₹4,300 கோடி… யாருடைய பணம்?
பெயரே தெரியாத சில கட்சிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி நன்கொடை எப்படி?
“இந்தப் பணம் எங்கிருந்து வந்தது?” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்
மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும்.
கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் SSA -2 பார்வையாளர் திரு.ராமசுப்புராம் Ex MLA அவர்கள் கலந்து கொண்டு SSA -2 விவரங்களை எடுத்துரைத்தார்.இதில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.P.V.R. விவேக் அவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
@INCTamilNadu@manickamtagore@pvrvivekoffl
முரளி சீதாராமன் அவர்களின் முகநூல் பதிவு...👏👌
நான் பார்த்தவரை முந்தைய கூட்டத் தொடர் மற்றும் இந்தக் கூட்டத் தொடர் இரண்டிலுமே சபாநாயகர் JCD பிரபாகர் அவர்கள் சபையை மிகுந்த கண்ணியத்துடனும் நடுநிலையுடனும் நடத்திச் செல்கிறார்.
ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் குட்டு வைக்கத் தவறுவதில்லை.
நேற்று ஒரு முன்னாள் திமுக அமைச்சர் - "நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 5 வருடமும் டென்ஷனாகவே இருப்போம் - நீங்கள் ரிலாக்ஸ்டாக இருக்கிறீர்கள்"- என்று தவெகவை சுட்டிக் காட்டிப் பேசினார்
இன்றைக்கு அதற்கு பதிலளித்துப் பேசிய சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பேசும்போது - "பொழுதுவிடிந்தால் ED வருமா? CBI வருமா?- என்று இருந்தால் டென்சன் இருக்கதானே செய்யும்?"- என்று கிண்டலடிக்கவே திமுக தரப்பில் பெரும் கூச்சல் எழுந்தது.
சூலூர் MLA - "இது எனது கன்னிப்பேச்சு..."- என்றார்.
ஒரு அமைச்சர் கூட - "கன்னிப்பேச்சில் குறுக்கிடாதீர்கள்.."- என்பது போல ஏதோ சொன்னார்.
உடனே சபாநாயகர் - "கன்னிப் பேச்சு என்றாலும் கண்ணியமான பேச்சாக இருக்க வேண்டும்"- என்று குறிப்பிட்டு அவைக் குறிப்பிலிருந்தும் சுகுமாருடைய வார்த்தைகளை நீக்கினார்.
நடுநடுவே அவர் அதிமுகவில் இருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவு கூர்ந்து பொருத்தமாக விவரிக்கிறார்.
தான் முதலில் அதிமுகவிலும் - பிறகு தமிழ் மாநில காங்கிரசிலும் இருந்ததை ஒளிவு மறைவில்லாமல் ஒருமுறை குறிப்பிடுகிறார்.
இவர் 1980 ல் பரபரப்பான அந்த சட்டமன்றத் தேர்தலில் - MGR ஆட்சி கலைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் - நாஞ்சில் மனோகரன், சுப்புலட்சுமி ஜெகதீசன் போன்றவர்கள் MGR க்கு துரோகம் செய்துவிட்டு - திமுகவுக்கு போய்விட்ட சூழலில்...
வில்லிவாக்கம் தொகுதியில் திமுகவின் க.சுப்புவை எதிர்த்து - MGR அவர்களால் நிறுத்தப்பட்டார்.
க.சுப்பு - துரைமுருகன் - ரகுமான்கான் மூவரும் திமுகவில் இடி - மின்னல் - மழை என்று வர்ணிக்கப்பட்டவர்கள்.
வில்லிவாக்கம் தொகுதி அப்போது தமிழகத்திலேயே மிகப் பெரிய சட்டமன்றத் தொகுதி - பரப்பளவு வாக்காளர் எண்ணிக்கை இரண்டிலும்!
கிட்டத்தட்ட ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு சமமான தொகுதியாக வில்லிவாக்கம் இருந்தது.
அப்படிப்பட்ட தொகுதியில் புதுமுக வேட்பாளரான JCD பிரபாகரன் - சுப்புவை தோற்கடித்து தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தார். 1980 தேர்தல் முடிவுகள் அவருடைய படத்துடன் வெளியாகியது - திமுகவின் ஸ்டார் வேட்பாளரை தோற்கடித்தவர் என்பதால்!
இந்த சட்டமன்றத் தொடரில்தான் 46 வருடங்களுக்குப் பிறகு அவரை நடுவயது கடந்தவராகப் பார்க்கிறேன்.
காலம் உருவத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம் - அதே நேரம் மிகக் கனிவாக, மிக கண்ணியமாக சிரித்த முகத்துடன் நடுநிலையுடன் சபையை நடத்தும் பண்பாளராக காலம் அவரை வடிவமைத்துள்ளது.
இந்த நடுநிலையும் - ஒரு பாற்கோடாமையும் 5 ஆண்டுகளும் நீடிக்க வேண்டும்.
அப்போது தமிழகத்தில் மட்டுமல்ல - இந்தியா முழுவதிலுமே பல்வேறு மாநில சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றம் (லோக்சபா) ஆகியவற்றின் சபாநாயகராக செயல்பட்டவர்களில் - சிறந்த சபா நாயகர்களில் ஒருவராக JCD பிரபாகர் விளங்குவார் என்பதில் ஐயமில்லை!
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பதவியேற்கும் திருமிகு.மாணிக்கம்தாகூர் MP அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள், ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து நமது கட்சியை பலப்படுத்த வேண்டுகிறேன்
@manickamtagore@INCIndia@INCTamilNadu@priyankagandhi
விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தியாகசீலர் திரு கக்கன் அவர்களின் பிறந்த தினமான இன்று அவருக்கு எங்களது புகழஞ்சலி.
#தியாகசீலர்கக்கன்
@DMKITwing@mkstalin நல்ல மனிதர் அவருடைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் இந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசியல் விமர்சகர்கள் போர்வையில் இருந்த புரோக்கர்கள்
@DMKITwing ஒரு முதல்வர் அவரின் உழைப்புக்கு தோல்வி பரிசாக கிடைத்ததற்கு உங்களை போன்ற நபர்கள் முக்கிய காரணம் தோல்விக்கான காரணத்தை மன்னார்குடியில் தேடுங்கள்
@INCTamilNadu ன் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்,
@TNCCRW தலைவர் திரு.ஆர்.மாணிக்கவாசகம்,அவர்கள் கலந்துகொண்ட தேர்தல் அறிக்கைக் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற போது..
@rmvasagam#Congress#manifesto#election2026
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்,வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களுக்கு ஆதரவாக கருப்பம்புலம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியின் நிர்வாகிகளோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது..
#Vote4DMK
சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு,
வேதாரண்யம் பேருந்து நிலையம்
அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு,
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.P.V.இராஜேந்திரன்,அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய போது..
#AmbedkarJayanti
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்,வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களுக்கு ஆதரவாக பஞ்சநதிக்குளம் (மேற்கு) ஊராட்சியில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளோடு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது.
#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.மா.மீ.புகழேந்தி,அவர்களை
ஆதரித்து பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகளோடு,வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது..
#Election2026#வெல்வோம்_ஒன்றாக#Vote4DMK@girishgoaINC
வேதாரண்யம் (மேற்கு) வட்டாரத்தின்,
தாணிக்கோட்டகம் மற்றும் கோடாரி வட்டம் கிராமங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்களை,வாழ்த்தி வரவேற்ற போது..உடன் வேதாரண்யம்(மே) வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள்..
@INCTamilNadu@SPK_TNCC
மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் படித்த பழைய மாணவர் ஒருவர் வந்தார். கல்லூரியில் சேர வேண்டும் என்று கூறினார் மதிப்பெண் மிகவும் குறைவாக தான் எடுத்திருந்தார் .என்ன சேர விரும்புகிறாய் என்று கேட்டேன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சேர வேண்டும் என்றார்.. அதற்கு அவர் கூறிய காரணம் நெகிழ்வாக இருந்தது அப்பாவை இழந்த மாணவர் ,அம்மா ஒரு சாப்பாட்டு மெஸ்ஸில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வெளிநாடு அல்லது சொந்த ஹோட்டல் தொடங்க வேண்டும் என்று கூறினார் அவரை வாழ்த்தி ஒரு தனியார் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் சேர்த்து விட்டேன். மூன்று ஆண்டுகளாக நானும் நண்பர்கள் உதவியுடன் கட்டணங்களை கட்டி விட்டேன். இன்னும் ஒரிரு மாதங்களில் கோர்ஸ் முடியப்போகிறது .அவருக்கு இறுதி கட்டணத்தை என்னுடைய நண்பர் @EeraAnnamalai அவர்கள் அனுப்பி இருந்தார். அவருக்கு வழங்கினேன்.சிறப்பாக படித்து வருகிறார், தனியாக பேக்கரி தொடர்பான வேலைகளையும் கற்று வருகிறார்.ஒழுக்கமான
மாணவன் ,வெளிநாட்டில் உள்ள எக்ஸ் தோழமைகள் இவர் படிப்பு தொடர்பான வேலைகள் அல்லது பயிற்சி இருந்தால் எனக்கு தெரிவிக்கவும் நன்றி🙏🙏
நாகை மாவட்டம் வேதாரண்யம் மேற்கு வட்டாரம்,
வடமழை மணக்காடு ஊராட்சியில் இருந்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்த தேசிய நெஞ்சங்களை வரவேற்று வாழ்த்திய போது..
உடன்,
பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு.P.V.இராஜேந்திரன் மற்றும் காங்கிரஸ் வட்டார,நகர நிர்வாகிகள்..