விஜய்க்கு ‘கடைசிப்படம்’ என்ற ஒன்றே கிடையாது!
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் பலர். இருவர் முதலமைச்சராகவும் ஆகியிருக்கிறார்கள். ஆனால் அரசியலையே சினிமா பார்க்கும் அனுபவமாக மாற்றியிருப்பவர் நடிகர் விஜய்தான்.
தன் கட்சியை ‘பக்கா மாஸ் கட்சி’ என்றும் தன் அரசியல் செயற்பாடுகளை ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ என்றும சினிமா மொழியில் வர்ணித்துக்கொண்டவர், ‘ஹீரோ X வில்லன்’ போல் ���தீயசக்தி X தூயசக்தி’ என்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைத்து வெற்றியும் பெற்றுவிட்டார். அவரது பதவியேற்புவிழா உரை, சட்டமன்ற பதிலுரை என எல்லாமே சினிமா உடல்மொழி நிகழ்வுகளே.
த.வெ.க ஆட்சியமைத்ததில் இருந்தே ஒவ்வொருநாளும் சுவாரஸ்யமான திரைக்கதையைப் போல் திடுக்கிடும் திருப்பங்கள், உணர்ச்சிக்குவியல்கள், ஹீரோயிச சாகங்கள் கொண்ட திரைப்படத்தை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
விஜய்யின் சினிமா கவர்ச்சியால் இன்ஸ்டா ரீல்ஸில் இருந்து செய்தி சேனலுக்கு வந்த பார்வையாளர் கூட்டம் முதல்நாள் சட்டமன்றத்தில் விஜய் பறந்து பறந்து வில்லன்களைப் பந்தாடி பஞ்ச் டயலாக் பேசுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் உதயநிதி முதல் பிரேமலதா வரை சுற்றிவைத்து வெளுக்க, திணறினார் விஜய். பார்வையாளர்களுக்கு ஏமாற்றம்.
இரண்டாவதுமுறை சட்டமன்றத்தில் துணை நடிகர்களான ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் சிறப்பாக நடிக்க, கதாநாயகனோ ‘பிரெண்ட்ஸ்’ பட க்ளைமாக்ஸில் அமர்ந்திருந்ததைப் போல் ‘டம்மி முதலமைச்சராக’ அமர்ந்திருந்���ார். இதையெல்லாம் ஈடுகட்டத்தான் பதிலுரையில் ஒரு உணர்ச்சிகரமான காட்சியை நடித்துக்காட்டி, தன் ரசிகர்களைத் திருப்திப்படுத்தினார்.
ஷங்கர் படம்போல் ஊழல் ஒழிப்பு சாகசக்காட்சிகளால் பார்வையாளர்கள் உற்சாகமடையும்போது, திரைக்கதையின் நுட்பம் புரியாமல் ‘எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை விஜய் ராஜினாமா செய்யச்சொன்னார்’ என்று சேம்சைட் கோல் போட்டு சொதப்பினார், மார்க்கெட் இழந்த பழைய அப்பா நடிகர் வைகோ. இன்னொருபுறம் விஜய்யின் ஷங்கர் படக் காட்சிகளுக்கு சற்றும் ச��்பந்தமில்லாமல் ஊழல் விஜயபாஸ்கர்கள் த.வெ.கவில் இணைவது பார்வையாளர்களுக்கு எரிச்சலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அவ்வப்போது உதவி இயக்குநர்கள் காதர் மொய்தீன் இரண்டாவது ரவுண்ட் பேட்டி, தி.மு.க – அ.தி.மு.க கூட்டுச்சதி என்று பிளாஷ்பேக் கொசுவத்தி கொளுத்தினாலும் பெரிய பலனில்லை. அதை சரிக்கட்ட, இதோ அடுத்த திரைக்கதை திருப்பம்.
த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்க, 15 எம்.எல்.ஏக்களை விலைபேசுகி��து தி.மு.க, பின்னணியில் இருப்பது மெயின் வில்லன் செந்தில்பாலாஜி என்று புதிய திரைக்கதை.
த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது என்றால். நம்பிக்கை கோரும் கட்டத்திலேயே வாங்கியிருக்க வேண்டும். இப்போது ராஜினாமா செய்த ஆறு எம்.எல்.ஏக்கள், திருச்சி கிழக்கை கழித்துவிட்டால் மொத்தம் 227. பெரும்பான்மையை நிரூபிக்க 114 எம்.எல்.ஏக்கள் போதும். அந்த எண்ணிக்கை த.வெ.கவுக்கு இருக்கிறது.
த.வெ.க எம்.எல��.ஏக்களை விலைக்கு வாங்குவது என்றால் 15 எம்.எல்.ஏக்கள் போதாது. மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 71 எம்.எல்.ஏக்கள் தி.மு.கவை ஆதரிக்க வேண்டும். அல்லது விஜய் இப்போது செய்வதைப் போல் 15 எம்.எல்.ஏக்களை தி.மு.க ராஜினாமா செய்யவைத்தால் 22 த���குதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும். அதிலும் அனுதாபத்தைக் காட்டி த.வெ.க வெல்லவே வாய்ப்பு அதிகம். எனவே ’15 த.வெ.க எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க தி.மு.க முயற்சி’ என்ற கதைக்கு எந்த லாஜிக்கும் இல்லை.
ஆனால் லாஜிக் பார்த்தால் விஜய்யின் எந்த படத்தையும் ரசிக்க முடியாதே!
விஜய்யின் குதிரைபேரம், ஊழல் விஜயபாஸ்கர்கள் அரவணைப்பு என்ற சேதாரத்தை சரிக்கட்ட தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்க��கள், தி.மு.க குதிரைபேரம் என்று மாற்றிவிட்டால் சுவாரஸ்யமான திரைக்கதை தயார்.
இன்னும் சிலநாட்களில் கரூருக்குச் செல்லும் விஜய், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயரையே சொல்லாமல் இடைத்தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்துவார்.
‘எவ்வளவோ வலிகளைத் தாங்கிக்கொண்டு மக்களுக்காக உழைக்க வந்தேன். உங்கள் ஆதரவோடு வெற்றிபெற்று சி.எம் ஆகியும்விட்டேன். ஆனா பாருங்க மக்களே, என்னை ஆட்சி பண்ணவிடாம தீயசக்தி தி.மு.க சதி பண்ணுது. என்னோட வலிகள் தொடங்கிய இடம் இதே கரூர்தான். அதுக்கு காரணமான செந்தில்பாலாஜிதான் இப்பவும் என் ஆட்சியைக் கவிழ்க்க சதி பண்றார்’ என்று உருக்கமான உரையாக அது இருக்கும்.
மக்களே இன்னொரு சினிமா க��ட்சிக்குத் தயாராகுங்கள்!
விவசாயிகள் போராட்டம், அமைச்சர் சரத் மீதான போதைப்பொருள் குற்றச்சாட்டு, தொடரும் ஆணவக்கொலைகள், சர்க்கஸ் சிங்கப்பெண் படை மூலம் தீர்க்கப்படாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், வன்னி அரசு பேச்சை இடைமறித்து கிடப்பில் போடப்பட்ட பா.ஜ.க எதிர்ப்பு, பறிபோகும் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு, ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ பாலியல் குற்றவாளிகளுக்குத் துணைபோன குற்றச்சாட்டு, அணுக்கனிம சுரங்கத்துக்கு அனுமதி....
அதுகிடக்குது கழுதைகள், ஸாரி, குதிரைகள்…
வில்லன்கள் சதியால் கொடுமைப்படுத்தப்படும் ஹீரோ, மக்களின் துணையுடன் ஜெயிக்கும் ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ சினிமா அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்னு இன்னும் உருட்டிட்டு இருக்காதிங்க செங்கொடி தோழர்
திமுகவினர் துரோகம் என்று காங் கட்சியை மட்டுமே விமர்சித்தார்கள்.
VCK CPI CPM IUML உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைவரிடம் நன்றி தெரிவித்து விட்டு, அவர்கள் எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. நீங்கள் ஆதரவு கொடுப்பதில் தவறில்லை என்று வழியனுப்பி வைத்தைதை திரு. திருமாவளவன் உள்ளிட்ட நால்வரணி புதிய தலைமுறை பேட்டியில் கூட்டாக அறிவித்த பின் எதற்கு இந்த அங்கலாய்ப்பு
சமரசமற்ற போராளிகளாக இந்த ஆட்சி அமைந்த பின் நடந்த
4 ஆணவ படுகொ*கள்
60 மேற்பட்ட கொ*கள்
150 மேற்பட்ட பாலியல் குற்றங்கள்
விவசாயிகள் போராட்டம்
மருத்துவ பணியாளர்கள் போராட்டம்
மக்களை தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் ஊதிய போராட்டம்
போன்றவை குறித்து வாய் மூடி மவுனம் சாதித்து வரும் முதல்வரை நோக்கி நீங்கள் எழுப்பிய கேள்விகள் என்ன?
ஆட்சி அமைத்து 40 நாள் ஆன பின்னும் பழைய பல்லவி பாடி திரியாமல், சோபா மாடல் அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பற்றி கவனம் செல்ல விடாமல் இப்படி வந்து மடைமாற்றும் முயற���சி தேவையா?
துணிவிருந்தால் கேள்வி கேளுங்கள். இல்லை முட்டு கொடுப்போம் என்றால் ��ங்களை நோக்கி எழும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும் என்ற பல்லவி இதுவே இறுதியாக இருக்கட்டும். முடியல 😭
நன்றி.!
@thirumaofficial @Shanmugamcpim @tncpim @CPItnOfficial @IUMLTNOfficial
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமி��்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
கட்சிப்படுத்தியிருக்கும் விதம் எல்லாம் அருமை! But Fact is (from the video) குடியிருப்புகளை கட்டியெழுப்பி
மொத்தம் 300 (தலித்துகள்) பேரில், 30 பேருக்கு மட்டும் வீடு allotment நடைபெறவில்லை. உரிய ஆவணங்களை சேர்த்து அவர்களுக்கும் வீடு வழங்க திமுக தன்னால் ஆன எல்லா முயற்சியையும் செய்து கொண்டுதான் இருக்கிறது. எல்லா அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கும் ப���திய அரசுக்கு இந்தக் காணொளியில் எந்த நெருக்கடியையும் தராது ஆர்ச்சரியமாக உள்ளது!
அவர்களுக்கு வீடு கிடைக்கவேண்டும் என்பதை விட,
சேகர்பாபுவை குறிவைத்து வீழ்த்தும் வேட்கை தான் தெரிகிறது.
வீடு கிடைக்கடும்.