@polimernews அன்புமணி ராம்தாஸ் மாதிரி தமிழக நலன்கள் குறித்து ஒரு விஷயத்துலயாவது அக்கறையா பேச துப்பில்லாத இவர்தான் என்னமோ தமிழகத்துக்காக வெட்டி முறிககிறா மாதிரி பேசிகிட்ருக்காரு. அரசியல் அறம் இல்லாதவர்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள். தேர்தலுக்கு ஒரு கூட்டணி , ஆட்சிக்கு ஒரு கூட்டணி. 🤦
"மேகதாது அணை: சௌமியா அன்புமணி எச்சரித்த சுற்றுச்சூழல் கேடுகள்!" - கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை!
-----------
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் - மேகதாது அணையை கட்டினால் நீர் மருது மரம், நீர் நாய், சாம்பல்நிற அணிகள், நான்கு கொம்பு மான் இனங்கள் அழிந்து போகும் என்று குறிப்பிட்டார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சூழலியல் ஆபத்து குறித்து விரிவாகக் காண்போம்:
-----------
"காவிரி வனவிலங்கு சரணாலயம் அழிப்பு"
காவிரி வனவிலங்கு சரணாலயமானது (Cauvery Wildlife Sanctuary) கர்நாடகாவில் மாண்டியா, சாமராஜநகர் மற்றும் ராமநகர் மாவட்டங்களில் 510.52 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. யானைகள், சிறுத்தைகள், கடமான்கள் மற்றும் பல்வேறு பறவை இனங்களின் முக்கிய வாழிடமாக இது விளங்குகிறது.
காவிரி ஆற்றினை நடுவாக வைத்து இருபுறமும் அமைந்திருப்பதால் இது காவிரி வனவிலங்கு சரணாலயம் எனப்படுகிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரிப்பன்மய பகுதியாக (KFA - Key Biodiversity Area of international significance) இது 2007ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரிப்பன்மய பகுதி இதுவாகும்.
மேகதாது அணைத்திட்டம் கொண்டுவரப்பட்டால், அதனால் காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் 7,862 ஏக்கர் நிலப்பரப்பும், அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் 4,619 ஏக்கர் நிலப்பரப்பும் என மொத்தம் சுமார் 12,000 ஏக்கர் காடுகள் நீரில் மூழ்கி அழியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகள், பலவிதமான உயிரினங்கள், மரங்கள், தாவரங்கள் என வளமான காட்டுப்பகுதி அமைந்துள்ளதால், இவை நீரில் மூழ்கி அழிவது மிகப்பெரிய சூழலியில் கேடாக முடியும்.
"புலிகள் பயணவழி பாதிப்பு (Tiger Corridor)"
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மாதேஸ்வரன் மலை சரணாலயம் மற்றும் பிலிகிரி ரங்கசுவாமி கோயில் (BRT) புலிகள் காப்பகம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த புலிகள் வாழிடங்கள் ஆகும். புலி, சிறுத்தை, யானை, இந்திய காட்டெருமை, கரடி, மற்றும் பல வகையான மான்கள் இந்த பகுதிகளில் வாழ்கின்றன.
இந்த இரண்டு காப்பகங்களுக்கு இடையே புலிகள் வழக்கமாக பயணிக்கும் பயணப்பதையில் தான் மேகதாது அணையை கட்ட திட்டமிட்டுள்ளார்கள். இத்திட்டத்தால் புலிகள் பாதிக்கப்படும். புலிகளால் மனிதர்கள் பாதிக்கப்படுவது அதிகரிக்கும் எனக்கூறி, இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (National Tiger Conservation Authority - NTCA) மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துள்ளது.
-----------
"அரியவகை உயிரினங்கள் அழிவு"
உலகெங்கும் அழியும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளை, பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN) எனும் அமைப்பு சிவப்பு பட்டியலாக (Red List) வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல உயிரினங்கள் காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.
"நான்கு கொம்பு மான் (Four-horned antelope)"
நான்கு கொம்பு மான் (Four-horned antelope) காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படும் மிகச்சிறிய அரிய வகை மான் இனமாகும். வழக்கமான மான்களைப் போலன்றி, இவற்றின் ஆண் மான்களுக்கு மட்டும் இரண்டு ஜோடிகளாக நான்கு கொம்புகள் இருப்பது இவற்றின் தனித்துவமான அடையாளமாகும்.
இவை மஞ்சள்-பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில், மெல்லிய கால்களுடன் இருக்கும். 55-64 செ.மீ. உயரம் வரை வளரும் இந்த மான்கள் சுமார் 17-22 கிலோ எடை கொண்டவை. இரண்டு கொம்புகள் காதுகளுக்கு இடையிலும், மற்ற இரண்டு கொம்புகள் நெற்றியிலும் அமைந்திருக்கும்.
IUCN Red List அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பாதிக்கப்படக்கூடியவை (Vulnerable) என வகைப்படுத்தப்பட்டு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் மான் இனம் இதுவாகும். மேகதாது அணை கட்டப்பட்டால் இந்த அரியவகை மானினம் அழிந்துபோகும்.
"சாம்பல் நிற மலை அணில் (Grizzled Giant Squirrel)"
சாம்பல் நிற மலை அணில் (Grizzled Giant Squirrel) என்பது தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை பாலூட்டியாகும். பூனை அளவுக்கு பெரிய உடலமைப்பைக் கொண்டவை. உடலின் முதுகுப்பகுதி கருப்பு மற்றும் வெள்ளை முடிகள் கலந்து சாம்பல் நிறத்திலும், முகம் மற்றும் வயிறு வெண்மை நிறத்திலும் காணப்படும்.
மரங்களின் உச்சியிலேயே வாழும் பழக்கம் கொண்டவை. பழங்கள், கொட்டைகள் மற்றும் மரப்பட்டைகளை உணவாக உட்கொள்கின்றன.
IUCN Red List அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் சாம்பல் நிற மலை அணில் Near Threatened என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேகதாது அணை கட்டப்பட்டால் இந்த அரியவகை மலை அணில் அழிந்துபோகும்.
"ஆற்று நீர் நாய்கள் (Smooth-Coated Otters)"
நன்னீர் பகுதிகளில் சதுப்பு நிலங்கள், ஈர நிலங்கள், ஆறுகள், குளங்கள் மற்றும் நெல் வயல்களில் நீர் நாய்கள் காணப்படுகிறன. உலகில் மொத்தமே 13 வகையான நீர் நாய்கள் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவில் மூன்று வகையான நீர் நாய்கள் காணப்படுகிறது.
Smooth-Coated Otters எனப்படும் ஆற்று நீர் நாய்கள் IUCN Red List அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் அழிய வாய்ப்புள்ள விலங்குகளாக (Vulnerable Species) வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை ஆறும் மணல் திட்டுகளும் கலந்த பகுதிகளில் வாழும் தன்மை கொண்டவை. இவற்றின் வாழிடங்களில் காவிரி வனவிலங்கு சரணாலயம் முதன்மையானதாகும். மேகதாது அணை கட்டப்பட்டால் மணல் திட்டுகள் அழிந்துபோகும். அரியவகை ஆற்று நீர் நாய்களும் அழிந்துபோகும்.
"நீர்மருது மரம் (Arjuna tree)"
காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள மிக முதன்மையான மரம் நீர்மருது ஆகும். ஒரு பகுதியின் உயிரிப்பன்மயச் சூழலை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த மரமாக (keystone species) இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவை மண்வளத்தை மேம்படுத்துகின்றன.
நீர்மருது மரங்கள் மிகவும் உயரமாகவும் பரப்பளவில் பெரிதாகவும் வளர்கின்றன. இதனால் பல்வேறு உயிரினங்கள் மற்றும் பறவைகளின் வாழிடமாக இவை உள்ளன. குறிப்பாக, அழிவின் விளிம்பில் உள்ள 4 வகையான பாறு கழுகுகளின் கடைசி புகலிடமாக நீர்மருது மரங்கள் உள்ளன.
மேகதாது அணை கட்டப்பட்டால் ஆயிரக்கணக்கான நீர்மருது மரங்களும் அவற்றுடன் இணைந்த உயிர்ச்சூழல் அமைப்பும் அழிந்துபோகும்.
-----------
மேகதாது அணை திட்டம் என்பது ஒரு மாபெரும் சூழலியல் பேரிடராக முடியக்கூடிய திட்டம் ஆகும். ஒருபக்கம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும் உயிரிப்பன்மய அழிவை தடுக்கவும் முயற்சிப்பதாக கூறிக்கொண்டே, அதற்கு நேரெதிராக சூழலியல் பேரழிவு திட்டத்தை செயலாக்க முயற்சிப்பது அறிவு நாணயமற்ற நடவடிக்கை ஆகும். இன்றைய வாக்குவங்கி அரசியலுக்காக நாளையை தலைமுறையை நாசமாக்கக் கூடாது.
ஒரு இனத்தை அழித்தொழிக்க முயற்சிப்பது இனப்படுகொலை (Genocide). அதே போன்று இயற்கையை அழித்தொழிக்க முயற்சிப்பது சூழல்படுகொலை (Ecocide). (GENOCIDE is the intentional destruction of a national, ethnic, racial, or religious group. #ECOCIDE is the mass damage or destruction of ecosystems.) மேகதாது அணை திட்டத்தில் இந்த இரண்டு நோக்கமும் இருக்கிறது. இந்த நாசகார சதித்திட்டம் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும்.
#PMK #MekedatuDam #SowmiyaAnbumani
தமிழக சட்டமன்ற பேச்சு...
பாராட்டு மழையில் அண்ணியார்..
மேகதாது விடயத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் சௌமியா அன்புமணி அவர்களின் கருத்தை ஆதரித்து குரல் கொடுத்து வருவது வரவேற்கத்தக்கது..👌🙏
#sowmiyaanbumani#mekedatuissu#TNPolitics
எங்க அண்ணன் பெயரை
எழுதுவதில் உனக்கென்ன
பிரச்சினை...
அதை உன் இடத்தில் எழுதுடா
வெண்ணை...
பொது இடத்தில் ஊரான் வீட்டு
இடத்தில் எழுதினால் பஞ்சாயத்து வரவே செய்யும்...
"தமிழ்நாடு விற்கப்படுகிறதா? அரசின் சேவைகள், சொத்துக்களை விற்க தவெக திட்டம்!"
தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உலக வங்கியில் நீண்டகாலம் பணியாற்றிய மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இக்குழுவுக்கான வேலைத்திட்டத்தில் - அரசு நிலம் மற்றும் சொத்துக்களில் இருந்து பணம் ஈட்டுதல் (land and asset monitisation), அரசு சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் பணம் ஈட்டுதல் (iproved user chargers), டாஸ்மாக் விற்பனையின் மூலம் அதிக பணம் ஈட்டுதல் (enhance revenue from alcohol) ஆகியவை குறித்து பரிந்துரைக்க வேண்டும் என தவெக அரசு கேட்டுள்ளது. இது மிக மிக ஆபத்தான உத்தரவு ஆகும்.
அரசின் சொத்துக்களையும் பணிகளையும் தனியாரிடம் விற்றுவிட வேண்டும் என்கிற தனியார்மயக் கொள்கையை மிகத்தீவிரமாக பிரச்சாரம் செய்து வருபவர்தான் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகும். (அரசின் பணிகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் அலுவாலியா: https://t.co/SGIp3flCPT )
ஏற்கெனவே Chennai City Partnership திட்டத்தின் கீழ் சென்னையில் பேருந்து போக்குவரத்து, தண்ணீர் விநியோகம், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அரசு சேவைகளை தனியாரிடம் விற்றுவிட வேண்டும் என உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது. அதே போன்று தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் தண்ணீர் விநியோகம், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அரசு சேவைகளை தனியாரிடம் விட்டுவிட வேண்டும் என Tamil Nadu Climate Resilient Urban Development Program for India திட்டத்தில் உலக வங்கி நிபந்தனை விதித்துள்ளது.
இத்தகைய சூழலில், டாஸ்மாக்கை விற்பனை செய்தல், அரசின் சேவைகளை விற்பனை செய்தல், அரசின் நிலத்தையும் சொத்துக்களையும் விற்பனை செய்தல் எனும் நோக்கில் அபாயகரமான பரிந்துரைகளை மாண்டெக் சிங் அலுவாலியா அளிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழக வரலாற்றில், தமிழ்நாட்டை வெற்றிகரமாக தனியாருக்கு விற்ற அரசு என்கிற பெயரை தவெக எடுக்கும்.
இதனை தடுக்க #TamilNaduNotForSale எனும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
-----------
இந்நிலையில், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கீழ்காணும் கருத்து முக்கியமானதாகும்:
"அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளும் தனியார்மயமாக்கப்பட்டால், அத்துறைகளின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் சூறையாடப்படும். சேவை வழங்குவதற்கான பணியாளர்களை தனியார் நிறுவனங்களே நியமித்துக் கொள்ளும். இந்த நியமனங்களில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப் படாது; ஊழியர்களுக்கு சட்டப்படியாக வழங்க வேண்டிய எந்த உரிமைகளும் வழங்கப்படாது. தனியார் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக பணியாளர்கள் மாற்றப்படுவார்கள். பல நூற்றாண்டுகளாக போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு விடும். தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் கொள்கைத் தலைவராகக் கொண்ட த.வெ.க. இத்தகைய சுரண்டல் திட்டங்களை அனுமதிக்கக் கூடாது.
ஆனால், இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல் திட்டங்கள் அதிகரிக்குமோ? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி போன்ற சமூகநீதியில் அக்கறை கொண்ட கட்சிகளின் ஐயமாக உள்ளது. அதற்கு காரணம் தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பது தான். உலக வங்கியில் நீண்டகாலம் பணியாற்றிய மாண்டெக் சிங் அலுவாலியா அவர்கள், சீர்திருத்தம் என்ற பெயரில் உலக வங்கியின் விருப்பத்திற்கு ஏற்ற இத்தகைய திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்துவார் என்பது தான் எங்களின் அச்சத்திற்கு காரணம் ஆகும்."
#PMK #AnbumaniRamadoss #TNGovt
முதல்வர் விஜய் க்கு தமிழ் மொழி பேச தெரியாதா??
டாக்டர் செளமியா அன்புமணி அதிரடியாக பாடம் புகட்டல்
முந்தைய அணைக்கும்
தற்போது கட்ட உள்ள அணைக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது
#PMK#TVK
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய உரை.!
சட்டப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையத்தின் தீர்ப்புகளையும் மதிக்கவில்லை. காவிரி நீரின் அளவு குறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேகதாது அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.!
#காவிரிகாப்போம்| #மேகதாதுஅணைதடுப்போம் | #CauveryKappom | #MekedatuAnaiThaduppom | #CauveryRights | #TamilNadu | #PMK
இவனுங்க எல்லாம் தமிழர்,திராவிடர் முகமூடியில் திரியும் #தெலுங்கர்கள்
என்பதை நம்ம காலத்திலாவது தெரிந்து கொண்டோமே.
விடுதலைப்புலிகளுக்கும் தெரிந்திருந்தால் எச்சரிக்கையாக இருந்து வென்றிருப்பார்கள்.
#மேதகு