ஜெர்மி கார்பின் (Jeremy Corbyn) என்பவர் இங்கிலாந்தின் "உங்கள் கட்சியின்" தலைவர் (Yours Party) இவர் இடதுசாரி அரசியலின் வழியாக மிகதிரளாக ஜென்-சி இளைஞர்களை கட்சியில் இணைத்தார் இதனை கார்பனிசம் (Carbynism) என்று அழைக்கின்றனர்
இன்று தமிழகத்தில் திரை மோகத்தின் காரணமாக நடிகர் நோக்கி குறிப்பிட்ட இளைஞர்கள் சென்றாலும் இடதுசாரி அரசியல தத்துவத்தின் வழியாக மிகத் திரளான ஜென்-சி இளைஞர்களை திரட்டிய தமிழகத்தின் ஓரே தலைவர் திருமாவளவன் தான்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
18.08.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுடன்
சந்திப்பு
~~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் நம்முடைய முதலமைச்சர் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஆட்சி அமைத்து 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்திருக்கிறது, 100 நாட்கள் வெற்றிகரமான ஆட்சியை நடத்தியிருக்கிற முதலமைச்சர் அவர்களை வாழ்த்துவதற்கும், இந்த ஆட்சி ஐந்தாண்டு காலம் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதிப்படுத்துவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசினோம் நன்றி தெரிவித்தோம்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் அனைத்து
நிகழ்ச்சியிலும் முதலிடம் என்பதை உறுதிப்படுத்தி தீர்மானம் கொண்டு வந்ததற்காகவும் எங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டோம். அதேபோல நாடாளுமன்ற தொகுதி வரையறை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான வேறுபாடுகள் கட்சிகளுக்கு இடையே இருந்தாலும் தமிழர் அனைவரும் ஒரே அணியில் இருக்கிறோம் என்பதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உணர்த்திய அந்தப் பாங்கையும் நாங்கள் சுட்டிக் கட்டி அவருக்கு எங்கள் பாராட்டுகளை தெரிவித்தோம்!
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மானங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கினோம். ஏனென்றால் மாநில உரிமைகள் தொடர்பான அனைத்து தளங்களிலும் தமிழ்நாடு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை 125 தீர்மானங்களாக வரையறுத்து இருக்கிறோம். அந்த தீர்மானங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் மாநில சுயாட்சியை ஓங்கி உரத்து முழங்குவது என்பதாகும். மாண்புமிகு முதலமைச்சர் மாநில சுயாட்சியை தமிழ்நாடு அரசு தவெக அரசு வலுவாக முன்னெடுக்க வேண்டும்; பேரறிஞர் அண்ணா, கலைஞர் காலத்தில் இந்த கோரிக்கை வலுவாக பேசப்பட்டது போல் அந்த தலைவர்களை தொடர்ந்து நீங்களும் அதே வழியில் மாநில சுயாட்சிக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதையும் முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழி உணர்வு இனஉணர்வு அல்ல பிற மொழி பேசும் இனத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலும் அல்ல. சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, அகில இந்திய அளவில் தேசிய இனங்களின் ஐக்கியம் ஆகியவற்றை முன்னிறுத்துவது தான் தமிழ்த்தேசியம் என்பதை உணர்த்தும் மாநாடாக இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம்.
அந்த வகையில் இந்த சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்தது. கூடுதலாக மேகமலை மற்றும் அமுதன் படுகொலை ஆகிய பிரச்சனைகளையும் முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்றோம். மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து அங்கே வசித்து வரும் மக்களை விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தப்படக்கூடாது. அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்டிருக்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்ற கருத்தை ஏற்கனவே சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நிர்மல் குமார் அவர்கள் கூறியிருக்கிறார். அதனை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் அந்த மக்களுக்கு உரிய நீதியை பெற்று தர வேண்டும் என்பதையும் முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி இருக்கிறோம்.
அமுதன் படுகொலையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக அமுதனின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிற நிலையில் அந்த குறிப்பிட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதையும் தாண்டி போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதை பொருள் ஒழிப்பு அதிரடி படை ஒன்றை உருவாக்கிட வேண்டும் அதற்கு முதலமைச்சரின் கூடுதல் கவனம் தேவை என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே முன் வைத்திருக்கிறோம்.
ஆகஸ்ட்-17 இன்று பிறந்தநாள் காணும் தமிழக அரசியலின் திசைவழி போக்கை தீர்மானிக்கும் பேராற்றல்மிக்க தலைவர் பெரும் நேசத்துக்கும் பிரியத்துக்கும் உரிய அன்பு அண்ணன் @thirumaofficial அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்… தமிழ்தேசிய மாநாடு வெல்லட்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
சமூகநீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொதுவாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்.
தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல், இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவ அரசியல் ஆளுமை, எழுச்சித் தலைவர், முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌸💙 @thirumaofficial 🌸❤️
10 லட்சத்திற்கு அதிகமான தொண்டர்கள்!
தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி!
எழுச்சி தமிழர் நினைத்ததை விட கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூட்டத்தின் மத்தியில் Thol.Thirumavalavan அவர்கள் மகிழ்ச்சியில் உறைந்தார்...💙❤️
VCK it WING VCK Digital Offcial
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டிற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான #மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் விளம்பர பதாகை #திருப்புறம்பயம் கடைத்தெருவில் வைக்கப்பட்டது.
வருகின்ற ஆகத்து 17 தமிழர் எழுச்சி நாளான அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் சிறுத்தைகள் அணி திரள்வோம்...💙❤️
VCK it WING Thol.Thirumavalavan Thiruma Army VCK Digital Offcial VCK it WING INDIA VCK LIVE Vck Live Kumar VCK S.S.Balaji
ஆகத்து 17 உளுந்தூர்பேட்டை
எழுச்சித் தமிழர் தலைமையில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு!
வாரீர்... அணிதிரள்வீர்...
#VCK#VCKITWing#Thirumavalavan
Thol.Thirumavalavan VCK it WING VCK Digital Offcial Velicham TV - வெளிச்சம் டிவி VCK it WING INDIA Vck Ezhil Imayan Live Karthik Vck