தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும்.
இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது என்ற விதிமுறையால், ரூ.5 டோக்கன் பெறுவதற்கே நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, இந்த ஏற்பாடு தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.
மக்களின் ஆன்மிக நம்பிக்கையையும், வழிபாட்டு உரிமையையும் எளிதாக்குவதற்குத்தான் கோவில் நிர்வாக விதிமுறைகள் இருக்க வேண்டும். கோவிலுக்குச் செல்வதையே யோசிக்க வைக்கும் அளவுக்கு அவை சிரமங்களை உருவாக்கக் கூடாது.
யாரோ ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவது, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டையே கொளுத்திய கதையாக மாறிவிடக் கூடாது.
எனவே, தமிழக அரசு இந்த விதிமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்து, பக்தர்களுக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்தும் இந்த நடைமுறையைத் திரும்பப் பெற வேண்டும். கோவில்கள் மக்களுக்கு நிம்மதியையும் இறைநம்பிக்கையையும் தரும் இடங்களாக இருக்க வேண்டும். பதற்றத்தையும் நீண்ட வரிசைகளையும் உருவாக்கும் இடங்களாக அல்ல.
பெண்களை இழிவுபடுத்துவதுதான் பாஜகவின் புதிய அரசியலா? — தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி கடும் கண்டனம்!
பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக அறியப்படும் கல்யாணராமன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் குடும்பத்தையும், குறிப்பாக அவரது மனைவியையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசியதாக வெளியாகியுள்ள காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சிக்கலாம்.
ஆட்சியின் செயல்பாடுகளை கேள்வி கேட்கலாம்.
ஆனால் ஒரு அரசியல்வாதியின் குடும்பத்தை, குறிப்பாக அவரது மனைவியை அரசியல் தாக்குதலுக்குள் இழுப்பது எந்த விதமான அரசியல் நாகரிகம்?
இதைத்தான் கடந்த காலமாக நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.
தமிழக அரசியலில் தனிமனித தாக்குதல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன. அதையும் தாண்டி தற்போது குடும்பப் பெண்களையும் அரசியல் விமர்சனத்திற்குள் இழுக்கும் அளவுக்கு சிலர் தரம் தாழ்ந்து பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
பாஜக தேசிய தலைமையும், தமிழக பாஜக தலைமையும் இதை கைகட்டி வேடிக்கை பார்க்கப் போகிறதா?
ஒரு காலத்தில் மாற்று அரசியலைப் பற்றி பேசிய பாஜக, இன்று தனிமனித தாக்குதல்களிலும், பெண்களைப் பற்றிய இழிவான பேச்சுகளிலும் திராவிடக் கட்சிகளையே மிஞ்சும் பாதையில் செல்கிறதோ என்ற மிகப்பெரிய சந்தேகம் தமிழக மக்களிடம் எழுகிறது.
திராவிட அரசியலின் தரக்குறைவான பேச்சு கலாச்சாரத்தை விமர்சித்து அரசியல் வளர்ந்த பாஜக, அதே பாதையை பின்பற்றத் தொடங்கினால் மக்கள் அதையும் கேள்வி கேட்பார்கள்.
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தற்போது பாஜக கூட்டணியில் இருந்தாலும், கூட்டணி அரசியல் என்ற ஒரே காரணத்திற்காக தவறுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் கட்சி அல்ல.
தவறு என்றால் தவறுதான்.
பெண்களை இழிவுபடுத்துவது எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் தவறுதான்.
அரசியல் கருத்து வேறுபாட்டை குடும்பத்தின் மீது நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
எனவே, கல்யாணராமன் போன்ற நபர்கள் பொதுவெளியில் பேசும் இத்தகைய கருத்துகளை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
பாஜக தேசிய தலைமை இனியும் மௌனம் காக்காமல், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, கட்சியின் ஒழுக்க விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியல் எதிரியை விமர்சியுங்கள் — ஆனால் அவரது குடும்பத்தை விட்டுவிடுங்கள்.
பெண்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள்.
கருத்தால் மோதுங்கள்; கண்ணியத்தை கொல்லாதீர்கள்.
தமிழக அரசியலுக்கு இன்று தேவை வெறுப்பை வளர்க்கும் அரசியல் அல்ல —
நாகரிகமான, கொள்கை சார்ந்த, கண்ணியமான அரசியல்.
— கே.சி. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி
14 years ago, I began my BJYM journey as a karyakarta of the city unit. That it would take me all the way to National President was something I never ever imagined.
I am deeply grateful to @narendramodi Ji, HM @AmitShah Ji, @JPNadda Ji and @blsanthosh Ji for their faith and the opportunity to serve.
I thank @tarunchughbjp ji & @sunilbansalbjp ji for having guided us as the Prabhari’s.
My very best wishes to @drhemangjoshimp as he takes BJYM to greater heights under @NitinNabin Ji’s leadership.
To every karyakarta who opened your homes and hearts, guided and corrected me, and stood by me - thank you.
Positions change. Titles change but - Once BJYM, Always BJYM.
My heartfelt letter to you all.
@BJYM
நமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசும் தலைவர்கள், அந்தந்த களத்தில் இருந்து உருவாக வேண்டுமே தவிர, டெல்லியிலோ அல்லது வேறு எங்கோ இருக்கும் தலைவர்கள் முடிவெடுக்கக் கூடாது.
அனைவருக்கும் நமது நாட்டின் இனிய 80-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த, எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும் நமது தேசியக் கொடியைக் கையிலேந்தி, பெருமிதத்துடன் நமது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதில் மகிழ்ச்சி.
இந்த நன்னாளில், நமது தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாத்து, வளர்ச்சியடைந்த வலிமையான பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதத்தின் புகழ் உலகெங்கும் உயரட்டும்.
ஜெய் ஹிந்த்.
#இல்லம்தோறும்_தேசியக்கொடி
நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூய்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் காப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
இன்று உவரியில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட தன்னார்வலர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகளின் உற்சாகமான பங்களிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது.
சுத்தம், பசுமை, பொதுமக்கள் பங்களிப்பு – இந்த மூன்றும் இணைந்தால்தான் வளமான தமிழகம் உருவாகும். இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்து, நம் மண்ணையும், நம் இயற்கையையும், நம் எதிர்காலத்தையும் பாதுகாப்போம். (1/2)
Delighted to inaugurate the Alluri Sitarama Raju International Airport at Bhogapuram. This is a landmark project that will strengthen connectivity and accelerate Andhra Pradesh’s growth.
This airport brings together advanced infrastructure and cutting-edge technologies to ensure a seamless travel experience. It will give a major boost to tourism, trade, investment and employment. The terminal building also celebrates the cultural identity of Andhra Pradesh.
Named after the great Alluri Sitarama Raju, this airport represents pride in our heritage and a spirit of optimism towards our future.
@ncbn@PawanKalyan
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
An illustrious career comes to an end 🇮🇳
Thank you @ajinkyarahane88 for your immense contribution to Indian cricket and all the memories that will be cherished forever
Wishing you the very best in your next chapter
#TeamIndia | #ThankYouAjinkya
The Ramayana Trailer.
This is where the EPIC BEGINS. 🏹
Namit Malhotra’s Ramayana
Directed by Nitesh Tiwari
Starring
Ranbir Kapoor as Rama
Yash as Ravana
Sai Pallavi as Sita
Sunny Deol as Hanuman
Music by Hans Zimmer & A.R. Rahman
Globally Distributed by Sony Pictures Entertainment
India Distribution (North) by Dharma Productions
Music by T-Series
Filmed for IMAX
In Cinemas Worldwide, Diwali 2026.
Watch the trailer in Hindi - https://t.co/hqqwDKWAPV
இன்றைய தினம், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள, உலகம் போற்றும் விஞ்ஞானிகளில் ஒருவரும், மக்களின் பேரன்பைப் பெற்றிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான, பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தில், அவரது குடும்பத்தினருடன் இணைந்து நினைவஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
"கனவு காணுங்கள்; அந்தக் கனவுகள் எண்ணங்களாக மாறட்டும், எண்ணங்கள் செயல்களாக மாறட்டும்" என்ற அவரது வாழ்வியல் தத்துவம், நமது இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது. இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தன்னம்பிக்கை மற்றும் இளைஞர்களின் கனவுகளுக்காக அவர் விதைத்த விதைகள், நம் தலைமுறைகளைத் தொடர்ந்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
வளர்ந்த இந்தியா என்ற அவரது கனவை நனவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உயர்ந்த லட்சியங்களைப் பின்பற்றி, வலிமையான, தன்னிறைவு பெற்ற, உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்.