கரூரில் முதல்வர் பேசி முடித்ததும் ஓர் அழைப்பு வந்தது. மீடியா பீல்ட் நண்பர் என்பதால், எடுத்து பேசினேன். ஹலோ என்றதும், ‘ இன்னைக்கி சிஎம் பேசும்போது, லஞ்சம் யாரு கேட்டாலும் கொடுக்காதீங்க… இது விஜய் ஆட்சின்னு சொன்னாருல, அதை ஹைலேட் பண்ணுங்க’ என்றார். ஏன் என கேட்டேன். பண்ணுங்க பாத்துக்கலாம் என்றார். பழக்கம் என்பதால் அவர் குறித்த தகவலை இங்கு சொல்லவிரும்பவில்லை. இதுநாள் வரையிலும் யூடியூப் சேனல்களிடம் பேசி வந்த தவெக தரப்பு, தற்போது ஊடகத்தினரிடம் பேசி, PR செய்ய பேசுகிறார்கள். என்னைபோல் பலருக்கும் நிச்சயம் போன் போயிருக்கும். இன்று ஹைலேட் செய்ய சொல்லி கேட்பவர்கள், நாளை எதிரான செய்தியை தடுப்பர். முடியாது என்றால் மேலிடத்தில் பேசுவர். இதுலாம் எங்குபோய் முடியபோகிறதோ தெரியல…
#TVKVijay
#karur
காவல்துறை உள்ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்சுருக்கு