SC/ST மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி அம்மக்களுக்காக செலவிடப்படாமல் பொதுத்திட்டத்திற்கு செலவிடுவதை தடுக்கவும், அரசு ஒதுக்குகின்ற நிதி முழுமையாக இம்மக்களுக்கு செலவிட கோரியும் மற்றும் பஞ்சமி நிலம் மீட்பு தொடர்பாகவும், சென்னையில் புரட்சி பாரதம் கட்சி சார்பில், நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய போது.!
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக, சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தி ஆங்கில செய்தி நிறுவனங்களுக்கு நேர்காணல் அளித்த போது.!
#CasteCensus #PMK
சபரிமலையில் 18ஆம் படி ஏறி தரிசனம் செய்ய வேண்டும் என்ற என்னுடைய 50 ஆண்டு கால கனவு நிறைவேறியது என்று ஆனந்த கண்ணீர் விட்ட சௌமியா அன்புமணி...
பாக்கவே நெகிழ்ச்சியா இருக்கு..
என்ன ஒரு பக்தி🥺🙏
அரசு அலுவலகங்களிலும் மருத்துவமனைகளிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தவெகவினர் - மக்கள் நலனுக்காக இயங்கும் துறைகளில் ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.
தென்காசி மாவட்டத்தில் தவெக மருத்துவரணி எனும் பெயரில் சிலர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஆய்வு நடத்தியதாகவும், தவெக மாவட்டச் செயலாளர் எனும் பெயரில் சிலர் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சி என்ற மமதையில் தவெகவினர் சிலர் அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.
அரசு அலுவலகங்களில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அரசின் நிர்வாக அமைப்பு இருக்கும்போது ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது யார்? முதலமைச்சரின் பதவி ஏற்பு விழாவில் "யார் தவறு செய்தாலும் அவர்கள் என்னோடு இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களை விடவே மாட்டேன்" என்று சூளுரைத்த முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், அரசு அலுவலகங்களில் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தனது கட்சிக்காரர்களின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
மேலும் திரு ஜோசப் விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு அலுவலகங்களும், பொதுமக்கள் கூடும் இடங்களும் படப்பிடிப்புத் தளங்களாகவே மாறி வருவதாகப் பொதுமக்களே குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என்ற போர்வையில் முதலமைச்சர் அறையில் நடக்கும் விவாதங்களும், முதலமைச்சரின் புகழ் பாடுவதற்காகப் பொதுமக்களுக்கு இடையூறு செய்து Insta Reels களாக எடுத்து வெளியிடுவதே தவெக அரசின் சாதனையாகவும் டிரெண்டாகவும் மாறியுள்ளது.
எனவே, விளம்பரம் என்பது வேறு மக்கள் பணி என்பது வேறு என்பதை முதலமைச்சரும் தவெக தலைவருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு உணர்திடுவதொடு, அரசு அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் தவெகவினரின் அதிகார துஷ்பிரயோகத்தை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் . @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
This is not political change - it's a scam. 100பேர் கொடுங்க நானே இவனுகள முடிச்சு காட்டுகிறேன்.
ரூட் மாபியா + லாட்டரி மாபியா இந்த கும்பலை நான் செதில் செதிலாக உடைக்க தயார்...
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், செஞ்சி சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அ.கணேஷ்குமார் அவர்களை ஆதரித்து, மாம்பழம் சின்னத்தில் வாக்கு சேகரித்து, செஞ்சியில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், திருத்தணி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.ஹரி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஆதரித்து R.K பேட்டையில் (திருத்தணி) தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
#அண்ணாநகர், #வில்லிவாக்கம், #கொளத்தூர்#பெரம்பூர் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தேன்.
ஆட்சிக்கு முன் பறந்த கறுப்பு பலூன் எல்லாம் ஆட்சிக்கு வந்ததும் வெள்ளைக் குடையாக மாறியது தான் பொம்மை வேந்தரின் மாடல்!
இப்படி மாறி மாறி நாடகமாடுவது ஏன்? இவர்களுக்கு மடியிலே கணம், வழியிலே பயம்!
இவர்களுடைய நாடகத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் @narendramodi அவர்களும் நம்பவில்லை; தமிழக மக்களும் நம்பவில்லை!
வாக்களிக்கும் மக்களிடம் நாடகம் நடக்காமல், நல்லது மட்டுமே செய்யும் @AIADMKOfficial ஆட்சியை அமைப்பது என்பதே தமிழக மக்கள் எடுத்துவிட்ட திடமான முடிவு!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் க.சரவணன் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் ஆதரித்து சோளிங்கரில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக சார்பில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் K.N.சேகர் அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், அதிமுக வேட்பாளர்கள் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி பென்ஜமின், மாதவரம் சட்டமன்றத் தொகுதி V.மூர்த்தி, திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி P.V.ரமணா, பொன்னேரி சட்டமன்றத் தொகுதி P.பலராமன், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி V.சுதாகர் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஆவடி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மன் மகேந்திரா அவர்களுக்கு தாமரை சின்னத்திலும், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் T.A.ஏழுமலை அவர்களுக்கு பிரஷர் குக்கர் சின்னத்திலும் ஆதரித்து சென்னையில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், செய்யூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் இராஜசேகர் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்திலும் ஆதரித்து திருக்கழுக்குன்றத்தில் தேர்தல் பரப்புரை செய்த போது.!
#election2026 | #PMK | #NDA | #ADMK
அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!
#election2026#PMK#ADMK#NDA
இந்தியாவின் மிகப்பெரிய மோசடிக் கட்சி திமுக தான்: புதிய தேர்தல் அறிக்கை வெளியிடத் தேவையில்லை - நிறைவேற்றாதாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிடலாம்!
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது.
தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தார்கள். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. 66 வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26&ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன்.
அதன்பின், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கையை 80% ஆகவும், 75% ஆகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறைத்துக் கொண்டார். ஆனால், இப்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கடந்த கால நாடகங்களைப் போலவே இந்த நாடகங்களும் எடுபடாது.
திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்....
1. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா?
2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா?
3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா?
4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா?
5. மாதந்தோறும் மின்பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6000 அளவுக்கு மின்கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா?
6. பேருந்துக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா?
7.இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா?
8. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா?
9. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா?
10. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13 % மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம் இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது.
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விடலாம். திமுக முழுமையாக நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளின் பட்டியலை நான் வெளியிட்ட விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
பொது வெளியில் திமுக அமைச்சர் பேசியது #டேய் உங்க அப்பா கோமணத்துக்கு உள்ளே இருந்தீங்கடா".
இன்று ஊடகவியலாளர்கள், சுயமரியாதை இயக்கத்தினர், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை போராளிகள், குறிப்பாக தமிழக ஊடகம் மற்றும் ஊடகத்துறை இதை செய்தியாக வெளியிடுவார்கள் என்று நம்புவோம்.
@AIADMKOfficial