கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் @satyenaiadmk வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக நடைப்பெற்ற இரத்ததான முகாமில் பிறர் உயிர் காக்க தங்களின் குருதியை தானம் வழங்கியவர்களுக்கு கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவப்படுத்தியமைக்கு நன்றிகள்.!! #இரத்தத்தின்_இரத்தமே
"மத்திய அரசு சொன்னதால் சொத்து வரியை உயர்த்தினேன்"
"மத்திய அரசு சொன்னதால் மின் கட்டணத்தை உயர்த்தினேன்"
என்று வாக்குமூலம் கொடுத்தது இந்த "வெள்ளைக் குடை வேந்தர்" @mkstalin தானே??
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
@AIADMKITWINGOFL சார்பில்,
அனைத்து கழக மாவட்டங்களிலும் நடைபெற்ற
#இரத்தத்தின்_இரத்தமே
மாபெரும் இரத்த தான முகாம்கள்.
துப்பாக்கி சூடு நடந்த போது அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டத்தில் இருந்தேன். துப்பாக்கி சூட்டிற்கு தான் உத்தரவு கொடுக்கவில்லை என பலமுறை எடப்பாடியார் சொல்லிவிட்டார். தீர விசாரித்த பிறகு அதையேதான் நீதிபதியும் சொன்னார்.
நீதிபதி குற்றவாளிகள் என அடையாளம் காட்டியவரை கட்டி அணைத்தது திமுக.
அதுவரை தேர்தலில் நிற்கவே அஞ்சி நடுங்கிய கனிமொழியை அந்த தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற செய்தது திமுக.
ஆட்சி அமைத்த பிறகு நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கைப்படி குற்றவாளிகளை தண்டித்திருக்க வேண்டும், அல்லது அந்த விசாரணயில் நம்பிக்கை இல்லையெனில் மீண்டும் விசாரணயை தொடங்கி குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டித்திருக்க வேண்டும். செய்ததா திமுக?
இந்தக் கேள்விக்கு நேர்மையான பதில் சொல்ல ஒருவருக்கு திராணி உண்டா திமுகவில்??
துப்பாக்கி சூடு நடத்திய அதிகாரிக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் பதவி உயர்வு கொடுத்தது ஏன்? என்றால், அன்று அவர் யார் உத்தரவை வாங்கி சுட்டார்? யாருடைய அரசியல் வெறிக்கு அந்த துப்பாக்கி சூடு நடந்தது??
கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா??
துரோகிகள் கூடாரம் திமுக
தூத்துக்குடி துப்பாக்கி சூடு. குற்றவாளிகளை கண்டுபிடிக்க நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் கமிஷன் அமைத்தார் எடப்பாடியார். அந்த நீதிபதி, குற்றவாளிகள் என்று தண்டனைக்கு பரிந்துரைத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுத்து பச்சை துரோகம் செய்தார் ஸ்டாலின்.
"துரோகிகள் கூடாரம் திமுக"
தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி.
கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு?
உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடி தேடி அழைத்துச் மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு?
மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியது என்பது வெட்ட வெளிச்சமாகிறது!
2 லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது, அதற்கு துணை போனதுமட்டுமின்றி சோனியா கால்களில் சாஸ்தாங்கமாக விழுந்து குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி பிச்சை கேட்ட முத்தமிழ் வித்தவர் வரலாறு முழுவதும் தவழ்ந்ததும் ஊர்ந்ததும் கொஞ்ச நஞ்சமா ??
முந்தைய மூன்று ஆண்டுகள்
#NITIAayog கூட்டங்களை
"தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என
வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.
உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?
திரு. @mkstalin அவர்களே-
அது கண்ணாடி! …
உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்
காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக
வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எது ஸ்டாலினின் கை?
அண்ணா பல்கலை. வழக்கில்
பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.
ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை!
ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.
தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை!
7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!
அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்!
இதற்கெல்லாம் பின்னர் வருவோம்...
நான் கேட்ட கேள்வி என்ன?
#யார்_அந்த_தம்பி ?
உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?
உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும்
ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?
டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.
உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!
உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!
ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி?
@arivalayam