தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
”10 ரூபா எதுக்கு அதிகமா வாங்குறனு கேட்டா ஃபோனை தூக்கி ஒடைப்பாரா அவரு”.. எனக்கு இப்போ பதில் சொல்லியே ஆகணும், அதுவரைக்கும் பாட்டிலை விக்க விட மாட்டேன்”..
தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பைபாஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை செல்போன் மூலம் படம் பிடித்த மணிகண்டன் என்ற இளைஞரின் செல்போனை பறித்து உடைத்த டாஸ்மாக் விற்பனையாளர்..!
#Thanjavur | #Tasmac | #Liquor | #ViralVideo | #Polimernews
"ஒரு கார் கூட ஏறி வரக்கூடாதுனு சொல்லிட்டு இருக்கோம் இவ்வளவு பெரிய பஸ் ஏறி வரலாமா?"
ஒன்வே-ல் வந்த அரசு பேருந்தை அப்படியே திரும்பி போக வைத்த போக்குவரத்து காவலர்... வைரலாகும் செயல்
#Chennai | #GovtBus | #TrafficPolice | #PolimerNews
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
காவல் துறை வரலாற்றில் ஒரு காவல் அதிகாரி தன்னுடைய பணியின் போது தான் அணிந்திருந்த சீருடை கிழிந்ததற்க்கு வருத்தப்படமா...
கோபப்படமா...
முதன் முதலா மகிழ்ச்சியா கடந்து போன தருணம்...
அத்தனை காவல் தெய்வங்களுக்கு அவர்களது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி
மெல்போர்னில் பிரமாண்டமாக நடைபெற்ற இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. சுமார் 30,000 பேர் கலந்து கொண்டு ஆரவாரத்துடன் மோடி..மோடி..என முழக்கம்...
#Australia | #India| #PMModi | #PolimerNews
வருகின்ற 12 ஞாயிறு அன்று சிங்கத்தின் கர்ஜனை
பொள்ளாச்சியில்
மக்கள் நாயகன் திரு K.அண்ணாமலை அவர்கள் பங்கேற்க உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்ட மைதானம் முழு வீச்சில் தயாராகி வருகிறது .
@annamalai_k@balaji_utham#wetheleaders
இந்தோனேசியாவில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான பரம்பானன் கோவிலை ஹெலிகாப்டரில் பறந்தும், கோவில் வளாகம் முழுவதையும் நடந்து சென்றும் கட்டுமான சிறப்பை பார்வையிட்ட பிரதமர் மோடி... சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபாடு..!
#Indonesia | #PMMODI | #AncientTemple | #PolimerNews
116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி திருப்பதிக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தை ஈர்த்த சென்னையை சேர்ந்த மூதாட்டி நவநீதம்மா..
முதல்வரின் உத்தரவில் ராஜமரியாதையுடன் வி.வி.ஐ.பி போல் ஏழுமலையானை தரிசிக்க வைத்த கோவில் நிர்வாகம்.!
#Tirupati | #OldWoman | #Temple | #CMChandrababuNaidu | #VVIP | #Worship | #PolimerNews
”முதல்வர் விஜய்க்கு 52 வயது.. அண்ணாமலைக்கு 42 வயது தான்”.. தமிழ்நாட்டில் இளம் தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது அண்ணாமலை மட்டும் தான் - We The Leadar அமைப்பை சேர்ந்த கரு.நாகராஜன் பேட்டி
#Tenkasi | #Annamalai | #WeTheLeadar | #PolimerNews