தமிழறிஞர் - பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் வயது மூப்பினால் உயிரிழந்த செய்தியறிந்து வருந்தினேன்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பேச்சாளர்.
தனது நகைச்சுவை கலந்த கருத்தாழமிக்க பேச்சினால், கடைக்கோடி மக்களிடமும் பட்டிமன்றங்களை கொண்டு சேர்த்தவர்.
ஏராளமான அடுத்த தலைமுறை தமிழ் பேச்சாளர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தக்காரர்.
அய்யா சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றங்கள் இல்லாத விழாக்காலங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அன்பை பெற்றவர்.
அவரின் மறைவு, பேச்சு உலகிற்கும் - பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு.
அய்யா சாலமன் பாப்பையா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார் - நண்பர்கள் - பட்டிமன்ற ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பணிகள் என்றென்றும் தமிழ் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கும்.
#SolomonPappaiah
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
உதிப்பது உதயசூரியன்தான்: சீர்காழியில் ஒலித்த மக்களின் குரல்
🌄 அண்ணன் வைகோ அவர்களின் ஆதரவு பெற்ற மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் அவர்களுக்கு ஆதரவாக இன்று காலை ஒன்றரை மணி நேரம் சீர்காழியின் வீதிகளில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தேன்.
🌄 எங்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.
🌄 #DravidianModel அரசின் திட்டங்களை நான் கூறுவதற்கு முன், மக்களே என்னிடம் சொல்லி மகிழ்கிறார்கள்.
🌄 சீர்காழியிலேயே அவரவர் பகுதிகளில் எத்தனை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என என்னை உரிமையோடு நிறுத்திச் சொல்கிறார்கள்.
🌄 இதைவிட வேறென்ன வேண்டும்! மீண்டும் கழக ஆட்சியே! #வெல்வோம்_ஒன்றாக!
#VoteForDMK
தீவிரப் பரப்புரைப் பயணத்திற்கிடையில், ஊடகவியலாளர் @Kolappan அவர்களது கேள்விகள் மூலமாக @the_hindu நாளேட்டுக்கு எனது பதில்களை வழங்கியுள்ளேன்.
🔷 நமது சாதனைகளும் வாக்குறுதிகளும் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளன. 8000 ரூபாய் கூப்பன், 2000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் “சூப்பர்ஸ்டார்” என ஒளிர்கின்றன; மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளன.
🔷 பா.ஜ.க.வுடன் இணக்கமாகச் சென்றால் நன்மை வராது; மாநில உரிமைகளைத்தான் இழக்க வேண்டியிருக்கும்.
🔷 பா.ஜ.க. என்பது ஜனநாயகத்துக்கான பேராபத்து. அதனால்தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அத்தனை அரசியல் இயக்கங்களும் ஓரணியில் திரண்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் எழுப்பியுள்ள பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளேன்.
விரிவாகப் படித்திட: https://t.co/3vMSTNtJCI
செம்மொழி பேசும் தமிழ்நாட்டில் மும்மொழிக்கு இடமில்லை!
சங்கரன்கோயிலில் இருந்து ஒன்றியக் கல்வி அமைச்சருக்குச் சவால் விட்டிருக்கிறேன்.
தேர்தல் பரப்புரைக்கு வந்து, "NDA ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படும்" என அறிவிக்கும் துணிச்சல் BJP-யில் யாருக்கு இருக்கிறது எனக் காணத் தமிழ்நாட்டு மக்களோடு நானும் ஆவலாக இருக்கிறேன்.
மும்மொழி என ஆணவத்தோடு பேசித் திரியும் டெல்லி ஓனர்களைப் பழனிசாமி கண்டிப்பாரா? டெல்லி Remote Control ஆட்டுவித்தால் ஆடும் அ.தி.மு.க.வுக்குத் தமிழுணர்வு இருக்கிறதா?
இந்தக் கொள்கையற்ற கூட்டணியிடம் தமிழ்நாடு மீண்டும் சிக்காது! #DravidianModel 2.0 தான் அமையும்!
#TenkasiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறோம். இன்றைய தினம் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @kvmuthuramaling அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசின் சாதனைகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள், #NDA கூட்டணியின் துரோகங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி உரையாற்றினோம்.
#திராவிடமாடல் நல்லாட்சி தொடரட்டும்; தமிழ்நாடு மேலும் சிறக்கட்டும்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #DMK4TN #VoteForDMK
அடுத்த 38 நாட்களுக்கு நாம் செலுத்தபோகும் உழைப்பே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு காக்க, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களே மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க, களம் காண்போம்! வெல்வோம்! வரலாறு படைத்திடுவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
திருப்பத்தூர் மாவட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற போது, அதில் நாம் கலந்து கொண்டோம்.
சார்பு அணிகளின் பிரச்சாரப் பணிகளை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டோம்.
“கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் ஒன்றிணைந்து, பாசிஸ்ட்டுகளையும், அடிமைகளையும் அடியோடு வீழ்த்துவோம்.
டெல்லியின் சர்வாதிகாரத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்பதை நமது வெற்றியில் காட்டுவோம்” என உரையாற்றினோம்!
@evvelu@DevarajKDmk@dmkathiranand@CNAnnaduraiMP@NallathambiMla@a_vilvanathan@Prabhugajendran
தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”!
குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - சுற்றுலாப் பயணிகள் கூடும் தமிழர் கடற்கரையான மெரினா நெடுக, உழைப்பாளர் சிலை - விடுதலை வீரர்கள் சிலைகள் - தமிழ் வளர்த்த ஆன்றோர் சிலைகள் உள்ளிட்ட சிலைகளுடன், தமிழ்நாட்டின் கல்விப் பெருமையைச் சொல்லும், “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”-யைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்! #வெல்வோம்_ஒன்றாக!