#TrichySridhar DROPS A MASSIVE #Jailer2 BOX OFFICE STATEMENT! 👀
He officially claims that #Jailer2 has breached ₹200 Cr in Tamil Nadu and ₹800 Cr worldwide, declaring it the first-ever single film to cross ₹200 Cr in TN. He also challenges the conflicting box-office narratives, points out differences in the figures quoted by Dhananjeyan, who considers #Leo the highest-grossing film in Tamil Nadu, and reveals that the Tamil Nadu Top 5 race is currently between 9 films — #Jailer, #Jailer2, #Leo, #GOAT, #Jananayagan, #PonniyinSelvan, #Vikram, #Amaran and #Karuppu. He promises to clarify the final Top 5 rankings after a month!
ரீல்ஸ் பாலிடிக்ஸும்…ரியாலிட்டி செக்கும்! - ₹1,614 கோடி முதலீட்டை ஆந்திராவிடம் கோட்டைவிட்ட திரு. ஜோசப் விஜய் அரசு!
திரையில் காட்டப்படும் ‘மாஸ்’ பிம்பங்கள் நிஜ நிர்வாகத்திற்கு உதவாது என்பதற்கு, ₹1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த ‘ரியாலிட்டி செக்’ (Reality Check). ஹூண்டாய், கியா நிறுவனங்களின் சப்ளையர்களான கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின் (Hwashin), செஷான் (Seoyon) மற்றும் ஐவாமெட் (Iwamet) ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்தியும், அந்த வாய்ப்பு கைநழுவி ஆந்திராவுக்குச் சென்றிருப்பது திரு. @TVKVijayHQ அவர்களின் தலைமையிலான அரசின் தொழில்துறை மந்தநிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது.
ஒரு பக்கம் 'புதிய முதலீடுகளை ஈர்க்கிறோம்' என கோட்-சூட் மாட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஜெட் வேகத்தில் பறப்பதும், அங்கு போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் 'வைப்' ஏற்றுவதுமாக முதல்வர் தீவிரமாக இருக்கிறார். ஆனால், "கையில் இருக்கும் வெண்ணெயை நழுவவிட்டுவிட்டு நெய்க்கு ஊர் சுற்றும் கதையாக", ஏற்கெனவே மாநிலத்தின் வாசலில் நின்ற நிறுவனங்களையே தக்கவைக்கத் திராணியின்றி தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திர அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு முதலீடுகளைத் தட்டிச் சென்றபோது, தமிழகத்தின் தொழில்துறை அமைச்சர் செல்வி. @Keerthana4VNR என்ன செய்து கொண்டிருந்தார்? ஆட்சி நடத்துவது மாஸான வெளிநாட்டுச் சுற்றுலா அல்ல; போட்டி நிறைந்த சந்தையில் உடனடி முடிவுகளும், திறமையான பேச்சுவார்த்தைகளுமே முதலீடுகளைத் தக்கவைக்கும் என்பதை தவெக அரசு எப்போது உணரப்போகிறது?
இதன் இறுதிப் பாதிப்பு, தமிழக இளைஞர்களுக்கான 1,400-க்கும் மேற்பட்ட உயர்தர வேலைவாய்ப்புகளும் பொருளாதாரப் பலன்களும் எல்லை தாண்டி ஆந்திராவிற்குச் சென்றது தான். புதிய மாற்றத்தை எதிர்பார்த்து நின்ற இளம் தலைமுறைக்கு, இதுபோன்ற தொடர் தொழில் இழப்புகள் மிகப்பெரிய ஏமாற்றத்தையே தந்துள்ளன. இனியாவது வெற்று வெளிநாட்டு ‘பிம்ப அரசியலை’ விடுத்து, கையில் இருக்கும் தொழில்களைக் காக்கும் உண்மையான ஆளுகையை (Real Governance) நோக்கி முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் நகரவில்லை என்றால், பக்கத்து மாநிலங்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை மகுடத்தைப் பறித்துச் செல்வதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும்.
Gave 6.00 AM ✅ shows for #Scene !!
But didn’t give 6.00 am shows for #Jailer2 🔥 but it is now ALL Time No:1 TN grosser beating #Jailer 👌 Fear has no language Mr. @actorvijay
இடைத்தேர்தல்கள் நடக்கும் தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கச் செல்லும் முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததுண்டா?
ஒவ்வொரு நிமிடமும் இவர்களின் மனதில் தேர்தல் கணக்குகள் மட்டும்தான்.
அனைத்து வகைகளிலும் தவெக ஒரு அரசியல் அசிங்கம்.
ஒரே ஆள் எப்டி தமிழ்நாட்டுல தொழில் துறை அமைச்சராவும்...
பக்கது மாநிலத்துல தொழில் வளர்ச்சி துறை அமைச்சராவும் இருக்க முடியும்...
Investment க்கு போன ஆந்திராவுக்கு அந்த திட்டம் போகுது...
தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அண்டை மாநிலங்களை நாடும் தொழில் நிறுவனங்கள் – தவெக அரசு தொழில்துறை முதலீடுகளை வரவேற்கிறதா? அல்லது வழியனுப்புகிறதா?
தமிழ்நாட்டில் தங்களது தொழிற்சாலைகளைத் தொடங்குவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களை வழங்கும் தென்கொரியாவைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள், தவெக அரசின் அலட்சியத்தால் தற்போது தமிழ்நாட்டிற்குப் பதிலாக ஆந்திராவில் முதலீடு செய்வதற்காக ஒப்பந்தம் செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த ஜூன் மாதம் தமிழகத் தொழில்துறை அமைச்சர் அவர்கள் தென்கொரியாவுக்குச் சென்று, இந்த தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், அதற்கு அடுத்த மாதமே தென்கொரியாவுக்குச் சென்ற ஆந்திர மாநில அமைச்சர் திரு. நர லோகேஷ் அவர்கள், அதே தொழில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்த நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்வது ஏன்? தமிழகத்தில் முதலீடு செய்வதில் இருக்கும் தடைகள் என்னென்ன? அவற்றைக் களைய வேண்டிய தொழில்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேட வேண்டிய தொழில்துறை, வெறும் Reels போட்டே ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து விடலாம் என்ற பகல் கனவில் திளைத்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடானது.
தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே தொழில் தொடங்க ஒப்புக்கொண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அரசு நிர்வாகத்தின் கடமை என்ற அடிப்படைகூடத் தெரியாத தவெக அரசின் அலட்சியத்தால், தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்வதால், வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, கேமராக்களுக்கு முன் தோன்றி Reels எடுப்பதால் மட்டும் தமிழகம் எந்த வகையில் வளர்ச்சியடைந்து விடாது என்பதை இனியாவது உணர்ந்து, தமிழகத்தின் தொழில் முதலீடுகளை ஈர்த்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Hyundai தன் வாகன உதிரி பாகங்கள் செய்யும் தொழில் முதலீட்டை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்கிறது... அத்தோடு KIA உதிரிபாகமும்...
கடந்த 30 ஆண்டுகள் மேலாக வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் தான் எப்போதும் முதலிடம். ஆந்திரா கட்டமைப்பு அடிப்படையில் 7 அல்லது 8ஆம் இடத்தில் இருக்கும்... முதலிடத்தில் இருக்கும் தமிழகம் 7 ஆம் இடத்தில் இருக்கும் ஆந்திராவிடம் 3 நிறுவனங்களை பறிகொடுத்துள்ளது இன்று என்றால் என்ன அர்த்தம்? ஆளும் அரசு உருப்படியாக வேலையை செய்யவில்லை அல்லது விஷ்ணு ரெட்டு கும்பல் இந்த கீர்த்தனா கும்பலால் தமிழகத்தை எதோ நாசம் செய்கிறது என்று பொருள்..
மெக்கானிக்கல் ஆட்டோ மொபைல் படிக்கும் மாணவர் இளைஞர்கள் எதிர்காலம் EV வருகைக்கு பின் பெரும் அழுத்தத்தில் உள்ள நிலையில் இப்படி நிறுவனங்கள் ஆந்திரா செல்வது பெரும் கெட்ட செய்தி...
கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
“வெற்றி ஆட்சி சாதனை மலரில்”
சட்டம் ஒழுங்கு சீர்கேடு,
போதைப்பொருள் கடத்தல்,
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.
தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம்.
இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என @CMOTamilNadu செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற @actorvijay நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.
அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?
இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,
சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி
இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?
அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர்
திரு. ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?
@AIADMKOfficial
In 2024 both Tirupur Subramaniyan and Sridhar said #Jailer is no . 1 wrt Tamil
Nadu Box office and share . That too Sridar with data report 😀😀😀
Now suddenly it became leo >> Jailer
Let’s see what’s they are up to for #Jailer2