நிர்மல் குமார் பேசிய வீடியோவைப் பற்றி இரண்டு நாட்களாகவே யோசித்துக்கொண்டிருந்தேன்.
எலக்ட்ரீஷியன், பிளம்பர் போன்ற தொழில்களுக்கு டிமாண்ட் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் அதை ஏன் கல்லூரி மாணவர்களிடம் போய் பேச வேண்டும்?
அங்கேதான் உண்மையான விஷயம் இருக்கிறது. இன்னும் 5 வருடங்களில் நம் ஊரும் அமெரிக்காவைப் போல கல்விக் கட்டணங்களில் மாறப��போகிறது. நான் படிக்கும்போது தனியார் கல்லூரிகளில் அதிகபட்ச கட்டணம் ₹40,000; ஹாஸ்டல் உள்ளிட்டவை சேர்த்தாலும் சில இடங்களில் ₹1 லட்சம் வரைதான். அதுவே அப்போது பெரிய தொகையாகத் தெரிந்தது.
இன்றோ பொறியியல் படிக்க வருடத்திற்கு ₹1 லட்சத்திற்குக் குறைவாகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளே இல்லை. சில கல்லூரிகள் ₹4 லட்சம் வரை போகின்றன.
ஆனால் வேலைவாய்ப்பு 40-60% மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மீதி பேர் கிக் ஒர்க்கர்களாக (குறிப்பாக டெலிவரி) மாறுகிறார்கள்.
“நான் படித்தாலும் இதே சம்பளம்தானே” என்று நினைத்து ஏற்கனவே பலர் டிராப் அவுட் ஆகிறார்கள். அமெரிக்காவுக்கும் நமக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், அங்கே எதுவுமே தெரியாமல் டிகிரி வாங்க முடியாது. இங்கேயோ டிகிரி முடிப்பது மிக எளிதாகிவிட்டது. ஒருபுறம் கல்லூரிகள் திறக்கத் திறக்க, மறுபுறம் உள்ளே எல்லாரையும் தூக்கிப் போட்டு டிகிரி மில்லாக மாற்றி பட்டங்களை வழங்குகிறோம். நான்கு வருடம் இன்ஜினி���ரிங் படித்தும் ஒன்றும் தெரியாத நிலை ஏற்படுகிறது. இது மாணவனின் திறன்/கற்றல் திறன் தொடர்பான பிரச்சினை. இதைச் சரிசெய்யாமல் “நீ படிக்கவே வேண்டாம்” என்று நேரடியாகச் சொல்வது வன்மம்.
இன்னும் 5-10 வருடங்களில் அமெரிக்காவைப் போல படித்தவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த சிரமப்பட்டு உழைக்கும் நிலையும், படிக்காமல் ஏதாவது கடை/தொழில் தொடங்கியவர்கள் நன்றாக வாழும் நிலையும் வரலாம். ஆனால் அது எல்லோருக்கும் இர��க்காது.
இப்போது வந்துள்ள “பிரெயின் ராட்” இளைஞர்கள் இன்னும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ரீல்ஸ், ஷார்ட்ஸ், கேமிங், எண்ட்லெஸ் ஸ்க்ரோலிங்கில் மூழ்கி கவனம் சிதறி, அடிப்படை சிந்தனைத் திறனையும், ஒழுக்கத்தையும், நீண்டகால முயற்சியையும் இழந்துவிடுகிறார்கள். கல்லூரிக் கட்டணம் ஏறிக்கொண்டே போகும்போது, திறன் இல்லாமல் வெறும் பட்டம் வாங்கினால் வேலை கிடைக்காது; கடன் சுமை அதிகரிக்கும். அப்போது டெலிவரி, கிக் ஒர்க் என்று தாழ்ந்த ஊதிய வேலைகளில் சிக்கி, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்துபோவார்கள். பிரெயின் ராட் அவர்களை மேலும் சோம்பேறியாக்கி, திறன் மேம்படுத்துவதற்கான ஆர்வத்தையும் அழித்துவிடும். இறுதியில் படித்தவர்கள் கூட கடனில் மூழ்கித் தவிக்க, படிக்காமல் உழைத்துத் திறன் வளர்த்தவர்கள் முன்னேறும் காட்சி உருவாகும். அப்போது இந்த இளைஞர்களுக்கு மீண்டு வருவது மிகவும் கடினமாகிவிடும்.
இந்த நிலையைப�� பயன்படுத்தி அரசியல்வாதிகளும், நடிகர்களும், சில பிரபலங்களும் ஏற்கனவே படிக்காதவர்களையும், டிராப் அவுட் ஆனவர்களையும், பிரெயின் ராட் இளைஞர்களையும் “இன்ஃப்ளூயன்ஸராக மாறினால் எளிதாக சம்பாதிக்கலாம்” என்ற மாயையை விதைத்து சுரண்டத் தொடங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
“படிப்பு தேவையில்லை, ரீல்ஸ் போட்டால் போதும், லட்சங்கள் வரும்” என்று சொல்லி அவர்களை யூடியூப், இன்ஸ்டாகிராம், ஷார்ட��ஸ் உலகில் தள்ளிவிடுவார்கள். சிலர் உண்மையில் பிரபலமாகி சம்பாதிக்கலாம். ஆனால் பெரும்பாலானோர் வெறும் நேரத்தையும், உழைப்பையும் வீணடித்து, அல்காரிதம் மாற்றங்களாலும், போட்டியாலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு மீண்டும் வேலையில்லாதவர்களாக மாறுவார்கள். அப்போது அவர்களின் கோபத்தையும், ஏமாற்றத்தையும் அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்வார்கள். நடிகர்களும் பிராண்ட் எண்டோர்ஸ்மென்ட், ஷோக்கள் மூலம் இந்த “படிப்பு இல்லாமல் வெற்றி” கதையை மேலும் ஊக்குவித்து தங்கள் வியாபாரத்தை வளர்த்துக் கொள்வார்கள்.
இது ஒரு பெரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுக்கும். கல்வி மதிப்பு குறையும், திறன் இல்லாத இளைஞர்கள் கூட்டம் பெருகும், குடும்பங்கள் கடனில் மூழ்கும், சமூகத்தில் அமைதியின்மை அதிகரிக்கும். உண்மையான உழைப்பும், அறிவும் ஒதுக்கப்பட்டு, வெறும் பார்வை எண்ணிக்கையும், லைக்குகளும் மதிப்பாக மாறும். அப்போது நாட்டின் எதிர்காலமே ஆபத்தில் சிக்கும்.
இதனால் பெரும் சிக்கல் வர இருக்கிறது. ஐடி துறையை நம்பி உருவான நடுத்தர வர்க்கம், பொறியியல் பட்டதாரிகள், க��்விக் கடன் வாங்கிய குடும்பங்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். வேலைவாய்ப்பு மேலும் சுருங்கும். கல்விக் கட்டணம் உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், ஐடி போன்ற பெரிய வாய்ப்புகள் குறையும்போது, திறன் இல்லாத பட்டதாரிகளும், பிரெயின் ராட் இளைஞர்களும் இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
நம் தாத்தா-பாட்டி தலைமுறைக்கு வீட்டில் அரிசி மூட்டை, பருப்பு . Godhumai , cooking oil reserve, மற்றும் வருட��்துக்கு போதுமான essentials வைத்திருப்பது சாதாரணமான வாழ்க்கை முறையாக இருந்தது.
காரணம் அவர்கள் பஞ்சம் இருந்த uncertainty economy-யில் வாழ்ந்தவர்கள், அதனால் எந்த நேரத்திலும் shortage அல்லது supply interruption வந்தாலும் குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் ��ன்ற அறிவு அவர்களிடம் இருந்தது.
அடுத்த மாதத்திலிருந்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி ��ருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் ��மிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!