இதை TVK தற்குறிகள் பார்க்க வேண்டாம்..
தான் கைது செய்யப்பட்ட போதும் ஒரு கட்சி கைதுக்கு அஞ்சாமல் எப்படி நிற்க வேண்டும் எனவும் ஒரு கட்சித் தலைவர் பயத்தில் ஓடுகாளி போல ஓடக்கூடாது எனவும் தெளிவாக கூறியிருப்பார்
#ReleaseNTKFunctionaries
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும்.
தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தேவையற்றது. உடனடியாக கார்த்திகாவையும், மற்ற நிர்வாகிகளையும் காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.
இந்த ரீல்ஸ் முதலமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.
கர்ப்பிணி மனைவியோடு கேரளா சென்று திரும்பிய கோவை நாம் தமிழர் கட்சியை சார்ந்த தம்பி மோகன் அவர்களை கேரளா எல்லையில் நடுவழியில் நிறுத்தி கைது செய்திருக்கிறது தறிகெட்ட தவெக அரசு. மனைவியை தனியாக விட்டு வரமுடியாது வீட்டில் விட்டு வருகிறேன் என்று எவ்வளவு கேட்டும் மறுத்து தீவிரவாதியை கைது செய்வதைப்போல் தம்பியை மட்டும் இழுத்துக்கொண்டு வருகிறது மனசாட்சியற்ற காவல்துறை..
#பாசிஸ்ட்_விஜய்
தகவல் தொழில்நுட்பப் பாசறை சிறப்பு கீவெளி அறிவிப்பு
தலைப்பு : பாசிச தவெகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி
நாள் : 20-10-2026
நேரம்: இரவு 8:00 மணி
#ReleaseNTKFunctionaries
https://t.co/gKabfLMZxN
"நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது." -மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #TVK | #Karthika | #NTK
தேர்தல் வழக்குகளில் கைது செய்ய தீவிரம் காட்டும் தவெக ஆட்சி
பாலி*யல் வழக்குகளிலும் போதை பொருள் கடத்தல் வழக்குகளிலும் உங்க சொந்த கட்சிக்காரனை கைது செய்ய தீவிரம் காட்டாதது ஏன்?
உங்க கட்சிக்கு திரள்நிதி தந்து, கூட்டத்தை காட்டுவதற்கா?
இதுல பெண் உரிமையை பாதுகாக்கும் ஆட்சியாம்? த்தூ
நாம் தமிழர் நிர்வாகி கார்த்திகா அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது.. மிக மிக மோசமான செயலாகும்..
இது ஒரு சாதாரண வழக்கு காவல் நிலையத்தில் சொந்த பிணையில் விடக்கூடிய வழக்கு..
போராடினார், சாலையை மறித்தார் இதற்கெல்லாம் கைது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது..
அக்கா கார்த்திகா கைது!
ஒரு கருத்தை கருத்தால் எதிர்க்க துப்பற்ற தற்குறி வன்ம கூட்டம்.
தவெக = திமுக தான். எந்த மாற்று மன்னாங்கட்டியும் கிடையாது. கிலோ கணக்கில் போதை பொருட்களை விற்பவனை பிடிக்க தமிழ்நாட்டு காவல்துறைக்கு முடியவில்ல😡