பொறியியல் கல்லூரிக்கு நுழைவு தேர்வு என்று ஒன்றை வைத்து எல்லாரையும் பில்டர் பண்ணிட்டு இருந்தானுக.
ஆட்சிக்கு வந்த உடன் பொறியியல் கல்லூரிக்கு நுழைவு தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்டதாரிக்கு முழு கட்டணத்தையும் அரசே செலுத்தும், முடிச்சுட்டு வெளிய வா டைடல் பார்க், சிப்காட் எல்லாம் ரெடி என்று மொத்த infra வை ரெடி பண்ணி வெச்சுட்டு ஒரு சின்ன வீட்ல காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பேப்பர் படிச்சுட்டு, எழுதிட்டு உட்கார்ந்த இருந்தார் பாருங்க சார் ஒருத்தர்..
மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று தன்னை சொல்லிக்கொண்ட ஒருத்தர்...
அதே டைடல் பார்க்ல உட்கார்ந்து அவரை வகை வகையா கழுவி ஊத்தினாங்க, அதே சலுகைகளை அனுபவித்து படித்து, வெளிநாடுகளுக்கு சென்று அவரை சாதி ரீதியா இழிவு படுத்தி பேசுவாங்க..
அதை பற்றி எல்லாம் கேட்டால் சின்ன புன்னகையோடு கடந்து போகும் மனப்பக்குவம், நகைச்சுவை உணர்வும்..
பெரிய inspirational சினிமா ஒன்று எடுக்கலாம்..
நிஜத்துல நடந்த 'Winnie the Pooh' கதை! 🥺❤️
டீஸ்டா ஆத்து வெள்ளத்துல அடிச்சிட்டுப் போன 3 நாள் குட்டியானையை, நம்ம வனத்துறையினரும் மக்களும் சேர்ந்து காப்பாத்தி பத்திரமா அதோட அம்மாக்கிட்டயே சேர்த்த நெகிழ்ச்சியான தருணம் இது.
கார்ட்டூன்ல குட்டி 'Heffalump'-அ தேடி வந்த தாய் யானை மாதிரியே, இங்கயும் குட்டியப் பார்த்ததும் அந்த தாய் யானை காட்டுற பாசத்த பாருங்க... அப்படியே கண்ணு வேர்க்குது! 😭🐘✨ அந்தப் பிஞ்சு உயிரைக் காப்பாத்துன நம்ம ரியல் லைஃப் 'Pooh & Friends'-க்கு (வனத்துறை & மீனவர்கள்) ஒரு பெரிய சல்யூட்! 🫡
உங்க மனசையும் இந்த வீடியோ தொட்டுருந்தா, மறக்காம உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
#WinnieThePooh #ElephantRescue #RealLifeHeroes #TeestaRiver #MotherLove #ForestDepartment #TamilReels #Heartwarming #NatureLovers #TrendingTamil
பலூன்காரர்.
மெரினாவில் மாலை ஆறு மணிக்கு ஒரு மனிதர் இருபத்தேழு பலூன்களைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார்.
காற்றில் அவை ஒரு பக்கம் சாய்கின்றன. அவர் அதை ஈடுகட்ட உடலை மறுபக்கம் சாய்த்து நடக்கிறார். தூரத்தில் இருந்து பார்த்தால் அவர் பலூன்களைத் தூக்கிச் செல்வது போல் அல்ல; பலூன்கள் அவரை இழுத்துச் செல்வது போல் இருக்கிறது.
பெயர் மணி. முப்பத்து நான்கு வயது. ஒன்பது வருடங்களாக இதே கடற்கரை.
ஒரு பலூன் இருபது ரூபாய். சிறப்பு வடிவம் — முயல், நட்சத்திரம், கார்ட்டூன் — நாற்பது. வாங்கும் விலை ஏழு. ஹீலியம் சிலிண்டர் வாடகை நாளொன்றுக்கு முன்னூறு.
"நாளைக்கு எத்தன விக்கும்?"
"சனி ஞாயிறு நாப்பது ஐம்பது. மத்த நாள் பத்து பதினஞ்சு. மழைன்னா பூஜ்யம்."
"மழைல வர்றதே இல்லையா?"
"வருவேன். ஆனா யாரும் வாங்க மாட்டாங்க. குழந்தைங்க வர மாட்டாங்க."
அவரிடம் ஒரு திறமை இருக்கிறது. அது ஒன்பது வருடங்களில் வந்தது என்று சொன்னார்.
"நான் ஒரு குடும்பத்தைப் பாத்தா, யாரு வாங்குவாங்க யாரு வாங்க மாட்டாங்கன்னு சொல்லிடுவேன் சார்."
"நிஜமா?"
"பாருங்க."
அடுத்த அரை மணி நேரம் அவர் எனக்கு அதைச் செய்து காட்டினார்.
"அந்தக் குடும்பம் — வாங்குவாங்க. அப்பா கையில ஃபோன் இல்ல. புள்ளையப் பாத்துட்டே இருக்காரு."
வாங்கினார்கள்.
"அந்தம்மா — வாங்க மாட்டாங்க. ரெண்டு புள்ள. ரெண்டு பேரும் கேப்பாங்க. ரெண்டு பலூன் நாப்பது ரூபா. அவங்க பர்ஸ் பாத்தீங்களா?"
வாங்கவில்லை.
"அந்த ஜோடி — வாங்குவாங்க. புள்ள இல்ல. காதலிக்கு வாங்குவான். அது சுலபம்."
வாங்கினார்கள். நாற்பது ரூபாய் நட்சத்திரம்.
"இது எப்படி?" என்றேன்.
"ஒன்பது வருஷம் சார். வேற ஒண்ணும் இல்ல."
பிறகு அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது என்னை அன்று இரவு முழுக்க விடவில்லை.
"கேக்குற புள்ளைக்குப் பிரச்சினை இல்ல சார். அது கேக்கும், அழும், உருளும். ஏதோ ஒண்ணு நடக்கும் — வாங்கிக் கொடுப்பாங்க, இல்லைன்னா தூக்கிட்டுப் போயிடுவாங்க."
"அப்ப பிரச்சினை என்ன?"
"கேக்காத புள்ள."
"கேக்காத புள்ளையா?"
"பாத்துட்டே வரும் சார். என் பக்கத்துல வரும். நின்னு பாக்கும். அப்பா கூப்பிட்டா உடனே நடக்கும். ஒரு தடவை கூடக் கேக்காது."
"ஏன்?"
"அந்தப் புள்ளைக்குத் தெரியும் சார். வூட்ல நிலைமை என்னன்னு அதுக்குத் தெரியும். கேட்டா அப்பா கஷ்டப்படுவாருன்னு தெரியும். நாலு வயசுல அது தெரிஞ்சுடுது."
அவர் ஒரு நொடி நிறுத்தினார்.
"அது பாக்குற பார்வை இருக்கே சார். அத நான் ஒன்பது வருஷமா பாக்குறேன். இன்னும் பழகல."
"அப்ப என்ன பண்ணுவீங்க?"
"ஒண்ணும் பண்ண மாட்டேன்."
"இலவசமா கொடுக்க மாட்டீங்களா?"
அவர் தலையை ஆட்டினார். வலுவாக.
"கொடுக்கக் கூடாது சார்."
"ஏன்?"
"அப்பா முன்னாடி கொடுத்தா, அவரு ஏழைன்னு நான் சொன்ன மாதிரி ஆயிடும். அந்த மனுஷன் அத மறக்கவே மாட்டாரு. புள்ளைக்கு ஒரு பலூன் கிடைக்கும். அப்பாவுக்கு ஒரு காயம் கிடைக்கும். எது பெருசு?"
நான் அதற்கு எதுவும் சொல்லவில்லை.
"ஒரு வழி இருக்கு," என்றார். "பலூன் தானா காத்துல போற மாதிரி விட்டுடுவேன். புள்ளை ஓடிப் போய் புடிக்கும். அப்ப நான் 'பரவாயில்ல, வெச்சுக்கோ'ன்னு சொல்லுவேன். அது தர்மம் இல்ல. அது விபத்து. விபத்துக்கு யாரும் வெட்கப்பட மாட்டாங்க."
ஏழு மணி ஆனது. கடற்கரை நிரம்பியது.
அவர் ஒரு குழந்தையிடம் பேரம் பேசுவதை நான் பார்த்தேன். அந்தக் குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பலூன் வேண்டும். அப்பா ஒன்று மட்டும் என்கிறார்.
மணி குனிந்து அவளிடம் ஏதோ சொன்னார். அவள் ஒரு நொடி யோசித்தாள். பிறகு ஒரு பலூனை மட்டும் எடுத்துக்கொண்டு போனாள்.
"என்ன சொன்னீங்க?"
"'ரெண்டு புடிச்சா ரெண்டு கையும் ஃபுல். அப்ப ஐஸ்க்ரீம் எப்படிப் புடிப்ப?'ன்னு கேட்டேன்."
"அது சரி."
"அந்த அப்பா என்னைப் பாத்து ஒரு மாதிரி தலையாட்டினாரு. அது போதும் சார். அது ஒரு நன்றி."
பலூன் ஒரு விசித்திரமான பொருள். அதற்கு ஒரு நாள் ஆயுள். மறுநாள் காலை அது சுருங்கி, மேசைக்கு அடியில், நாற்காலிக்கு அடியில் கிடக்கும். இரண்டு நாளில் குப்பையில்.
இருபது ரூபாய் கொடுத்து ஒரு பெற்றோர் வாங்குவது என்ன?
பலூனை அல்ல. குழந்தை அதைப் பிடித்து ஓடும் நான்கு நிமிடங்களை.
அந்த நான்கு நிமிடங்களில் ஒரு அப்பா தான் நல்ல அப்பா என்று உணர்கிறார். அதற்குத்தான் விலை.
"நான் பலூன் விக்கல சார்," என்றார் மணி, நான் கிளம்பும்போது. "நான் பெத்தவங்களுக்கு ஒரு சான்றிதழ் விக்கிறேன். நாலு நிமிஷத்துக்கு."
இரவு ஒன்பது மணிக்கு அவர் மீதமிருந்த பலூன்களைக் கட்டி முடிச்சுப் போட்டார்.
ஒன்று கழன்று மேலே போனது. அவர் அதைப் பார்த்துக்கொண்டே நின்றார்.
"இதுக்குப் பேரு நஷ்டம் சார். ஆனா பாக்க நல்லா இருக்கு இல்ல?"
-எஸ்.பி. ஹோசிமின்
From FB. ❤👌
Mac book எதுக்கு , living expence எதுக்கு அந்த மாணவன் ஏமாத்துறான் திமுக கை கூலின்னு நரேட்டிவ் செட் பண்ணானுங்க
அமைச்சர் வந்து அந்த மாணவன் சமர்ப்பித்த அனைத்தும் சரியாக இருக்கு 2 நாள்ல நிதி தரப்படும்னு முடிச்சுவிட்டு போய்ட்டார்
செருப்படி மேல செருப்படி இப்ப எத திம்பானுங்க தெர்ல 😅🤡
என்ன தான் நடக்கிறது அரசில்?
பேரவையில் ஆக. 25 அமைச்சர் ஆதவ்
தன்னை திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தவுடன் நான் சென்ற முதலிடம் மேல்மா. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்திவிட்டு நிலத்தை கையகப்படுத்தக் கூடாது அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக பேரவையில் பேசினார்.
ஆனால் செப் 1ம் தேதி மேல்மாவில் நில எடுப்புக்கான அரசிதழ் வெளியீடு
நேற்று செய்தியாக மாறியவுடன் திரும்ப பெறப்படுவதாக அறிவிப்பு
இவ்வளவு effort ஆவது போட்டு பெண்ணை கவர்வதுதான் ஆணுக்கு கம்பீரம். லேசான அலட்சியத்துடன் முதலில் பிகு பிடித்து,.கொஞ்சம் அலையவிட்டு பிறகு ஏற்றுக் கொள்வதுதான் பெண்ணுக்கும் அழகு.
இந்த மனுசப்பயதான் dating app, subscription என பாழா போயிட்டான்.
//நூற்றாண்டு பஞ்சத்தை ஒரு நாள் ஒரே ஒரு நாள் கொட்டுற மழை முடிச்சுவிட்டிரும்..//
இந்த மாதிரி ஆறுதல் வார்த்தைகளை நம்பித்தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது...
இது என்ன பேச்சு?
இந்தியாவில் யாரும், ஏன்? திமுகவின் சித்தாந்த எதிரிகள் கூட குறை சொல்லமுடியாத ஒன்று, கடந்த 12 ஆண்டுகள் திமுக தமிழ்நாட்டில் கட்டியெழுப்பிய பாஜக எதிர்ப்பு.
ஆட்சியில் இருந்த போது பாஜகவிடம் சற்று நெகிழ்ந்து கொடுத்திருந்தால் கூட எங்களது அரசியல் எதிரிகளை இல்லாமலேயே ஆக்கியிருக்கலாம்!
எதற்கும் பணிந்து விடாமல், எத்தனையோ ஆயிரம் கோடிகள் நிதியிழப்பை எதிர்கொண்டு, அமலாக்கத் துறை, சி.பி.ஐ வுடன் நேருக்கு நேர் மோதி, உச்சநீதிமன்றத்தில் ஆளுநரை எதிர்த்து தீர்ப்புகளைப் பெற்று இந்திய அரசியலிலேயே பாஜக எதிர்ப்புக்கு முன்னுதாரணமாக இருந்த திமுகவின் நேர்மையை உரசிப் பார்க்கிறார் விசிக தலைவர் திருமா.
சனாதன எதிர்ப்பை உரத்துப் பேசி இந்தியா முழுவதிலும் வழக்குகளை வாங்கியவர் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளர்.
எங்கே! உங்கள் புதிய கூட்டாளியை ஒரு வார்த்தை சானாதனத்தை எதிர்த்துப் பேச சொல்லுங்கள்?
அமித்ஷா என்னை அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னார் என மேடையிலேயே நீங்கள் பெருமைப்பட்டபோது, யாரேனும் உங்களது கொள்கை அரசியலை சந்தேகித்தனரா?
கொள்கைக் கூட்டணி என நீங்கள் மேடைக்கு மேடை முழங்கிய கூட்டணியே 12 ஆண்டுகளில் சிதறிவிட்டது. எதோ ஓர் அவசரத்துக்கு உருவான கூட்டணி ஆட்சி இது.
உங்களது இந்தக் கூட்டணி ஒன்றும் நூறு ஆண்டுகளுக்கு நீடிக்கப் போவதில்லை.
காலச் சக்கரம் சுழலும்.
மீண்டும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும்! எங்கள் கழகத் தலைவரின் கண்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
மனசாட்சியை விற்று அதை விட மதிப்புள்ள எதை பெற்று விடப் போகிறீர்கள்?
நாள்தோறும் முன்னுக்குப் பின் முரணாக பேசி பேசியே நீங்கள் உழைத்து அடைந்த உயரத்தை இழந்து விடாதீர்கள்.
கொள்கை, கோட்பாட்டு கண்ணிகள் அறுபடாமல் அரசியல் நிலைப்பாடுகளை எப்படி எடுப்பது என்பதை உங்களுடனேயே பயணிக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அண்ணன் திருமா அவர்களே.
@thirumaofficial
இவங்க புரட்சி லாம் சோறு ல தான் இருக்கும் போல
இந்த புரட்சி பண்ணுற யாராவது நான் ஐயர் இல்லாம கல்யாணம் பண்ணேன்.
என் புது வீட்டுக்கு கணபதி ஹோமம் இல்லாம விழா எடுத்தேன்.
கோவிலுக்கு லாம் போகவே மாட்டேன்.
வேற சாதி ல என் வீட்டு பொண்ண அவ விருப்பப்படி கல்யாணம் பண்ணி வச்சேன் னு ஒருத்தன் போட்டு பார்த்தது இல்லை.
எது ஈஸியா இருக்கோ அத பண்ணுறது இதுக்கு பெரு புரட்சி னு வேற நினைப்பு.