Einstein once wondered:
“How is it possible that mathematics, a product of human
thought that is independent of experience, fits so excellently the objects of physical reality?”
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண���டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
TN Industries Ministry isn't a small portfolio. Its basically the front door of India for investments in many sectors. Person running it can't push false narratives and words like gimmicks for likes.
TN became the strongest economy because both DMK & AIADMK maintained policy continuity and companies trusted that stability. The moment she took charge, the message should’ve been like "We'll continue what TN does best and scale it further " That gives confidence. Not AI city, green hydrogen, Space and drone AI slop and reel videos.
TN already set the bar high. Massive MoUs and projects like HD Hyundai are crucial for TN and South India. Instead of following them up and promoting TN infra strength, downplaying the state for petty politics is only going to hurt us.
பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்��ோன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
- அறிஞர் அண்ணா
after so many long nights and iterations, here it is : VILLAGES mapped to the VOTED PARTY for #tnelectionresult2026
of course. not there at 100%, its at 75% now, but it gives you more granular info.! @DMK_Updates@DMKITwing@arivalayam
https://t.co/P8zAdvT8Ef
#pdf_is_boring
“என் ஆசை எல்லாம் என் இறுதி மூச்சு உள்ளவரை பொதுச்சேவை செய்வதுதான்”
— பண்பாளர் திரு பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அவர்களின் மணிவிழா செய்தியில் இருந்து.
என் எண்ணமெல்லாம் நிறைந்திருக்கும் தந்தையே,
தங்களது நினைவை நெஞ்சில் ஏந்தும் இந்த 20ஆம் ஆண்டு நினைவு நாளில், இந்தத் தருணத்தில், மேற்காணும் தங்களது வார்த்தைகள் இன்னும் ஆழமான அர்த்தமுள்ளதாகவும், ஊக்கம் அளிப்பத���கவும் உணரச் செய்கிறது.
தங்கள் தந்தை, திராவிட இயக்கத்தின் முதன்மை முகங்களில் ஒருவரான தமிழவேள் பி. டி . ராஜன் அவர்களின் மக்கள் பணியைத் தொடர, வெற்றிகரமான வழக்கறிஞர் தொழில் வாழ்க்கையை விட்டுவிட்டு பொதுவாழ்விற்கு வந்தவர் நீங்கள்!
அறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஏற்றுத் தேர்தல் அரசியலில் பங்கேற்று, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் சுயேட்சையாக ��ெற்றி பெற்று, வெளியிலிருந்து கழகத்திற்கு உறுதுணையாக நின்றீர்கள்.
ஆனால், கழகம் கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட காலகட்டமான 1976இல் தங்களைக் கழகத்துடன் இணைத்துக் கொண்டீர்கள், அதன் பிறகு இறுதி மூச்சுவரை எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் இயக்கத்துடன், பயணித்தீர்கள்.
1996 – 2001 இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகப் பொறுப்பு வகித்த காலத்தில், மதுரைக்கு நவீன முகத்தை அளித்த பல கட்டமைப்புகளுக்க�� அடித்தளம் அமைத்தீர்கள்.
எனினும், அடுத்த தேர்தலில் தோல்வி வந்தது. ஆனால் மக்கள் மீதான நம்பிக்கையை நீங்கள் ஒருபோதும் இழக்கவில்லை. அதே உறுதியுடனும், அதே அர்ப்பணிப்புடனும் மீண்டும் மக்களிடம் பயணித்து, 2006இல் மதுரை மக்களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.
கழக அரசின் அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று வெற்றி முகத்துடன் மதுரை மண் திரும்பும் போது யாரும் எதிர்பாரா வண்ணம் எங்களை விட்டுப் ப���ரிந்தீர்கள்.
ஆனால் தங்கள் இறுதி ஊர்வலம், வெற்றி–தோல்விகளை எல்லாம் கடந்து, மக்கள் மனங்களில் தாங்கள் பெற்றிருந்த உயர்ந்த இடத்தை வரலாற்றில் பதிவு செய்தது.
தங்கள் வாழ்வே எமக்கு ஒரு பாடம், எல்லா சூழல்களிலும் வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.
பொதுச்சேவை என்பது பதவியைத் தாண்டிய பொறுப்பு என்று உணர்த்திய தங்கள் வழித்தடத்திலேயே என்றும் எமது பயணம்!
தி.மு.கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு அறிக்கை
அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகி இருக்கும் அறிக்கை, சில காலம் மறைந்திருந்த அவர்களின் குணத்தை வெளிக்காட்டியிருக்கிறது. எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான சூழலும் நெருக்கடியும் உண்டானதோ, அப்போதெல்லாம் உற்றத் தோழமையாக உடனிருந்தது திராவிட முன்னேற்ற���் கழகம். அதற்காக நாங்கள் கொடுத்த விலை அதிகம். ஆனால் அவற்றை இன்முகத்தோடு ஏற்றோம்.
குறிப்பாக, அன்னை சோனியா காந்தி அவர்கள���, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் சிறந்ததொரு நட்புணர்வையும், தனிப்பட்ட முறையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் பாசப்பிணைப்பையுமே காட்டி வந்தோம். அவரும், “நான் சகோதரர் என்று அழைக்கும் ஒரே அரசியல் தலைவர் ஸ்டாலின்தான்” என்றெல்லாம் சொல்லி வந்தார்.
இன்று அவை முறிந்துவிட்டதாக காங்கிரஸ் கூறி இருப்பதை செய்திகளில் பார்த்தபோது ஏனோ திகைப்பு ஏற்படவில்லை.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் பெரும்பான்மை இடங்களைப் பெற்று, தேர்தலைச் சந்தித்து, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து கயமையுடன் மாற்று அணிக்கு சென்றுள்ளார்கள். ஏதோ பெரிய அரசியல் ராஜதந்திர முடிவை எடுத்தது போலவும் அதற்கு கொள்கை முலாம் பூசி நியாயப்படுத்த காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. சந்தர்ப்பவாதத்துக்கு கொள்க�� முகமூடி போடும் முயற்சி பல்லிளிக்கிறது. திமுகழகம் தலைமையிலான ஆட்சி அமையும் என்று நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த பச்சைத் துரோகம்.
குறுக்கு வழியில் அதிகாரத்தை அடைய பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கட்டும். அது அவர்களது விருப்புரிமை. ஆனால் யாருக்கு ஆதரவளித்தாலும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இர���ப்பதே அரசியல் அறமாக இருக்கும்.
திரு ராகுல்காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் கட்சியே தயங்கிய நேரத்தில் 2019 தேர்தலில் சென்னையில் அவரை பிரதமர் வேட்பாளராக கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்மொழிந்த நினைவுகள் என் நெஞ்சில் பசுமையாக நிழலாடுகின்றன. இரண்டு தேர்தல்களில் திரு ராகுல்காந்தி அவர்களை முன்னிறுத்தி, அபார ��ெற்றியை ஈட்டித்தந்து நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பியது திமுக கூட்டணி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கொள்கை ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் தோளோடு தோள் நின்ற இயக்கம் திமுகழகம்.
த���ல்வி எங்களுக்கு புதிதல்ல!
துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல!
ஆனால், அவை நிரந்தரம் அல்ல என்பதும் எங்களுக்கு தெரியும்!
காலம் பதில் சொல்லும்!