புதுமையான முன்னெடுப்பான #திமுக75_அறிவுத்திருவிழா-வின் ஒருபகுதியாக நடைபெற்ற 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' கருத்தரங்கத்தின் நிறைவுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றினோம்.
அறிவுத்திருவிழா நடத்தப்பட வேண்டிய அவசியம், இவ்விழாவுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பகிர்ந்துகொண்டதுடன் கழகத்தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ஆணையை ஏற்று இனி கழக இளைஞர் அணி ஆண்டுதோறும் ‘அறிவுத்திருவிழா’வை நடத்தும் என்றும் உறுதியளித்தோம்.
இருநாள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற காரணமாய் இருந்தவர்களுக்கு மீண்டும் நன்றி. வள்ளுவர் கோட்டத்தில் 16-ஆம் தேதி வரை நடைபெறும் முற்போக்கு புத்தகக்காட்சியில் அனைவரும் கலந்துகொண்டு வாசிப்பை பரவலாக்கவும் 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலை அனைவரும் வாங்கிப் படிக்கவும், நூல் குறித்து உரையாடவும் கேட்டுக்கொள்கிறோம்.
அறிவியக்கத்தின் ஆக்கப் பணிகள் தொடரும்! 🖤❤️
#DMK4TN @arivalayam@dmk_youthwing
வியாசர்பாடி குட்செட் பகுதியில் உள்ள மாநகராட்சி குளத்தை தூர்வாரி விரிவுபடுத்தும் பணிகளை இன்று நேர்வில் ஆய்வு செய்தோம்.
அதிகளவிலான மழைநீர், அந்த குளத்துக்குச் சென்று சேரும் வகையில், அந்த குளத்தை 9.5 ஏக்கர் அளவிற்கு பெரிய குளமாக அகலப்படுத்திடும் பணி குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து அதனை விரைவாக முடித்திட உத்தரவிட்டோம்.
@KN_NEHRU@rdsekarmla@DrKalanidhiV@JJEbenezer1@PriyarajanDMK@MMageshkumaar
இளம் தலைமுறைக்கு இயக்கக் கொள்கைகள் - சாதனைகள்- வரலாற்றை எளிய முறையில் கடத்தும் நோக்கில், நம் @dmk_youthwing சார்பில் முரசொலி நாளிதழில் வெளியாகும் @MPaasarai பக்கத்தின் 1,000-வது இதழ், நாளை வெளியாக இருக்கும் நிலையில், அந்த இதழின் பிரதியை கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம், இன்றைய தினம் வழங்கி வாழ்த்து பெற்றோம்.
“முரசொலியைத் திறந்தாலே கடைசிப் பக்கத்தைத் தானே' முதலில் படிக்குறோம்” என்ற சாமானிய வாசகனின் வார்த்தையே இப்பக்கம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதாக கருதுகிறேன்.
கொள்கை! கொள்கை! கொள்கை! என்றே முழங்கும் அறிவார்ந்த இளைஞர் கூட்டத்தை உருவாக்க, முரசொலி பாசறை தொடர்ந்து செயலாற்றும்!
#முரசொலிபாசறை1000
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, தீரர் கோட்டமாம் திருச்சியில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.
எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று உரையாற்றினோம்.
தமிழ்நாடு போராடும்!
தமிழ்நாடு வெல்லும்!!
@KN_NEHRU@Vairamani_DMK@MPalaniyandiMLA@ArunNehru_DMK@Soundra_2505@ManachanallurSK@C_ANAND_KUMAR
“கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்றைக்கு சென்னை வருகை தந்த மாண்புமிகு தெலங்கானா மாநில முதலமைச்சர் சகோதரர் திரு.@revanth_anumula அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் இணைந்து வரவேற்று மகிழ்ந்தோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய உத்தரவின் பேரில் விருதுநகரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் 837 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஆணைகள் என ரூ.10.84 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
மேலும், ரூ.25.88 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, ரூ.124.57 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினோம்.
நம் #திராவிட_மாடல் அரசு மக்களுக்கு மென்மேலும் திட்டங்களைத் தந்திட தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென பயனாளிகளைக் கேட்டுக்கொண்டு, அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@KKSSRR_DMK@TThenarasu@ArrSeenivasan@SThangapandian2@KNavaskani
விருதுநகர் தெற்கு மாவட்டக் கழகம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - வட்ட - கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், BLA-2 நிர்வாகிகளுடன் சாத்தூரில் இன்று கலந்துரையாடினோம்.
மண் - மொழி - மானம் காக்கும் ஜனநாயகப்போரில், கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றது என்ற சாதனையை சாத்தூர் தொகுதியிலிருந்து தொடங்குவோமென உரையாற்றினோம்!
2026-இல் தலைவர் அவர்கள் தலைமையில் மீண்டும் கழக ஆட்சியை அமைக்க அடுத்து வரும் ஒவ்வொரு நொடியும் அயராது உழைப்போமென எடுத்துரைத்தோம்!
@KKSSRR_DMK@TThenarasu@ArrSeenivasan@SThangapandian2
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-இல் கட்டப்பட்ட சைதாப்பேட்டை வாழைத்தோப்பு குடிசைமாற்று வாரியக் குடியிருப்புக்கு மாற்றாக, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.77.76 கோடி மதிப்பில் 504 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக்குடியிருப்புகளைப் பயனாளிகளிடம் வழங்கும் வகையில், அதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்ற விழாவில் வழங்கி மகிழ்ந்தோம்.
வீடுகளைப் பெற்ற பொதுமக்கள் அவற்றை முறையாக பராமரித்திடுமாறு கேட்டுக்கொண்டோம். @thamoanbarasan@Subramanian_ma@thayagamkavi
இருளை அகற்றி வெளிச்சம் பரப்பும் சூரியன் போல், அறியாமை அகற்றி அறிவு ஒளி பரவிடச் செய்யும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச்சமூகம் அறிவுசார் சமூகமாக வளர்ச்சி பெற அடித்தளம் அமைத்தவர்கள் ஆசிரியர்களே!
வகுப்பறையில் தங்களையே மெழுகுவர்த்தியாக ஏந்தி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆசிரியர்களின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
ஆசிரிய பெருமக்களின் முன்னேற்றத்துக்கு கழகமும் - கழக அரசும் என்றும் துணை நிற்கும்!
#TeachersDay2025
தி.மு.கழகத்தின் முதன்மை அணியாம் @dmk_youthwing நிர்வாகி என்பது பதவி அல்ல, பொறுப்பு என்ற உணர்வுடன் 2026 தேர்தல் களம் காண்போம். மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், வெற்றிவாகை சூடுவோம்!
#கழக_இளைஞர்_அணி
Addressed the press today to announce the #IRONMAN5150#Triathlon which will be held in Chennai on January 11, 2026, along the scenic ECR.
Under the visionary #DravidianModel Government led by our Honourable Chief Minister @mkstalin, we are proud that India will be the third country in Asia to host this prestigious endurance event supported by SDAT.
I warmly invite all endurance enthusiasts to participate in large numbers and make it a grand success.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை #OxfordUniversity-இல் திறந்து வைத்து இருக்கிறார் நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
திராவிட இயக்கத்தின் நீண்ட நெடும் பயணத்தில் மேலும் ஒரு வரலாறுச் சிறப்புமிக்க நாள் இது!
நம் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் ஆட்சிக்காலத்தில் பெரியார் உலகமயமாவதை காணும் போது மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.
பகுத்தறிவின் துணையோடு சுயமரியாதை உணர்வோடு ஆதிக்கத்தை என்றும் வீழ்த்துவோம்!
வாழ்க தந்தை பெரியார்!
#CMStalinInOxford #Periyar #PeriyarAtOxford
இந்திய ஒன்றியத்தின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் தி.மு.கழகத்தின், ஆற்றல்மிகு அணியான நம் @dmk_youthwing-க்கு ஒன்றியம்-நகரம்-பகுதி-பேரூர்களைத் தொடர்ந்து கிளை-வார்டு-பாகம் வரை உள்ள அமைப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறோம்.
சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட துறைமுகம், எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வார்டுகளிலும் பாகங்களிலும் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களை, இன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் சந்தித்து ஆற்றவேண்டிய கழக-கொள்கைப் பணிகள் குறித்து உரையாற்றினோம்.
2026-சட்டமன்றத் தேர்தலில் வரலாறு படைக்க, கழக இளைஞர் அணி கடமையாற்றும்.
@arivalayam@PKSekarbabu@Joel_Dmk@VanavilVijay
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, #TeachersDay2025-ஆன இன்று, ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’-க்கு தேர்வாகியுள்ள 396 ஆசிரியர்களுக்குப் பதக்கம், சான்றிதழ், பரிசுத்தொகையை @ACLChennai-இல் வழங்கி மகிழ்ந்தோம்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தேர்வாகியுள்ள 2810 பேருக்கு, பணி நியமனம் வழங்குவதன் அடையாளமாக, 40 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினோம்.
நல்லாசிரியர் விருது பெற்றோருக்கும், ஆசிரியப்பணி எனும் அறப்பணியை தொடங்குவோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்!
@Subramanian_ma@PKSekarbabu@Anbil_Mahesh@PriyarajanDMK@mageshkumaar@dindigulleoni
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் சகோதரி கிளாரா. திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.
உடனே அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் சேர்க்கச் சொல்லி, நேர்மையால் உயர்ந்து நிற்கிறார் அவர்!
இத்தூய உள்ளத்துக்குச் சொந்தக்காரரான சகோதரி கிளாரா மற்றும் அவரது குடும்பத்தாரை நேரில் சந்தித்துப் பாராட்டினோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, அவருக்குப் புத்தாடையும், @dmk_youthwing அறக்கட்டளை சார்பில் நிதியும் வழங்கி வாழ்த்தினோம்.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு நலிந்த கலைஞர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டத்துக்கு ரூ.9 கோடி ஒதுக்கியது.
இதனடிப்படையில் தமிழ்நாடெங்கும் 2,500 நலிந்த கலைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி வழங்கும் விதமாக, இன்றைய தினம் சென்னையில் 10 கலைஞர்களுக்கு நிதி உதவிக்கான ஆணைகளை வழங்கி வாழ்த்தினோம்.
மக்களை மகிழ்வித்து தமிழ்ப்பண்பாட்டின் முகமாகத் திகழும் கலைஞர்கள் வாழ்வு சிறக்கட்டும்!
@mp_saminathan@vagaiyaar@ThayanbanVijaya #ManivasaganIAS #KavithaRamuIAS
நாட்டு விடுதலையே வேட்கையென வாழ்ந்து மறைந்த செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் இன்று!
சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்திற்குச் சென்று, சிதம்பரனாரின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினோம்.
தன்னலங்கருதாது தமிழ்நிலத்தில் சமரசமின்றி ஆதிக்கத்தை எதிர்த்த கப்பலோட்டியத் தமிழரின் புகழ் ஓங்கட்டும்!
@Subramanian_ma@PKSekarbabu@mp_saminathan@PriyarajanDMK@MMageshkumaar