Seeing the scale of huge gathering for @thirumaofficial meeting in Ulundurpet, caste supremacists are shaken and crying out in distress. No other political leader can bring and organise a crowd like this. It reflects the immense love and affection people have for a leader💙
ஆகஸ்ட்-17 இன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசியலின் திசைவழி போக்கை தீர்மானிக்கும் பேராற்றல்மிக்க தலைவர் பெரும் நேசத்துக்கும் பிரியத்துக்கும் உரிய அன்பு அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்… தமிழ்தேசிய மாநாடு வெல்லட்டும்.
10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள்!
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி! வெற்றி!!
1. கட்டுக்கடங்காத கூட்டம்!
கடுமையான கூட்ட நெரிசல்!
2. எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் அதாவது ஏறக்குறைய 10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள் திரண்டார்கள்!
3. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தொண்டர்களின் நலன் கருதி எந்த வகையான அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மூன்றே தீர்மானத்தை படித்து குறைந்த அளவு நேரத்தில் பேசி நல்லபடியாக மாநாட்டை முடித்தார்.
4. இன்னும் பல லட்சம் பேர் மாநாடு உள்ளேயே நுழைய முடியவில்லை என்று தகவல். வரலாறு காணாத கூட்டம்
தலைவர் மாநாட்டில் கூட்டணியை உறுதி செய்து சில நிமிடங்களில் அனைவரையும் பாதுகாப்பாக வீடு திரும்ப சொன்னது மிக சரியான முடிவு.
தலைவர் Thol.Thirumavalavan மாநாட்டில் பங்கேர்த்த தொண்டர்களின் பாதுகாப்பு கருதி எடுத்த முடிவு சிறப்பு.
சங்கத்தமிழன்
Er. M. SARAVANA
பார் சிறுத்ததோ!
சிறுத்தைப் படை பெருத்ததோ!
“தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை” வெற்றிகரமாக நடத்தி முடித்த தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்கு நன்றி!
கவர்ச்சிக்கும் மாயைக்கும் ஆட்படாமல் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஒற்றை அழைப்பிற்கு ஒன்று திரண்டு தலைவர் மீதான நம்பிக்கையினை வெளிபடுத்தி, மகத்தான மக்கள் சக்தி தலைவர் எழுச்சித் தமிழர் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியதற்கு லட்சகணக்கான மக்களுக்கு நன்றி!
இம்மாநாடு சிறப்பாக நடந்திட உறுதுணையாக நின்ற கட்சியின் முகாம் பொறுப்பாளர்கள் தொடங்கி தலைமை பொறுப்பாளர்கள் அணைவருக்கும் நன்றி!
தமிழகத்தின்
ஆளும் கட்சியாக சிறுத்தைகள் என்கிற
அடுத்த பாய்ச்சலுக்கு
அண்ணல் அம்பேத்கரின் வழிதோன்றல்
அண்ணன் எழுச்சித் தமிழர் தலைமையில்
அணி திரண்டு அணியமாவோம்!
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
எஸ்.எஸ்.பாலாஜி
கட்சி பொருளாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
#தமிழ்தேசியம் #Tamil_Nationalism
#Uproot_HindutvaNationalism
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
18.08.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுடன்
சந்திப்பு
~~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது, 100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்தியிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினோம் நன்றி தெரிவித்தோம்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து
நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தி தீர்மானம் கொண்டு வந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டோம். அதேபோல நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும் தமிழர் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்பதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கையும் நாங்கள் சுட்டிக் கட்டி அவருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்தோம்!
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மானங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால் மாநில உரிமைகள் தொடர்பான அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 125 தீர்மானங்களாக வரையறுத்து இருக்கிறோம். அந்த தீர்மானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் மாநில சுயாட்சியை ஓங்கி உரத்து முழங்குவது என்பதாகும். மாண்புமிகு முதலமைச்சர் மாநில சுயாட்சியை தமிழ்நாடு அரசு தவெக அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும்; பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலத்தில் இந்த கோரிக்கை வலுவாக பேசப்பட்டது போல் அந்த தலைவர்களை தொடர்ந்து நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வு இனஉணர்வு அல்ல பிற மொழி பேசும் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலும் அல்ல. சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, அகில இந்திய அளவில் தேசிய இனங்களின் ஐக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவது தான் தமிழ்த்தேசியம் என்பதை உணர்த்தும் மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
அந்த வகையில் இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கூடுதலாக மேகமலை மற்றும் அமுதன் படுகொலை ஆகிய பிரச்சனைகளையும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அங்கே வசித்து வரும் மக்களை விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படக்கூடாது. அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்ற கருத்தை ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்கள் கூறியிருக்கிறார். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் அந்த மக்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி இருக்கிறோம்.
அமுதன் படுகொலையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில் அந்த குறிப்பிட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதை பொருள் ஒழிப்பு அதிரடி படை ஒன்றை உருவாக்கிட வேண்டும் அதற்கு முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன் வைத்திருக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அம்பேத்கர் - பெரியார் கொள்கைகளின் வழியே சமூகநீதிப் பாதையில் மக்கள் பணி தொடர்ந்திட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்களது அகவை நாளில் அவரது தலைமையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' பெருவெற்றியடைய எமது வாழ்த்துகள். தோழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!
தமிழ்நாடு சிறக்கட்டும் !!
@thirumaofficial@VCK_in@VanniTamizhVCK@VckBalaji@aloor_ShaNavas@velichamtvtamil@sinthanaivck
உளுந்தூர்பேட்டையா?
உலகத்தமிழர் கோட்டையா?
**********************************************
தமிழ்த்தேசிய எழுச்சி
மாநாடா?
தமிழர்கள் எழுச்சிப்பெற்ற
தமிழ்நாடா?
கட்டுக்கடங்காத
திருமா தம்பிகளின் கூட்டமா?
கணிதத்துக்கு
கட்டுப்படாத பெருவெடிப்பு?
திணறியது
உளுந்தூர்பேட்டையா?
திருப்பி அடித்தது
திருமாவின் சாட்டையா?
அறிவியல்
"பால்வீதி" கூட்டமா?
அம்பேத்கர்
"அரசியல்" சட்டமா?
கட்டுப்படாத
கடல் அலையா?
கணக்கில் அடங்க
சிறுத்தைகள் தலையா?
ஈழம் கனவு காணும்
கண்களா?
நீலம் கனவு நனவாகும்
வண்ணமா?
புலியும் சிறுத்தையும்
இணைந்த இடமா?
அமைதியாக இருக்க
நாங்கள் என்ன
சங்கர மடமா?
திருமாவையும் தொண்டர்களையும்
பிரிக்க முடியுமா?
பூமியின் சுழற்சியை யாரும்
நிறுத்த முடியுமா?
யாரும் தவறாக எழுதாதீர்கள்!
தாய்சிறுத்தையும் குட்டிச்சிறுத்தைகளும்
காதல் கொண்ட இடம்!
"கட்டுக்கடங்காத கூட்டம்" என்றால் என்னவென்று வென்ற இடம்!!
சங்கத்தமிழன்
Er. M. SARAVANA
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல், இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவ அரசியல் ஆளுமை, எழுச்சித் தலைவர், முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌸💙 @thirumaofficial 🌸❤️