)
அப்போதே கேட்டேன்:
மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?
அப்போதும் பதில் இல்லை.
🗓️15/03/2026
தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள்.
மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன்,
அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்:
“எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?”
பெண்களின் உடல் நலனுக்காகவும் நிறைய திட்டங்களைச் செய்து வருகிறார் நம் முதலமைச்சர் அவர்கள். அதில் சிறப்பான திட்டம், இன்று துவக்கி வைக்கப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்
#DMK4TN
அமித்ஷா தன் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும் அவரின் எண்ணம் இங்கு ஈடேறாது.
ஏனெனில் இது தமிழ்நாடு; இந்த மண்ணைக் காப்பது தி.மு.கழகம்! 💪🌄
#Youth4DMK2026
தமிழ்நாட்டை திராவிட இயக்கக் கொள்கை பாசறையாய் வளர்த்தெடுத்த தன்னிகரற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அண்ணா நகரில், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் இன்று நாம் கலந்து கொண்டோம்.
உணர்ச்சி வெள்ளமாக திரண்டிருந்த உடன்பிறப்புகளின் 'கலைஞர் வாழ்க' எனும் வாழ்த்து முழக்கம் விண்ணதிர ஒலித்தது.
கலைஞர் போட்டுத் தந்த பாதையில், கழகத் தலைவர் தலைமையில் தமிழ் மக்களை அணி திரட்டுவோம்!
2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று இது 'திராவிட மண்' என்பதை நம் எதிரிகளுக்கு உணர்த்துவோம்!
@evvelu@PitchandiK@dmk_raja@Dayanidhi_Maran@CNAnnaduraiMP@skpkaruna #EVKamban
பல கட்சிகள், இயக்கங்கள் உறுப்பினர்கள் சேர்க்கவே தடுமாறிக் கொண்டிருக்கும்போது, ஒரு லட்சத்து 30 ஆயிரம் நிர்வாகிகள் கூடிய கழக இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!
@Udhaystalin#youth4dmk2026
கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்ட @MPaasarai பக்கத்தில் இதுவரை…
⚫️வெளியான தொடர்களின் எண்ணிக்கை: 22
🖋️பங்களித்துள்ள கட்டுரையாளர்கள்: 16
🗓️வெளியான மொத்த நாட்கள்: 1,000
#முரசொலிபாசறை1000
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose!
Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation.
At #Oxford, I spoke with pride as an heir to #Periyar’s legacy, honouring the revolution that turned centuries of subjugation into the eternal anthem of #SelfRespect.
We aren’t just celebrating history; we are guiding tomorrow.
பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!
சமத்துவம் போற்றுவோம்!
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!
🔗: https://t.co/vwXw8Xwsly
#PeriyarAtOxford #CMStalinInEurope #CMStalinInOxford #Periyar