கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட-ஒன்றிய-நகர-பேரூர் அமைப்பாளர் துணை அமைப்பாளர்களின் பணிகளைப் பாராட்டி, கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் 105 @dmk_youthwing நிர்வாகிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி மகிழ்ந்தோம்.
இரு சக்கர வாகனங்களைப் பெற்ற அவர்களின் கழகப் பணி சிறக்க வாழ்த்தினோம்.
@evvelu@TUdhayasuriyan@AbdulmalikDmk@arunrajsawmill
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 24 A-இல் உள்ள குளம் மற்றும் பூங்காவில், ரூ 74.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். இந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தைப் பயன்படுத்தி உடல்நலன் பேணிட மகளிரை வாழ்த்தினோம்.
@PKSekarbabu
விளையாட்டு வீரர் - வீராங்கனையரின் பயிற்சிக்கு, சர்வதேசத் தரத்திலான உட்கட்டமைப்புகள், உள்ளூர் முதல் உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ மூலம் உதவித்தொகை, போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, எவ்வித பொருளாதார தடையும் இல்லாமல் விளையாட்டைத் தொடர அரசுப் பணி... எனத் தொடர்ந்து சாதனையாளர்கள் உருவாகிட, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
‘மாநில சுயாட்சி என்பது ஓர் அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல; அது ஓர் அரசியல் கோரிக்கை’ என்றார் பேரறிஞர் அண்ணா! ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்று முழங்கினார் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!
இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், உருவாக்கிய மாநில - ஒன்றிய அரசுகளின் உறவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, ஏற்பாடு செய்திருந்த தேசிய கருத்தரங்கில் இன்று பங்கேற்றோம்.
அரசியலமைப்புச் சட்டம் உறுதிப்படுத்திய மாநில சுயாட்சி உரிமைகளை முழுதாக நிலைநாட்டிடும் வரை தமிழ்நாடு முன்வரிசையில் நின்று போராடும் - வெல்லும் என்று உரையாற்றினோம்!
@TThenarasu
நம் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாதென தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி உதவிகளைச் செய்து வருகிறோம்.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, JK Fenner (India) Limited நிறுவனம் சார்பில் அதன் தலைவர் - இயக்குநர் திரு.நாகராஜு ஸ்ரீராமா அவர்கள் மற்றும் CSR பிரிவு தலைவர் திரு.எம்.எஸ்.ஜனார்த்தன் அவர்கள் ஆகியோர் ரூ.50 இலட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினர். அவர்களுக்கு என் அன்பும், நன்றியும்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், அரசியல்-சமூகம்- பொருளாதாரம்-பண்பாட்டுத் தளங்களில் கழகம் ஏற்படுத்திய தாக்கம் குறித்த தி.மு.க-75 கட்டுரைத் தொகுப்பு, நம் @dmk_youthwing-ன் @muthamilarignar பதிப்பகம் மூலம் வெளிவர இருக்கிறது .
இக்கட்டுரைத் தொகுப்புக்கான ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், திராவிட இயக்க ஆய்வாளர் அய்யா க.திருநாவுக்கரசு, `கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ப.திருமாவேலன், மூத்த பத்திரிகையாளர் @Vijayasankar_FL , கழகத் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் அண்ணன் @lenin_govi மற்றும் கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் குழுவை இன்று நேரில் சந்தித்து ஆலோசித்தோம்.
பவள விழா கண்டுள்ள நம் தி.மு.கழகத்தின் 75-ஆண்டு கால வரலாற்றுப் பயணத்தைப் பதிவு செய்யும் முக்கிய ஆவணமாக இந்தக் கட்டுரைத் தொகுப்பு அமையும் .
#DMK75 @arivalayam
சட்டமன்றம் - மக்கள் மன்றம் என இரண்டிலும் கழகத்தின் இடிமுழக்கமாக, கொள்கை வீரராக வாழ்ந்து மறைந்த, மரியாதைக்குரிய இரகுமான் கான் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
அவரின் புகழை, அவர் பரப்பிய திராவிட இயக்கச் சிந்தனைகளை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம்!
கருத்தியல் பணி-களப் பணி என இரண்டிலும் கழகத்தின் முதன்மை அணியாய் செயலாற்றி வரும் நம் @dmk_youthwing, 2026-சட்டமன்றத் தேர்தலில் கழகம் மீண்டும் ஆட்சி அமைக்க முன் கள வீரர்களாய், கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், உறுதியுடன் உழைக்கும்!
வெல்வோம் இருநூறு! படைப்போம் வரலாறு!
மதுரை, ஜான்சி ராணி பூங்காவில், 5,000 உறுப்பினர்களுடன் நம் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களால் தொடங்கப்பட்ட @dmk_youthwing-க்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறோம்.
அந்தவகையில், இன்றைய தினம் சென்னை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட சைதாப்பேட்டை-வேளச்சேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வார்டுகளுக்கும் -பாகங்களுக்கும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று அவர்கள் ஆற்றவேண்டிய கழகப் பணிகள் குறித்து எடுத்துரைத்தோம் .
அன்று தலைவர் அவர்கள் விதைத்த விதை, இன்று விழுதுகளுடன் வேர் பரப்பி, ஆலமரமாக வளர்ந்திருப்பதை எண்ணி மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்!
@arivalayam@Subramanian_ma@Joel_Dmk@PrabhakarRaja88@DMKYWChennai
கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைச் செயலாளர் - திராவிட இயக்க எழுத்தாளர் - ஆய்வாளர் அண்ணன் அர.திருவிடம் அவர்கள் திருவாரூரில் இன்று மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருந்தினேன்.
தன் வாழ்நாள் முழுவதும் திராவிட இயக்கம் - கலைஞர் - கழகம் - தலைவர் என்று கொள்கைப் பெருவாழ்வு வாழ்ந்த அவரது மறைவு, கழகத்துக்குப் பேரிழப்பு.
என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டிருந்தார்.
கழக இளைஞர் அணிச்செயலாளராக நான் பொறுப்பேற்ற புதிதில், திராவிட இயக்கத்தின் வரலாற்றை தொகுத்து, அவர் எழுதி இருந்த ‘திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை’ புத்தகத்தை, பெரியார் திடலில் வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பைத் தந்தார்.
எப்போது என்னைச் சந்தித்தாலும், அவர் புதிதாக எழுதிய புத்தகங்களின் முதல் பிரதிகளைப் பரிசளித்து மகிழ்வார்.
‘கலைஞரின் காலடிச் சுவடுகள்’, ‘திமுக பெற்ற வெற்றிகளும் வீரத்தழும்புகளும்’ போன்ற அவரது படைப்புகள் நம் இயக்கத்தின் வரலாற்றுப் பெட்டகங்கள்!
கலைஞர் அவர்கள் வழியில் அரசியலையும் - இலக்கியத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கின்ற ஆற்றலைப் பெற்ற அவருக்கு ‘இலக்கிய மாமணி’ விருதை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது.
அண்ணன் திருவிடத்தை இழந்து வாடும் அவரது அன்பு மகன் செழியன் உள்ளிட்ட குடும்பத்தார் - நண்பர்கள் - கழக உடன் பிறப்புகள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும் அவர்களின் சமூக வலைதளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும், தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன், கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என அனைத்து மாவட்டங்களிலும் @dmk_youthwing துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர் .
அந்த வகையில், இன்றைய தினம், மண்டலம் - 4-க்கு உட்பட்ட சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, தருமபுரி கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கான சமூக வலைதளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை, மாநில துணைச் செயலாளர் சகோதரர் @pssrinivasandmk முன்னிலையில் நேர்காணல் செய்தோம்.
அவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களைப் பார்வையிட்டு, அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப் பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் கொண்டு வந்திருந்த மினிட் புத்தகம்-புகைப்படத் தொகுப்புகளையும் ஆய்வு செய்து, கழக பணி சிறக்க வாழ்த்தினோம்.
#கழக_இளைஞர்_அணி @JAYAMURUGANMAN3@MGSVengatesh@Balaji_DMK_YW #Veerapandi_A_Prabhu
என்னுடைய தாயார் அவர்கள் எழுதியுள்ள ‘அவரும் நானும் பாகம்-2’ புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் இன்று பங்கேற்றோம்.
அரசியலிலும், குடும்பத்திலும் கழகத்தலைவர் - நம் முதலமைச்சர் @mkstalin அவர்களோடு அன்னையார் எதிர்கொண்ட சூழல்கள் - அனுபவங்களை மீண்டும் நூலாக்கியுள்ளார்கள்.
இப்புத்தகம் எல்லோரிடமும் சென்று சேரட்டும்!
எழுத்தாளராக இரண்டாவது நூலை கொண்டு வந்திருக்கும் அன்னையாருக்கு என் அன்பு வாழ்த்துகள்!
#AvarumNaanum
தமிழ்நாட்டுப் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ - மாணவியர் பல்வேறு சர்வதேச - தேசிய - மாநில அளவிலான போட்டிகளில் கடந்தாண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ்களை இன்று வழங்கினோம்.
எந்தப் போட்டி என்றாலும் வெற்றி எவ்வளவு முக்கியமோ அதைவிட விடாமுயற்சியும் முக்கியம். அந்த வகையில், விடாமுயற்சியோடு ஆடுகளத்திலும் ஆட்டநாயகர்களாக வலம் வரும் தமிழ்நாட்டு மாணவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்!
அவர்கள் மென்மேலும் சாதனைகளை படைக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை என்றும் துணை நிற்கும்!
@Subramanian_ma@PKSekarbabu@Anbil_Mahesh@iparanthamen@SportsTN_
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக நாம் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்கள், முன்னெடுப்புகள் எந்த அளவுக்கு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் sports career-க்கு உதவியிருக்கிறது, முன்னேற்றத்தைத் தந்திருக்கிறது என நாமக்கல் மாவட்ட SDAT விளையாட்டு விடுதி மாணவிகளுடனான சமீபத்திய சந்திப்பில் உணரமுடிந்தது.
உலகத் தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்புகள், தங்கும் வசதி, சத்தான உணவு, சுத்தமான குடிநீர், பயிற்சி - போட்டிகளுக்கான உதவித்தொகைகள் என அரசின் எல்லா புதிய முன்னெடுப்புகளுக்கும் விளையாட்டு விடுதி மாணவிகள் நன்றி தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையர்கள் இன்னும் பல சாதனைகள் புரிய, அவர்களின் கனவுகள் நனவாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்.
@SportsTN_
கடந்த நவம்பர் மாதம், வடகிழக்குப் பருவமழை சமயத்தில் வடசென்னை - ராயபுரம் 53-வது வட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்தபோது, அரசு சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்பில், வீடு வேண்டும் என்று அப்பகுதி மக்கள் உரிமையோடு கோரிக்கை வைத்தார்கள்.
அவர்களின் கோரிக்கையை உடனடியாக நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அப்பகுதி மக்களுக்கு மூலக்கொத்தளம் - தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் வீடுகளை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை இன்று வழங்கினோம்.
`அனைவருக்கும் வீடு’ எனும் கனவை நனவாக்க, நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்!
#DMK4TN
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி, மாநகராட்சி வார்டு-53, பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள், வீடு வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதியில் வீடுகளை ஒதுக்கீடு செய்ததற்கான ஆணைகளை இன்று வழங்கினோம்.
வீடுகளைப் பெற்றுள்ள பயனாளிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@KN_NEHRU@thamoanbarasan@PKSekarbabu@rdsekarmla@idream_murthy@PriyarajanDMK@MMageshkumaar