ராஜாவுக்கு விருது கொடுத்ததுல புதுசா பெருமை வர எதுவுமில்லை. அவர் மோடி அரசு பத்தி சொன்னதையும் பெருசா எடுக்கத் தேவையில்லை. தலைவர் மாதிரிதான் அவருக்கும் பேசத் தெரியாது. திறமைக்கு வந்தனங்கள் 🙏🙏🙏
கலைஞர் 5 வருஷம் சக்கர நாற்காலியிலே அமர்ந்து ஆட்சி செய்தவர். ஜனாதிபதி, பிரதமர் உடன் பல மேடைகளைக் கண்டவர். வயது அனுமதித்தவரை மரபைக் கடைபிடித்தார். முதுமை அனுமதிக்காதபோது அமைதிகாத்தார். ஒருபோதும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசியகீதத்துக்கும் வேறுபாட்டைக் கடைபிடித்ததில்லை.
பிரியங்களின் பொழிவில்
காதலின் பிரமிப்பில்
அழகியாய்
தேவதையாய்
உலவி திரிந்து இருந்திருக்கிறேன்.
இப்போதும்
கொடூர சாத்தனாய்
இன்னும் அதிக காதலோடு
மீளும் உன் நினைவுகளோடு
பயணித்துக் கொண்டு இருக்கிறேன்,