#WATCH | முதலமைச்சர் விஜய் மதுரை வருவதை முன்னிட்டு கோரிப்பாளையம் சாலையில் உள்ள சாக்கடையை தூய்மை பணியாளர் ஒருவர் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்ய வைக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை துவக்கி வைப்பதற்காக வருகின்ற 28 ஆம் தேதி முதலமைச்சர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரவுள்ளார்.
#SunNews | #TVKVijay | #Madurai
வீரமணி விவகாரம்.. ஏன் இந்த தாமதம்.. Nakkheeran Gopal Exclusive | SEM Veeramani
#NakkheeranTV#nakkheerangopal#veeramani
Full Video Link: https://t.co/MqjxjBSeIS
தவெக நடத்தும் இரட்டை வேட நாடகத்தை அடித்து நொறுக்குகிறார் தோழர் கனகராஜ் 🔥
தலைமைச் செயலகம் தொடங்கி தூத்துக்குடி அனல் மின் நிலையம் வரை,
கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாக நடைபெறும் தவெக அரசின் மோசடிகளை அம்பலப்படுத்துகிறார்
கொடூரமான மனநிலை படைத்தவர்களிடம் நாடு சிக்கியிருக்கிறது
பிள்"கறி தின்ன அயோக்கியனை ஒரு POCSO கேஸை இடைத்தேர்தலுக்கு toolkit ah பயன்படுத்தியதை நீதிமன்றம் இன்று செருப்பால் அடித்திருக்கிறது
என்ன டீலிங்.?
திமுக ஆட்சியில் கூடுதல் ஆதாரத்துடன் விசாரணை என உறுதியளித்த நிலையில், தவெக ஆட்சியில் 19.6.2026 அன்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, 15 நாட்கள் கழித்து 5.7.2026 அன்று ஜெம் வீரமணியை தவெக பொருளாளரும் அமைச்சருமான வெங்கட்ராமன் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? ஓப்பனாக பேசுவாரா விஜய்?
#TVKExposed #TVKFails
" மதுராந்தகத்தில் மீண்டும் அதே பழைய பல்லவி!
“திமுக தீய சக்தி!”
“திமுகவை இன்னும் நூறு ஆண்டுகள் திட்டுவோம்!”
சரி... திட்டுங்கள்!
நூறு ஆண்டுகள் வேண்டுமானாலும் திட்டுங்கள்!
ஆனால் ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்...
இப்போது நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்!
அப்படியிருக்க,
இன்னும் ஏன் திமுகவையே காரணம் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்?
கோட்டைச்சாமி...
கண்களைத் திறந்து பாருங்கள்!
எதிர்க்கட்சியை குறை சொல்வது அரசியல்...
ஆனால் ஆட்சியில் அமர்ந்த பிறகு
மக்களுக்கு பதில் சொல்வதுதான் நிர்வாகம்!
மக்களுக்கு வசனம் வேண்டாம்...
விளக்கம் வேண்டும்!
குற்றச்சாட்டு வேண்டாம்...
செயல்பாடு வேண்டும்!
பழைய கதைகள் வேண்டாம்...
இன்றைய ஆட்சியின் கணக்கு வேண்டும்!
மதுராந்தகம் மக்கள் கேட்கிறார்கள்:
“திமுகவை எத்தனை ஆண்டுகள் திட்டப் போகிறீர்கள்?”
அதற்கு முன் இன்னொரு கேள்வி...
“உங்கள் ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?”
" இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
திமுகவை மட்டும் திட்டிக்கொண்டே இருப்பது
மக்களின் கேள்வியை தவிர்ப்பதாகத்தான் இருக்கும்!
மதுராந்தகம் தீர்மானிக்கும்...
வசனமா?
செயல்பாடா?
மக்களின் குரலா?
அரசியல் குற்றச்சாட்டுகளா?
" மீண்டும் எழும் கேள்வி ஒன்றுதான்:
“ஆட்சியில் இருப்பவர்கள்...
ஆட்சிக்கான பதிலை சொல்லுங்கள்!”
"இப்போது இருக்கக்கூடிய அரசாங்கம் ஜெம் வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. த.வெ.கவைச் சேர்ந்தவர்கள் ஏதோ தாமாக முன்வந்து இந்த வழக்கை நேர்மையான முறையில் நடத்துவது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் தற்போதைய அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கை, இந்த வழக்கை முடித்துக்கொள்வது என்ற தொனியில்தான் காவல்துறையினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தீவிரப்படுத்தப்பட்டதற்குக் குறிப்பிட்ட அந்த நீதிபதிதான் காரணம்." - பெ.சண்முகம்
#PShanmugam | #CPIM | #TVK | #Veeramani
சம்பவம் 1: 100 கோடி
.@CMOTamilnadu என்னைக்கோ நான் செத்திருக்க வேண்டியது
2500 கோடி மோசடி எடுத்து 3 லட்சம் மக்களை காப்பாற்றியதற்கு, போலீஸ் கொடுத்த பரிசு மட்டும் பாருங்க .@policecbecity
இது பக்கா sketcha / போக்குவரத்து விபத்தான நீங்களே சொல்லுங்க.
.@AadhavArjuna .@TVKVijayHQ
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளிக்குள் மர்மநபர்கள் புகுந்து பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் ஊடகப் பேட்டிகள் கொடுத்துள்ள நிலையில், இதனை விசாரிக்க வேண்டிய காவல்துறையோ, செய்தி வெளியிட்ட ஊடகங்களை “Delete” செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறது.
@CMOTamilNadu அவர்களே- உங்கள் ஆட்சியில் காவல்துறை செயல்படும் லட்சணம் இது தானா ?
அரசுப்பள்ளி பாதுகாப்பற்ற இடமாக மாறி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருப்பதை உங்கள் காவல்துறை விசாரிப்பதை விட்டுவிட்டு, செய்தி வந்த மறுகணமே “False News” என்று முந்திக்கொண்டு வந்து நிற்பது வெட்கக்கேடான செயல்.
தமிழ்நாட்டில் திரு. ஜோசப் விஜய் ஆட்சியில் காவல்துறையும் ரூட் மாபியா பாணியை கடைபிடிக்க உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா?
High Profile Cases என்றால் ஒரு சட்டம்,
சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?
Costly முதலமைச்சர் என்று நான் இவரை சொன்னது இந்த மனோபாவத்தின் காரணமாக தான்! தற்போது இந்த அரசின் செயல்கள் அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், பாலியல் புகார்களை முறையாக விசாரிக்காமல் செய்தியே வரக்கூடாது என்று ஊடகங்களை மிரட்டும் இந்த புதிய பாயாச-பாசிச அரசுக்கு எனது கடும் கண்டனம்.
வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தவெக ஆட்சியிலும், RTIக்கு தகவல் தர மறுப்பு வெளிப்படைத்தன்மைக்கு விலை பேசும் போக்குவரத்து கழக MD-க்கள், வேடிக்கை பார்க்கும் அமைச்சர் திரு விஜய் தமிழன் பார்த்திபன் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பயணவழி உணவகம் மூலம், 2024 முதல் மே-2026 வரை அரசுப் போக்குவரத்துக்கழக கழகத்திற்கு வந்த வருவாய் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பாக RTI மூலம் தகவல்கள் கோரப்பட்டது. போக்குவரத்துக் கழகங்களின் MD-க்கள், RTI Act-ன் Section 8(1)(e)ஐ காரணம் காட்டி தகவல்களை வழங்க மறுத்துள்ளனர்.
மேலும் ஆய்வு சம்மந்தப்பட்ட தகவலும் மறுக்கப்பட்டுள்ளது. கமிஷனை பெற்றுக்கொண்டு அங்கீகரிக்காத, கடையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டால் வருவாய் குறையும், மேலும் மக்களுக்கும், பயணிகளின் உடைமைகளுக்கும் பாதுகாப்பு குறைபாடு ஏற்படும். அத்துடன் உணவகத்தில், இயற்கை உபாதைக்கு ஒதுங்கும் இடம் இலவசமாக இருக்கவேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், உணவுப் பொருட்கள் MRP இல் விற்பதை உறுதி செய்ய வேண்டும், CCTV இருக்க வேண்டும். ஆகிய ஒப்பந்த விதிகளை உறுதிபடுத்தவே ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த ஆய்வின் தகவலையும் RTI மறைத்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் பயணிகளுடன் நேரடியாக தொடர்புடைய அரசுப் போக்குவரத்து சேவையில், இந்த தகவல்களை வெளிப்படையாக வெளியிடுவதில் என்ன தயக்கம்? @TamilanParthib1@CMOTamilnadu@TVKVijayHQ அரசுப்பேருந்தில் நீங்கள் பயணம் செய்திருந்தால், உணவகத்தின் நிலை என்ன உங்கள் கருத்துக்களை வழங்க : https://t.co/bNT2kT8Vzk
இதுகுறித்த விவரங்களை அறிய வீடியோ : #RTI #Transparency #TNSTC #SETC #Motels #RightToInformation #Arappor
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.