நாங்குநேரி சின்னதுரை தனக்கு நேர்ந்த இழிவுகளையும் தாக்குதல்களையும்
அதனால் ஏற்பட்டுள்ள
ஆறாத வடுக்களையும்
தீராத வலிகளையும்
தனது கல்வி வேட்கையென்னும் பெருநெருப்பால் பொசுக்கியுள்ளான். இவனுக்குள் அம்பேத்கர் என்னும் தீ கங்கு கனன்று கொண்டுள்ளது.
அதன் வெளிப்பாடுதான் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவன் பெற்றுள்ள மதிப்பெண்கள்.
தொலைபேசியில்
அவனைத் தொடர்புகொண்டு வாழ்த்தினேன்.
"சென்னையில் தங்கிப் படிக்கலாம் வா " என்றேன். " நெல்லை சேவியர் கல்லூரியில் படிக்க விரும்புகிறேன் அண்ணா" என்று உடனே விடையிறுத்தான். அவனது குரலில் தெளிவும் உறுதியும் தெறித்தது.
அவனுடைய தாயாரிடமும் எனது மகிழ்வைப் பகிர்ந்துகொண்டேன்.
சாதிவெறித் தாக்குதலிலிருந்து அவனைக் காப்பாற்றிய அவனுடைய தங்கை சந்திராவிடம் நான் நலம் விசாரித்ததாகச் சொல் என்று கூறினேன்.
பி.காம் படித்து பின்னர் ஆடிட்டராக வர வேண்டும் என்கிற அவனது கனவு நனவாகட்டும்.
தம்பி சின்னதுரை, தனது
இந்த சாதனையின் மூலம் சாதியத்தைத் திருப்பித் தாக்கியுள்ளான்.
#திருப்பி_அடி
#நாங்குநேரி_சின்னதுரை
"தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவில் எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக ஆட்சி நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு, பிரபல நடிகரும், ஆந்திர மாநில அரசியல் தலைவருமான திரு. @PawanKalyan அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்!
இம்மாதம் என் சட்டமன்ற உறுப்பினருக்கான மாத ஊதியம் ரூபாய் 1,05,000 (ஒரு லட்சத்தி 5ஆயிரம் ரூபாய்) நம் தொகுதிக்குட்பட்ட சகோதரி K. ஜனனி அவர்கள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் மருத்துவப் படிப்பிற்காக இம்மாத ஊதியத்தை வழங்கினேன்..
"எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல்-மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும்" என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தெரிவித்துள்ளார்
பெண்ணுரிமை-ஒடுக்கப்பட்டோர் விடுதலை பேசும் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் @UnivofDelhi பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டிருக்கின்றன.
எழுத்துகளை அரசியல்-மதக் கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்!