வரலாறு எழுதப்படவில்லை மீண்டும் திரும்பி வந்துள்ளது! 💥🔥
“C. ஜோசப் விஜய்” என்ற பெயரை தமிழக அரசியல் வரலாறு என்றும் நினைவில் வைத்திருக்கும்! 💯 @TVKVijayHQ
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பு மக்கள் நம்பிக்கையின் வெற்றி!
இது ஒரு சாதாரண தருணம் அல்ல… தமிழகத்தின் புதிய எழுச்சியின் தொடக்கம்!
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு C.ஜோசப் விஜய் அவர்கள்..🥺 @CMOTamilnadu
#TVKVijay #CMOathCeremony #CM_Vijay #TamilNadu #TVK
@NellaiTVKITWing
ஒரு பெரிய உண்மைய சொல்லனும்னா.. Ipl பாத்து 4 நாள் ஆச்சு.... யாருக்கு யாருக்கு மேட்ச்னு கூட பாக்கல🤣🤣🤣🤣🤣🤣
IPL ல விட அரசியல entertainment ஆக்கிட்டான் என் தலைவன் 😍😍😍😍
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“தவெக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் நாளை சென்னை வரவேண்டாம்“ என தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் தவெக தலைமை
நாளை தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க இருந்த நிலையில்,
தொடரும் இழுபறி
#TVK#Vijay#TVKVijay#ThanthiTV
மக்கள் முதல்வர் விஜய் அவர்களுக்கு நெருக்கடிகள் என்பது புதிதல்ல.
இன்று அரசியலில் அவர் சந்திக்கும் ஒவ்வொரு அழுத்தத்தையும், அவர் ஏற்கனவே தனது திரைப்பயணத்தில் பலமுறை எதிர்கொண்டவர். ஒவ்வொரு பட ரிலீஸுக்கும் எத்தனை தடைகள், எத்தனை பிரச்சனைகள், எத்தனை தாக்குதல்கள் வந்தாலும்… அவற்றை எல்லாம் மக்களின் அன்பாலும் ஆதரவாலும் வெற்றியாக மாற்றியவர்.
அதேபோல அரசியலிலும் அவர் சந்திக்கும் ஒவ்வொரு நெருக்கடியையும் தாண்டி வருவார்.
ஏனெனில் அவர் பின்னால் இருப்பது சாதாரண கூட்டம் அல்ல… மாபெரும் மக்கள் சக்தி.
அவரை தடுக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், அது இன்னும் வலிமையான தலைவராக செதுக்கிக்கொண்டே இருக்கிறது.
நெருக்கடிகளை கல்லாக எறிந்தால், அதையே சிலையாக செதுக்கிக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்கிறது.
கண்டிப்பாக அவர் நினைத்ததை சாதிப்பார்.
மக்களின் ஆதரவோடு வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்பார்.
@TVKVijayHQ
எதுக்குங்க ஒரு மனுஷன் மேல மட்டும் இவ்வளவு வன்மம்..
@mkstalin@EPSTamilNadu@BJP4India
அவரோட படத்தை தான் postpone பண்ணீங்க..இப்போ அவரு நேர்மையாய் ஜெயிச்சி பதவிக்கு போறத கூடவா postpone பண்ணீங்க..
இப்போ தான் தெரியுது எங்க அண்ணனோட power என்னன்னு, மொத்த கட்சிகளும் சேர்ந்து ஒரு தனி மனிதனை எதிர்க்கிறீங்கன்னா எங்க அண்ணனை பார்த்து பயப்படுறீங்கன்னு தான் அர்த்தம்
நீங்க நம்பிக்கையோடு இருங்க @TVKVijayHQ Anna.. என்ன நடந்தாலும் நாங்க உங்க பக்கம் தான் இருப்போம்..எப்போ இருந்தாலும் நீங்க தான் CM பதவியில உட்காருவீங்க..
"C. Joseph Vijay எனும் நான்"
இந்த வார்த்தையை கேட்காம விடமாட்டோம்..✍️
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் உட்கார ஒரு சீட்டு தரல அப்படின்னு,
முதல்வர் சீட்டுக்கு குறி வச்சு வந்தவரு நம்ம ஆளு.
இன்னைக்கு நீ அந்த முதல்வர் சீட்டையும் தராமல் இழுத்து அடிச்ச அப்படின்னா,
நாளைக்கு இதுக்கு மேல என்ன சீட்டு இருக்கு அப்படின்னு அதை தேடி போவாரு அந்த மனுஷன்.
ஜெயிச்சுட்டும் வருவாரு. அதான் அவரோட கெட்ட பழக்கம்.
ரஜினி கமல் மாதிரி காலில் விழுகிற ரகம் அவர் கிடையாது.
அவர் வேற ரகம்.
💪#tvkvijay
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I extend my congratulations to Thiru Vijay Avl on his spectacular victory in the Tamil Nadu Assembly elections. I wish him every success in his efforts to serve the people of Tamil Nadu and to contribute meaningfully to their progress and well being.
@TVKVijayHQ